அத்திப்பழம் நைவேத்தியம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயிலில் கண் பார்வைக் கோளாறுகள் மற்றும் கண் நோய்கள் நீங்க, பக்தர்கள் இத்தலத்து இறைவனுக்குச் சந்தனாதி மற்றும் ஆரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுகின்றனர்.
முருங்கை கீரை நைவேத்தியம்

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூருக்கு அருகிலுள்ள வடமதுரையில் விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைப் போக்கச் சிவபெருமான் வேடர் வடிவில் வந்து முருங்கைக் கீரையைச் சமைத்து விருந்து படைத்ததால், இத்தலத்து இறைவன் 'விருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். புராண நிகழ்வைப் போற்றும் வகையில், இன்றும் இக்கோயிலில் இறைவனுக்கு முருங்கை கீரை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கஷாய நைவேத்தியம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோயில், அருவி நீர் விழும் குளிர்ச்சியான சூழலில் அமைந்துள்ள தலம் என்பதால், சிவபெருமானுக்குக் குளிர்காய்ச்சல் அல்லது ஜுரம் ஏற்படாமல் இருக்கத் தினமும் இரவு அர்த்தசாம பூஜையின்போது சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இதனை உள்ளூர் வழக்கில் 'குடினி நைவேத்தியம்' என்றும் அழைப்பர்.

Leave a comment
Upload