இந்தியா முழுவதும் ராமாயணம் படம் மிக பெரிய ஹிட்.
இந்த படத்தில் சீத்தாவாக நடித்துள்ள சாய் பல்லவி மலைகளின் அரசியின் மகள்.
சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஆனே ஹாட்டி கிராமத்தில் பிறந்த படுக இன பெண்.

இவர் சீத்தாவாக நடித்தது இந்த கிராமத்திற்கு மட்டுமல்ல நீலகிரிக்கே ஒரு பெருமை என்று கூறுகிறார்கள் இந்த கிராமத்து வாசிகள்.
நீலகிரி ஆவண மையத்தின் இயக்குநர் வேணுகோபால் கூறும் போது,
" ராமாயண படத்தில் சவாலான சீத்தா காதாபாத்திரத்தில் நடித்து நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் சாய் பல்லவி.
ஆனே ஹாட்டியில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ராமர் வழிபாட்டு முறை இந்த கிராமத்தில் உருவாகி மாவட்டம் முழுவதும் உள்ள படுகர் கிராமங்களில் தொடர்ந்தது.
திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ராமர் கோயில் அண்மையில் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.
சாய் பல்லவி மண்ணின் மகள் அடிப்படையில் புத்திசாலித்தனம் திறமை கொண்டவர்.

சிறந்த நடனக்கலைஞர், தொழித்துறை மற்றும் ஒரு மருத்துவரும் கூட.
தனது சொந்த மண், சமூகம் மற்றும் குடும்பத்திடமிருந்து பெற்ற பண்புகள் மற்றும் தன் தனிப்பட்ட முயற்ச்சியால் வளர்ந்து சிறந்த நடிகையாக திகழும் இவர் சீதை காதாபாத்திரத்தில் நடித்தது தகுதியான ஒன்று என்று கூறுகிறார்.
சாய் பல்லவியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் நீலகிரி படுக சமுதாயத்தினர்.
தொடர்கள்
நெகிழ்ச்சி

Leave a comment
Upload