
அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பிராந்திய தலைநகரான சான்ஜுவானில் கடந்த 24-ம் தேதி 2026-ம் ஆண்டின் மிஸ்யுனிவர்ஸ் அழகிகளுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. பின்னர் பலகட்ட சோதனை மற்றும் கேள்விகளைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் 115 அழகிகளில், புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த 27 வயதான ஜெனிஃபர் பாரெட்டோ 2026-ம் ஆண்டின் ‘மிஸ்.யுனிவர்ஸ்’ அழகியாக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டது.
இதன்மூலம், கடந்த ஓராண்டாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கொந்தளிப்பான நிலையில் இருந்த ‘மிஸ்.யுனிவர்ஸ்’ அழகிப் போட்டி நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்துகொண்ட அல்லது குழந்தை பெற்ற போட்டியாளர்கள் மீதான சர்ச்சைக்குரிய தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் ‘மிஸ்.யுனிவர்ஸ்’ பட்டம் வென்ற முதல் திருமணமான பெண் மற்றும் முதல் தாய் என்ற பெருமையை ஜெனிஃபர் பாரெட்டோ பெற்றுள்ளார்.
முன்னதாக, இறுதி போட்டியில் பங்கேற்ற 5 அழகிகள், மிஸ்.யுனிவர்ஸ் போட்டியின் முக்கியத்துவம், அதன் தலைவர்களிடமிருந்து உலகுக்கு என்ன தேவை என்பது உள்ளிட்ட தலைப்புகளில் நடுவர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜெனிஃபர் பாரெட்டோவிடம் “செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு மத்தியில், எந்த மனித விழுமியத்தை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது” என்று நடுவர்கள் கேட்டனர். அதற்கு அவர் ஸ்பானிய மொழியில், “அதைப் பொறுப்புடன் பயன்படுத்துவதே சிறந்த வழி” என்று தெரிவித்தார்.
மேலும், “செயற்கை நுண்ணறிவு நமது விழுமியங்களை ஆபத்தில் ஆழ்த்தினால், அவை ஒருபோதும் விழுமியங்களாக இருந்ததில்லை. நாம் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே உள்ள ஒத்திசைவில்தான் விழுமியங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, அவற்றைக் கடைப்பிடிப்பது கடினமாகும்போது இது மிகவும் முக்கியம்” என்று மிஸ்.யுனிவர்ஸ் அழகி ஜெனிஃபர் பாரெட்டோ குறிப்பிட்டார்.
இந்திய மி.யுனிவர்ஸ் அழகியாக கேரள பெண் தேர்வு!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, 2026-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ’மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி நடைபெற்றது. இதில், கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயதான சட்டக் கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ, இந்தியாவின் ‘மிஸ்.யுனிவர்ஸ்’ அழகியாக வெற்றி பெற்றார். இந்தியா சார்பில் இவர், அமெரிக்காவில் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் 2026-ம் ஆண்டுக்கான ‘பிரபஞ்ச’ அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதல் கேரள அழகி என்ற சாதனையையும் படைத்துள்ளார். அபுதாபியில் கடந்த 2007-ம் ஆண்டு பிறந்த கஸியா லிஸ் மெஜோ, கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். மேலும் இவர் விளம்பர மாடல், கிளாசிக்கல் நடனக் கலைஞர். இவர் கடந்த 2024-ம் ஆண்டுக்கான ‘மிஸ்.டீப் டிவா’ பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி போட்டியில் பங்கேற்கும் 5 அழகிகளின் தொடர்பு திறன், நம்பிக்கை, அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் அடிப்படையில் 2926-ம் ஆண்டின் ‘பிரபஞ்ச அழகி’ தேர்வு செய்யப்படுவர். இதில் வெற்றி பெறுவோருக்கு புதிய வைர கிரீடம், பணம், மற்றும் ஓராண்டுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். மேலும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் உலகளாவிய தூதராகவும் செயல்படுவர் என்கின்றனர் போட்டி நடுவர்கள்.

Leave a comment
Upload