தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

20210008161726736.jpeg

இந்த வாரம் மக்கள் பேட்டி “திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுக்கு அனுமதி சரியா..?

ச.மணிகண்டன், திருவள்ளுவர்.

ஆக தியேட்டரில் ரசிகர்கள் படத்தை பார்க்க.., ரசிகர்களை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பார்ப்பார்கள்!😝😝


B.சத்யா, மதுரை.

தமிழகத்தில் இன்னும் பள்ளிகளே இன்னும் திறக்காமல், குழந்தைகள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், நீங்கள் சினிமா பார்ப்பதற்கு 100% சதவீதம் இருக்கைக்கு அனுமதி தருகிறீர்கள். இதில் எது அத்தியாவசியம் எது பொழுதுபோக்குனு அரசாங்கத்துக்கு தெரியலயா என்ன? உங்களுக்கு என்ன பணம் தான் வாழ்க்கை, எவன் எப்படி போன என்ன..???!! 😠😡


G.கமலக்கண்ணன், விழுப்புரம்.

இந்த அரசு எப்படி திரைத்துறையினரின் கஷ்டத்தை போக்க இது போல் உதவுதோ, அதே தாயுள்ளத்துடன் லாக் டவுனால் வருமானம் இன்றி தவிக்கும் எங்களை போன்ற திரைப்பட ரசிகர்களுக்கு அதாவது திரைப்பட பார்வையாளர்களுக்கு திரையரங்கு கட்டணத்திற்கு தமிழக அரசு நிதி கொடுத்து உதவ வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்😛😛


C.பிரகாஷ், சென்னை.

பொங்கல் பரிசு கொடுத்தால் மக்கள் ஓட்டு விழும், 100 சதவீத இருக்கைகள் கொடுத்தால் விஜய் ரசிகர்கள் ஓட்டு விழும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.😔


வரதன், ராயபுரம்.

சினிமா பாக்க போறவங்களுக்கு கொரோனா வந்தால் அரசு நஷ்டஈடு கொடுப்பார்களா? இல்ல தியேட்டர்காரங்க கொடுப்பார்களா? வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை கொடுப்பார்களா? ஒரு வீடு கொடுப்பார்களா?🤔🤔


T.சூர்யா, குரோம்பேட்டை.

தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு இலவசமாக இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம், 1.சைனா கொரோனா, 2. இங்கிலாந்து கொரோனா. 😑😑


V.முருகேசன், கோயம்புத்தூர்.

இப்ப தியேட்டரை தொறந்து விட்டு, பொங்கல் கொண்டாட தடைபோடுவான் பாரு ..🤪🤪


C.ஷண்முகம், உள்ளகரம்.

நீங்களே கொரானா வருது என்கிறீர்கள்,

மறுபடியும் உருமாறும் கொரோனா என்கிறீர்கள்.

அப்பறம் UK AMERICA என்கிறீர்கள்.

தற்போது தியேட்டர் அனைவருக்கும் திறப்பு என்கிறீர்கள் .☹️☹️


ராம், ஹாங்காங்.

ப்ரார்த்தனா தியேட்டர் மாதிரி திறந்தவெளி அரங்கம் இருந்தா ஓகே.. மூடிய அரங்கம் ஆபத்து.


வ.நடராஜன், திருச்சி.

தடுப்பூசி இன்னும் போட ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இத்தனை கூத்து. 8 கோடி மக்களின் நலம் vs 50,000 ரசிகர்களின் கதாநாயகன் வழிபாடு.. நடத்துங்க.. 🙄😟


H.கார்த்திக், சைதாப்பேட்டை.

ஒரே ஒரு நியூ இயர் கொண்டாட்டத்தை அனுமதிச்சான் ஐடிசி க்ராண்ட் சோழாவுல... இரண்டே நாள்ல அங்க வேலை பாத்த 125 பேர் கொரோனா. ஹோட்டலையும் சீல் வச்சிட்டாங்க.. இப்ப அடுத்து தியேட்டர்.. என்ன நடக்க போகுதோ?!!!!😱😱


ஆர்.கிஷோர், ஊரப்பாக்கம்.

100% அனுமதி தவறு. இது நோய் பரவலை தீவிரப்படுத்தும். 60%க்கு மேல் அனுமதித்திருக்க கூடாது. அதற்கு பதில் 50% சதவீதமாக 5 - 6 காட்சிகளை அனுமதித்து, சமூக இடைவெளியை தியேட்டருக்குள்ளும் வெளியேயும் கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். தியேட்டர், சினிமா வியாபாரிகளுக்காக தேர்தல் நேர சலுகை கொடுத்து மக்களை பலி கொடுக்க வேண்டாம் .😳😳


விஜய் ராஜ், கடலூர்.

எங்க தளபதிக்காக நாங்க கொரோனா வந்து சாகவும் தயார்டா..🔥🔥😍


அண்ணாதுரை, ராயப்பேட்டை.

நம்ம இந்தியாவோட, எதிரி நாடுகள் போர் செய்ய அவசியமே இல்ல!இங்க அல்லாருமே தற்கொலை படைங்க தான்! கடைசி ஆசையா, ஒரு சினிமா காட்டினாபோதும்! தானா போய் தியேட்டர்ல வெடிச்சு செத்து மத்தவனையும் சாவடிப்பானுங்க..😁😁


மல்லிகா ஜெயராமன், வில்லிவாக்கம்.

பள்ளிகூடமெல்லாம் தொறக்க 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களோட பெத்தவங்க கிட்ட ஜனவரி 8ஆம் தேதிவரை கருத்து கேக்க போவுதாம் நம்ம தமிழக அரசு.

டாஸ்மாக் தொறந்தப்ப பொண்டாட்டிகளை கேட்டீங்களா..? இல்ல தியேட்டர்ல 100% உட்கார விஜய் ரசிகர்களோட பெத்தவங்கள கேட்டீங்களா..? ஏற்கனவே வீட்ல இருந்த மிக்ஸி, டிவி‌ எல்லாம் போட்டு உடைச்சானுங்க😡. இப்ப கொரோனாவோட வந்து எங்களையும் தொத்த வைக்க போறானுங்க. எங்க வூட்டுக்காரருக்கு வேற கொழுப்பு சக்கரை வியாதின்னு இருக்கு. 😓


அகமது யூசுஃப், கேளம்பாக்கம்.

இதை எதிர்க்கிறவங்ககிட்ட என்னோட ஒரே கேள்வி இதுதான்... “ஏன்டா டாஸ்மாக் பல மாசமா தொறந்து கெடக்கு.. அதைக் கேட்க வக்கில்ல இப்ப தியேட்டர் ஆரம்பிச்சதுக்கு மட்டும் வந்து, குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க.. தியேட்டரும் ஒரு தொழில்தான் மூடிட்டு போங்கடா... திடீர் நல்லவங்களா...!!”😡😡


ராம்குமார், போரூர்.

சினிமா, டாஸ்மாக் எல்லாம் 100% அனுமதி. எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏன்னா, இவற்றால் அரசுக்கு வருமானம் வரு‌கிறது. திருமணம், இறப்பு இவற்றுக்கு கொரோனா கட்டுபாடு. ஏன்னா இவற்றால் அரசுக்கு வருமானம் இல்லை. ஆக மொத்தம் மக்கள் பிரச்னை முக்கியம் கிடையாது. வருமானம் மட்டுமே கவனம்.😭😭


T.மகேந்திரன், திருச்சி.

ஆக மக்களுக்கு கொரானா..!

நடிகர்க்கு காசு ரசிகர் தரானா..! அரசு கமிஷன் பெற்றானா .. !!🙃🙃


சி.கண்ணன், ஆதம்பாக்கம்.

இவனுவ படத்துக்கு போறவன் சும்மாவே ரத்தம் கக்கி சாவான். இதுல கொரோனா வேற..🥴🥴


“வெறித்தனம்” வினோத்விஜய், மாயவரம்.

ஒரு நடிகனை கண்டு ஆளும் அரசே அஞ்சுகிறது. விஜய் அண்ணா மாஸ் 🔥🔥. என் பேர் முன்னாடி மறக்காம “வெறித்தனம்”ன்னு போட்டுருங்க.. உடல் மண்ணுக்கு உயிர் தளபதிக்கு.. 🤩🤩


நா.மூர்த்தி, வண்டலூர்.

எடப்பாடிக்கு “டெட்பாடி”ன்னாலே அவ்வளவு சந்தோசம்.😁😁


வெங்கடேசன், போரூர்.

நம்மூர்ல சினிமா பைத்தியம் அதிகம்ங்க, வெட்டி பசங்க. எதிர் காலம்ன்னா என்னன்னே தெரியாத சினிமா அடிமைகள்..😡😡


இளங்கோ, துறையூர்.

சாவுறதுனு உறுதி ஆயிடிச்சி. எப்படிசெத்தா என்ன??? டாஸ்மாக் பார்ல செத்தா என்ன?? தியேட்டர்ல செத்தா என்ன??? பேருந்து பயணத்தில் செத்தா என்ன??? திரைத்துறைக்கு வேண்டியது வருமானம்.. அரசுக்கு வேண்டியது கமிஷன் அவ்வளவுதான்!!????😓


சம்பந்தம், சிதம்பரம்.

அப்பாடா..! மடையர்கள் எல்லாரும் மொத்தமா க்ளோஸ். ஒரே கல்லுல பல மாங்காய்ஸ்...😁😁


கிரி, தேனாம்பேட்டை.

பஸ்ல கூட்டத்தோட கூட்டமா போவையில வராத கொரோனா.., ஒயின் ஷாப் பார்ல கூட்டமா உட்கார்ந்து குடிக்கையில வராத கொரோனா..., ரேஷன் கடைல கூட்டமா நின்னு பொங்கல் பரிசு வாங்கையில வராத கொரோனா... தியேட்டரில 100 சதவீத இருக்கைகளுடன் மாஸ்டர் படம் பார்த்தா மட்டும் வந்திருமோ..!!??


ம.கார்த்திகேயன், திருவாரூர்.

Lockdownல ஒருத்தர் வராத போதும் அவ்வளவு கூட்டத்திலயும் SPB இறுதி சடங்குல கலந்துக்கிட்ட ஒரே நடிகர் Actor Vijay.. அவரையா இப்படி குத்தம் சொல்றீங்க..??!!


வ.முத்துராஜ், பாண்டிச்சேரி.

இன்று ஜிப்மர் மருத்தவரே, விஜயக்கும், அரசுக்கும் இது விபரீதம் என கடிதம் அனுப்பியுள்ளாராம்.

மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து...

அரசு, வருவாய்த்துறை அமைச்சரிடம் இது தெடர்பாக ஆலோசனையாம்.. நல்ல முடிவா அரசு எடுக்கட்டும்.


H.அம்மையப்பன், வளசரவாக்கம்.

ஃப்ளைட்ல வந்து இறங்கியவர்களை கண்டுபிடிக்க யோக்கியதை இல்ல. நாளைக்கு இந்த தியேட்டர்ல படம் பார்த்தவன் ஒருத்தனுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தா, மத்த கூட்டத்தை எங்க போய் தேடுவாங்க? அரசு கொடுக்குற இலவச கொரோனா சிகிச்சை வேண்டாம்ன்னு எழுதி வாங்கிட்டு ஒவ்வொருத்தனையும் தியேட்டர்க்குள்ள அனுமதிங்க..