வேதங்களைத் தலையணையாகக் கொண்ட பெருமாள்

திருச்சி மாவட்டம், முசிறி - தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் (வேதநாராயணபுரம்) வேதநாராயணப் பெருமாள் கோயில், ருக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் சிறப்புமிக்கத் திருத்தலமாகும்.
சொர்க்கப் பிரதட்சிணம்

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயிலில் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள மிகக் குறுகிய சுரங்கப் பாதைக்கு "புனர்ஜனனி" என்று பெயர். இந்தக் குறுகிய பாதையில் தவழ்ந்து வெளியே வந்தால் மறுபிறவி எடுத்ததற்குச் சமம், மற்றும் பிறவிப் பிணி நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மடியில் கண்ணனை ஏந்திய விநாயகர்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தரா அருகே அமைந்துள்ள மல்லியூர் ஸ்ரீ மகாகணபதி கோவிலில், விநாயகப் பெருமான் தனது மடியில் குழந்தை கண்ணனை (பாலகிருஷ்ணன்) ஏந்திய அபூர்வ 'வைஷ்ணவ கணபதி' கோலத்தில் அருள்பாலிக்கிறார். சைவமும் வைணவமும் இணையும் இந்தத் திருக்கோலத்தைக் காண்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது

Leave a comment
Upload