தொடர்கள்
கவிதை
10ம் ஆண்டில் விகடகவி - கோவை பாலா

2026102807410471.jpeg

விகடகவிக்கு வயது பத்து...

மின்னிதழ் பத்திரிகைச் சபையில்,

மின்னிடும் மகுடமேற்று மகராசனாய்,

பலர் நெஞ்சில் இன்று குடியிருக்கும்,

எவர் அந்த அரசர் எனும் கேள்விக்கு..

விகடகவி என உரைப்பார் பதிலுக்கு.!

மதன் எனும் நல்மனதின் சிந்தனை..

உடன் படும் நண்பர்கள் குழுவினை,

திறம்பட ஒன்று சேர்த்தது திறமை..!

பிறந்திடச் செய்தது புதுக் குழந்தை..!

பெயரிட விகடகவி வளர்ந்த கதை..!

விகடகவிக்கு வயது இன்று பத்தாம்..!

நற்சிந்தனையே தொழில் முதலாம்...!

நற்கருத்தே மனதில் இடும் வித்தாம்..!

படிக்கத் தந்தது எல்லாம் முத்தாம்...!

பாராட்டும் வாசகர் தான் சொத்தாம்...!

மலிவான செய்திகளைத் தந்திடாது,

உறுதியான உண்மையைத் தந்து,

"தெளிவான தடம்பதிக்கும் மின்னிதழ்!"

பத்திரிகை தர்மமெனும் அறநெறிக்கு

உத்திரவாதம் விகடகவி கொடுக்கும்.!

கதியென்று ஒருசாரார் பின்நின்று,

துதி பாடும் செயல் செய்யாது...!

விருப்பு வெறுப்பை புறம் தள்ளி,

பொறுப்பு உணர்வு உயர்வோங்க,

உள்ளதைச் சொல்லத் தயங்காது...!

தனிமனித கண்ணியம் பிறழாது

தரம் தாழ்ந்த வார்த்தைகள் வாராது..

தவறுகள் பிழைகள் இழைத்தால்,

திருத்தம் என்று உடன் கொடுத்து,

வருத்தம் தெரிவிக்கும் மாண்பு...!

அன்றாட நிகழ்வுகள் எத்தனையோ,

குன்றாத சுவையோட அத்தனையும்,

சென்றாக வேண்டும் சனி தோறும்...!

வென்றாக வேண்டும் வாசகரின்...

அன்பான மனதை ஆண்டு தோறும்...!

தொய்வின்றி உழைக்கும் குழுமம்...!

தொடரட்டும் ஆண்டுகள் இன்னும்...!

சேரட்டும் வாசகர்கள் சக்தி என்றும்...!

மாறட்டும் சமுதாயக் கண்ணோட்டம்..!

குவியட்டும் வாழ்த்துகள் வானுயரம்...!