தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20201124094009548.jpeg


“அஃறினைத் தோழன்” - வெ. சுப்பிரமணியன்

அஃறிணைகளில் எனக்கு மிகவும் பிடித்தது யானை. அதனை எங்கு பார்த்தாலும் மனதோடு ஒரு இன்பம் தொற்றிக் கொள்ளும். கேசவனுக்காக பலமுறை படித்தேன் அஃறினை தோழனை... எதிர்பாராத க்ளைமாக்ஸ்.. ஸாரி ஃபார் யுவர் லாஸ் கேசவ்வ்...

புவுனா


உலகம் சுற்றும் விகடகவி இந்த வாரம். "கூவத்தில் முதலை" ராம்.

உலகம் சுற்றும் விகடகவியின் அனைத்து நாட்டு செய்திகளும் பன், பட்டர், ஜாம் போல் சுவையாக இருந்தது. அதென்ன... கூவத்துல படகு வீட்டில் அமர்ந்து படம் பார்க்கணுமா? அதெல்லாம் நடக்கிற கதையா? ஏற்கனவே கூவம் முகத்துவாரத்தில் ஆண்டுதோறும் பலகோடி செலவில் தூர்வாரும் பணி நீள்கிறது. இதுல இது வேறயா?

ராகுல், பவித்ரா, விக்னேஷ், வடபழனி


உலகம் சுற்றும் விகடகவி இந்த வாரம். "கூவத்தில் முதலை" ராம்.

Details about underwater tunnel construction are very interesting to read. Immersed tube technology vs digging under the ocean. Stargazing from the phone using the AR app is new information for me. These articles are very useful.

வாரா, நேபர்வில்லே


உலகம் சுற்றும் விகடகவி இந்த வாரம். "கூவத்தில் முதலை" ராம்.

யானையை காப்பாற்றிய செய்தி அருமை.!

அனு ஃபாசில், ஹாங்காங்


மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

வேட்டியை வைத்தே கோயிலிலும் நட்சத்திர ஓட்டலிலும் களேபரங்கள் ஏற்படுத்திவிட்டீர். குசும்புக்கார ஆளய்யா நீர்! உங்க கலாய்ப்புக்கு சப்போர்ட் வேற... தூள் கிளப்பிட்டீங்க! உங்க வேட்டி அவுந்துடுமோனு இன்னும் மனைவி கண்காணிக்கிறாங்க பாரு... அதான் உங்க வெற்றி சீக்ரெட்!

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


கமல் வெளியிடப் போகும் ஊழல் பட்டியல்! - ரமேஷ்பாபு

ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசனின் வரவேற்கிறோம். அதே சமயம், அவர் செந்தமிழிலோ, கவிதை நடையிலோ பேசுவது பாமர மக்களுக்கு புரியலேப்பா... இதே மாதிரி அவர் தொடர்ந்து பேசினா, நல்ல திட்டங்களை வைத்திருந்தாலும், ஒரு ஓட்டுகூட விழாது. மக்களுக்கு புரியும்படி பேச சொல்லுங்க. இல்லே, எல்லாமே விழலுக்கு இறைச்ச நீராயிடும்!

ஆளவந்தான், சங்கர், பருத்திப்பட்டு


விடை கொடு ஆண்டே 2020... - கே.ராஜலட்சுமி.

விடை கொடு 2020 - நிகழ்கால கொரோனா பாதிப்புகள் மூலம் மனிதர்களின் உறவுகளை, வலிகளை உணரவைத்த மிக ஆழமான தத்துவ கவிதை. 2020-ம் ஆண்டில் நிகழ்ந்தவற்றை மனதில் நிறுத்தி, வரும் ஆண்டுகளில் செயல்படுவோம்.

சம்பத், தீபா, கொரட்டூர்


தானத் தயாளனே... - சி. கோவேந்த ராஜா

விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனின் நினைவு தினத்தை போற்றும் வகையில், தங்களது கவிதை வரிகள் மிக அருமை.

ஜமுனா பிரபாகரன், திருவள்ளூர்


பித்ரு தோஷம் நீக்கும் நென்மேலி ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர் திருக்கோயில்... - ஆரூர் சுந்தரசேகர்.

நாங்கள் பல ஆண்டுகளாக திதி தர்ப்பணம் செய்வதில் பல்வேறு தடங்கல் ஏற்பட்டது. இதனால் எனது பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்குமோ என அஞ்சினேன். சரியான நேரத்தில் வழிகாட்டினீர்கள். அடுத்த வாரம் இப்பணியை முடிப்பேன். நன்றி.

வெங்கட்ராமன், பூந்தமல்லி


"பாரம்பரிய இரவு திருப்பலி இல்லாத கிறிஸ்துமஸ்..” - ஸ்வேதா அப்புதாஸ்

இந்த ஆண்டு அனைத்து மத பண்டிகைகளும் முடங்கியதை போல், நமது கிறிஸ்துமஸ் திருப்பலிகள் முடங்கியது வேதனைக்குரிய விஷயம். எனினும், அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக கொண்டாட உறுதியேற்று வாழ்த்துவோம்.

கார்த்திகா ஜோசப், வேளாங்கண்ணி


அண்ணாமலையார் பாதங்களுக்கு மலர் பூஜை... - மகேஸ்வரி

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை பார்க்க முடியாத ஏக்கத்தை, அவரது பாதத்தை மலர் அலங்காரத்தில் காட்டி, எங்களை போன்றவர்களை மகிழ வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி.

ஷர்மிளா சகாயம், செஞ்சி


ரத்த சம்பந்தம்... – பா.அய்யாசாமி

ரத்த சம்பந்தம் - எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சிறுகதை. அய்யாசாமி, நீர் எங்கியோ போயிட்டீர் ஓய். மிகச் சிறப்பு!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


‘அனுமன் ஒலிவியா’ எனும் பறவை... - வினோதினி

அனுமன் ஒலிவியா பறவை பார்க்க நன்னாயிருக்கு. இது, இலங்கை பறவை சொல்றீங்க. சம்மர் வெகேஷனுக்கு எல்லைமீறி தமிழகத்துக்கு வரும்ல..?!

பாக்கியம் ராமசாமி, கும்பகோணம்


2 ஆண்டுகளில் டோல்கேட் வசூல் ஜிபிஎஸ் முறைக்கு மாற்றம்... - மாலாஸ்ரீ

இரண்டு ஆண்டுகளில் டோல்கேட் வசூல் ரத்துனு நெனைச்சோம். ஆனா, ஜிபிஎஸ் மூலமா, நாம எவ்ளோ தூரம் போறோமோ, அதுக்கான சாலை வரிப் பணத்தை பாங்க் அக்கவுண்ட்ல எடுத்துருவாங்களா? எந்த ரோடுமே நல்லாயில்லே... கொடுமை!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


“அஃறினைத் தோழன்” - வெ. சுப்பிரமணியன்

நிஜக் காதலர்களுக்கு வரும் எதிர்ப்பை போல் கதையை உருவகித்து, பின்னர் காதலியும் வில்லனும் இறந்ததை காட்டி, கடைசியில் அஃறிணை தோழர்களாக காட்டிய விதம் மிக மிக அருமை. சுப்பிரமணியனா... கொக்கா? கலக்கிட்டீங்க!

கௌஷிக், சூர்யா, சங்கர், மாதவரம்


டெர்ரகோட்டா பெண்கள்... - மாலாஶ்ரீ

டெர்ரகோட்டா கலையில் ஈடுபட்டு வரும் சுய உதவி குழு பெண்கள் மற்றும் குழந்தைகள், பெற்றோர்களின் புரிதலை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தி கொண்டிருக்கும் முப்பெரும் தேவியரின் சமூக எண்ணங்கள் பாராட்டுக்கு உரியது.

ரேணுகா ஹரிஹரன், சாலிகிராமம்


வாவ் வாட்ஸப்!

கிறிஸ்துமஸ் தொடர்பான அனைத்து வாட்ஸ் அப் படங்களும் செம சூப்பர்! அதுவும் வாண்டுகளின் அட்டகாசம் கலக்கல்.

தீட்சிதா, அனுஷ்கா, அட்சயா, சென்னை


அன்பென்னும் மழையிலே... - மரியா சிவானந்தம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்து நீங்கள் கூறிய தகவல்கள், எனக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்தியது. இன்று கொரோனாவால் கொண்டாட்டம் மறைந்தாலும் என்றென்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை நீடித்திருக்கும்.

ரோஸ்லின் மேரி, பல்லாவரம்


சேனல் டாக்! - 06 - மெகா மாலினி

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான மர்மங்கள், கன்னித்தீவை கண்டுபிடிக்க செல்லும் சிந்துபாத் கதை முடிவடையாமல் நீள்வதை போல், இதன் மர்மமும் நீடிக்கிறதே! கிசுகிசுவில் சொன்ன சேனல் யார் என தலை கிறுகிறுக்கிறது.

ரோகிணி சுப்பையா, நெசப்பாக்கம்


தடுப்பூசி தந்திரங்கள்! - ராம்.

கொரோனா வைரஸுக்கு எதிராக எம்.ஆர்.என்.ஏ தடுப்பு ஊசி கட்டுரை மிக அருமை! இவ்வளவு விரிவாக எடுத்து கூறிய ராம் பாராட்டுக்கு உரியவர். வெல்டன்!

ரகுநாதன், வேளச்சேரி


களையிழந்த மார்கழி...! - மாயவரத்தான்

மாயவரத்தான் கூறியது போல், உண்மையிலேயே இது களையிழந்த மார்கழிதான்! டிசம்பர் கச்சேரிதான் இல்லையே... சரி, மயிலாப்பூர் ல எந்தவொரு வீட்டுவாசல்லகூட கோலத்தையும் காணோம்! எல்லாத்தையும் கொரோனா தலைகீழா மாத்திடுச்சு... எல்லாமே 'TOLET'தான்!

கோமதி சீனிவாசன், பெருங்குடி


மன்னி!! - ராம்.

சகுந்தலா மன்னியை பற்றி ராமின் கட்டுரை எங்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இத்தகைய அன்பு உள்ளங்கள் நம்முடன் இருப்பதே மிகப்பெரிய பலம். அவரது மறைவுக்கு விகடகவி வாசகர்கள் சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

வித்யாசாகர், ஜெயலட்சுமி, மடிப்பாக்கம்


வந்தார்கள்... வென்றார்கள்... - 18 - மதன்

பாபரின் வீர,தீர பராக்கிரமங்களை படித்து வாய் பிளக்கையில்... அடுத்த அதிர்ச்சி, எட்டு மனைவினு படித்து ஆடி போயிட்டோம். இப்ப, ஒரு மனைவியை சமாளிக்கறதே பெரும்பாடா இருக்கு! ஹும்... அதான், எட்டாவதா துப்பாக்கி வெச்சுக்கிட்டார் போலிருக்கே!

மகேந்திரன், மகேஷ், வந்தவாசி


உணவே மருந்து... - 10 - மீனாசேகர்

வெந்தய கீரையினால் ஏற்படும் மருத்துவ குணங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டன. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு வித கீரைகளின் மகத்துவத்தை விளக்குவதில் சுந்தரசேகர், உண்மையிலேயே இயற்கை மருத்துவராக திகழ்கிறார்.

பாமினி சுந்தரேசன், லால்குடி


ராக தேவதைகள்... - 18 - மாயவரத்தான் சந்திரசேகரன்

ராக தேவதைகள் தொடரில் கௌரி மனோகரி குறித்து தகவல்களும் காரணகர்த்தா, பின்னணி பாடகர், பாடகிகளின் குரல் இனிமை... பேஷ், பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு! கிசுகிசு என்னாச்சு?

பார்த்தசாரதி, திருத்தணி


காணாமல் போன நாத்திகம்..! ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

திராவிட கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் அனைத்துமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வகையிலேயே அமைந்துள்ளது. அவர்கள் ஊருக்கு நாத்திக உபதேசம் செய்துவிட்டு, தங்கள் வீடுகளில் கடவுளை, சாமியார், ஜோசியர்களிடம் கொட்டி கொடுப்பர். எக்காலத்திலும் நம்பவே கூடாது.

கமலாகரன், வாசுதேவன், திருவாரூர்


வலையங்கம்

ஆயிரம் பேர் அடித்து சொன்னாலும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் - அதிலும் , ஊரை அடித்து தனது வீட்டு உலையில் போடும், ஊரே மாசு காற்றினால் அழிந்தே போனாலும் கோடிகளில் புரளும் இதுபோன்ற அதிகாரிகளை அரபிய நாடுகளை போல் தினமும் 500 சவுக்கடி தண்டனை கொடுக்க வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும்போது விசாரணை எதற்கு?

அபிநந்தன், பொள்ளாச்சி


“அஃறினைத் தோழன்” - வெ. சுப்பிரமணியன்

அஃறிணைத் தோழனையும், தோழியையும், வில்லனையும் கதையில் உலவவிட்டு, கடைசிவரை, இனம் கண்டுகொள்ள முடியாமல் செய்த, கதாசிரியருக்கு பாராட்டு. யார் கண்டார்கள்? விலங்குகளிடையே இப்படி எண்ணப் பகிரல், இருக்கலாம். கேள்விப்பட்டிருக்கிறோம்; யானை, நாய், பசு போன்ற விலங்குகள் மனித மொழிகளை புரியும் திறன் படைத்தவையென்று. கேசவ்-லச்சு-பைரவ் உரையாடல்களும், உண்மையோ என்னவோ? அந்த சிவனுக்கே வெளிச்சம். நல்ல கற்பனைக் கதை.

கண்ணன்


விகடகவி குழு

இந்துக்கடவுளுக்கு செருப்பு மாலை போட்ட கும்பலின் வழித்தோன்றல்களுக்கு ஆன்மீக வேஷம் போட்ட விகடகவிக்கு பாராட்டு. இந்த கண்கொள்ளா காட்சியியை, பெரியாரும் கலைஞரும் போட்டோவிலிருந்தாவது பார்த்து ரசித்திருக்கலாம். "வாழ்க நாத்திகம்!!! வளர்க ஆத்திகத்தை வளர்க்கும் அதன் தொண்டு".

கண்ணன்


விடை கொடு ஆண்டே 2020... - கே.ராஜலட்சுமி.

அருமை அருமை.. நயம்படச் சொல்லி நல்வழி கொடுத்து , தடை இனியில்லை போதும் நீ போவென்று விடை கொடுத்து அனுப்பி வைத்தீர்...! வாழ்த்துக்கள்...!!

பாலகிருஷ்ணன்


பித்ரு தோஷம் நீக்கும் நென்மேலி ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர் திருக்கோயில்... - ஆரூர் சுந்தரசேகர்.

நன்றி பல. இந்த கோவில் விலாசம், மற்றும் இமெயில் ஜடி. email id(இருந்தால்)தயவு செய்து கொடுக்கவும்.

எஸ். பார்கவன், அமெரிக்கா


மன்னி!! - ராம்.

ஒரு நல்ல உள்ளம் இறைவனடி சேர்ந்து விட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைவதாக!

எஸ். பார்கவன், அமெரிக்கா


அன்பென்னும் மழையிலே... - மரியா சிவானந்தம்

அருமை பழைய நினைவுகள் நினைத்தால் பரவசமானலும் மனசு பாரமாகிவிடுகிறது ஏழ்மையில் கற்பனையில் வாழ்வோம் சந்தோசமாக இருந்தது வசதி வந்த பிறகு எல்லாம் வாசலருகில் இருந்தாலும் வறுமையில் இருப்பது போல் தோன்றுகிறது அந்தக்காலத்தில் greeting அனுப்ப 100 ரூபாய் செலவாகும் கஷ்டத்திலும் தவறமாட்டோம் இப்போது msg free out going free என்றாலும் பலறை தவற விட்டு மறுநாள் தலை சொறிகிறோம் . ஏனென்றால் greeting late ஆனாலும் கிடைத்தவருக்கு அவ்வளவு சந்தோசம் இதெல்லாம் சொன்னால் புரியாது ........

தயாநிதி, வேலூர்