தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

இந்த வார மக்கள் பேட்டி... சசிகலா விடுதலை குறித்து மற்றும் அவர் மீண்டும் அரசியலுக்கு வரலாமா??

20210021175258716.jpeg


R .சிபி, வண்ணாரப்பேட்டை.

காலத்துக்கு பேசும் சக்தி கிடையாது. ஆனா, பாருங்க... காலம் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லுது. இப்ப சின்னம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். எங்க புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா ஆஸ்பத்திரியில் பட்ட பாடெல்லாம் ஞாபகம் வருது.


M. கலைப்பிரியன், ஊரப்பாக்கம்.

அதிமுகவில் அண்ணன் - தம்பி பிரச்னைகளை பேசி தீர்க்கலாம்ன்னு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்காராம்.
நீங்க அண்ணன் - தம்பி பிரச்சனை பேசுங்க... ரொம்ப நாள் கழிச்சி உங்க சின்னம்மா ஊர்ல இருந்து வராங்க. அத முதல்ல பாருங்க..


L. சிவக்குமார், மதுரை.

முதல்வர் ஐயா!! கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். கதை வேறு மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. பல சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உங்களை தனிமையாக்க சில திட்டங்கள் நடைபெறுகின்றன. எச்சரிக்கை தேவை. கவனம் தேவை.


C. நந்தன், வியாசர்பாடி.

எங்களுக்கு நினைக்க எவ்வளவோ உள்ளன.. சசிகலா விடுதலை குறித்து நினைக்க நேரமில்லை என கமல்ஹாசன் சொல்வது போல் உண்மையில் எங்களுக்கும் இந்த விஷயத்தில் அக்கறை இல்லீங்க.


மதிவாணன், கொருக்குப்பேட்டை.

அம்மாவே போய்ட்டாங்க.. இனி சின்னம்மா பத்தி எதுக்கு நினைக்கனும்??!!


S. ராஜன், நந்தனம் - சென்னை.

பழசை எப்பவும் மறக்க கூடாது. சின்னம்மா... சின்னம்மா என்று அனைவருமே அந்த நேரத்திற்கு ஏற்ப அவரை வைத்து தங்கள் பதவியை வாழ்வு வசதியை பெருக்கி கொண்டார்கள். இப்போது அவர் தேவை இல்லை. அதனால் அவர் வந்தாலும், எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று தைரியமாகச் சொல்கிறார்கள். ஆனால், உங்களையெல்லாம் நம்ப முடியாது. வந்தவுடன் அவர் காலில் விழுந்து, பதவிகளை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.


K.மித்ரன், செங்கல்பட்டு.

சசிகலா விடுதலைக்குப்பின் பாருங்கள்...
“நாங்கள் ஒரே குடும்பம்.. அண்ணன் - தம்பிகள், அடித்துக்கொள்வோம், சேர்ந்து கொள்வோம்...” போன்ற வசனங்களை நிறைய பேர் சொல்வார்கள்.


S. மாணிக்கவாசகன், சீர்காழி.

ஹீஹீஹீ.. சசிகலா விடுதலையான‌‌ செய்தி வந்ததிலிருந்து நம்ம தமிழக அரசியல்வாதிகள் பேசும் வசனங்களை கேட்கும் போது எனக்கு ஒரு வாசகம் தான் ஞாபகம் வருது

“பயம் உள்ளவன் சொல்லும் வார்த்தை, நான் பயந்தாங்கொள்ளி இல்லையே..! நான் பயப்படலையே..!”


R. மனோகர், திருச்சி.

சசி, அம்மா வீட்டு வேலையாள். அம்மா இருக்கும் போது அரசியலில் சசி தலையீடு இருந்தது. அதனால் எல்லா அமைச்சர்களும் சசிக்கு பயந்தார்கள். இப்போ அம்மா இல்லாத நிலையில் யாராவது திருப்பி சேர்ப்பாங்களா.?


D. பால்ராஜ், சென்னை.

சசிகலாவிடம் ஜெயா டிவி, தினகரன், கோடிக்கணக்கான பணம் மட்டுமே உள்ளது. சசிகலாவிற்கு ஐந்து ஓட்டுக்கள் கூட விழாது. குருமூர்த்திகளை நம்பினால் இருக்கிறவைகளையும் சசி இழக்க நேரிடும்.


ம. செல்வநாயகம், தஞ்சை.

அஇஅதிமுக என்ற கங்கையில் உலவும் சாக்கடை ஜீவன்களை அகற்றி சுத்தம் செய்து தூயநதியாக மாற்ற சீக்கிரம் வருகிறார் எங்கள் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்!


ஷ.வேலு, தாம்பரம்.

பாஜக குருமூர்த்தி மூலம் ரஜினிக்கு வேலை பார்க்க வச்சுது. ஆனா பருப்பு வேகல. இப்ப சசிகலாவுக்கு தூது விடுறாங்க. இந்த வலையில எல்லாம் அந்தம்மா சிக்க மாட்டாங்க.


P. சிவமூர்த்தி, விழுப்புரம்.

ஏங்க..!! குருமூர்த்தி ஒரு பத்திரிகையாளர்.. ஆனா அரசியல் பேசுறேன்னு இஷ்டத்துக்கு பேசுனா தமிழ்நாட்டுல எல்லாரும் பாத்துட்டு சும்மா இருப்பாங்கன்னு அவர் நினைச்சா.. அது தப்பு . சசிகலா ஒரு தமிழ் பெண்மணி. சாக்கடை நீர் என்று தூற்றுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு காலத்தில் சசி, அம்மாவின் உயிர்த்தோழியாக இருந்தார் என்பதை மறந்து விடாதீர்கள்.


R. அரவிந்தன், சீர்காழி.

சசிகலா விடுதலை ஆகி வருகிறார். அவர் வந்த பின்னர் அரசியல் செய்வாரா இல்லை ஒதுங்கி போவாரா என்ற அவரது நிலைப்பாடு என்னன்னு தெரியாம எதுக்கு சவுண்டு விடுறீங்க? அதற்குள்ளாகவே அதிமுகவினர் இத்தனை வார்த்தைகளை வீசுகிறீர்கள்..? நீங்களெல்லாம் அந்தம்மாவிடம் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை நாடறியும்.. அதனால ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க.

“ஜெ”யின் தோழி என்பதை மனதில் வைத்து துளி மரியாதை தாருங்கள்..


S. கிருஷ்ணமூர்த்தி, ஒரத்தநாடு, தஞ்சை.

சசிகலா அரசியலுக்கு வராங்க... இல்ல வரல.. அது அடுத்த விஷயம்.. இப்ப குருமூர்த்தி பேசின பேச்சுக்கு என்ன செய்ய போகிறார் TTV தினகரன்?? ரத்தம் கொதிக்கிறது. எங்கள் தஞ்சை தரணியின் பெண்களை, சொந்த வீட்டு பெண்களை கேவலப்படுத்த எப்படி அனுமதித்தீர்கள் தினகரன்..?


B. வைரவன், திருவண்ணாமலை.

அது என்னடா சாக்கடை ஜலம்.??? திருந்துங்கடா....!! நீா், தண்ணீா்ன்னு சொல்லி பழகுங்க... இளநீர், பதநீர் இதையெல்லாம் இளஜலம், பதஜலம்ன்னு சொல்வீங்களா..? தமிழக அரசியலை பேசும் போது தமிழ்ல பேசுங்க. அப்புறம் சசிகலாவை பத்தியா கேட்டீங்க..!?! அவங்க முதல்ல விடுதலை ஆகி வெளியில் வரட்டும். என்ன முடிவு பண்ணி இருக்காங்க என மக்களிடம் சொல்லட்டும். பிறகு பார்க்கலாம்.


வீ. சுப்பு, கீழ்பாக்கம்.

ஒரு ஆடிட்டரை வீட்டுக்கு கூப்பிட்டு செருப்பால் அடித்த வீர வரலாறு ஜெ , சசிக்கு உண்டு. சும்மா வரலாற்றை நினைவு படுத்தினேன்.


S. முத்துக்குமார், வாணுவம்பேட்டை.

இது வெறும் டீஸர்தான்... சின்னம்மா வரட்டும் கொரளிவித்தை எல்லாம் பார்க்கலாம்..!! சம்பவம் இருக்கு வெயிட் பண்ணுங்க மக்கா..!!


G. வெங்கடேசன், ஆதம்பாக்கம்.

குருமூர்த்திக்கு தான்தான் “சோ” என்று யாரோ நம்ப வைத்துவிட்டனர்... அரசியல் சாணக்கியன் என்று தன்னை நினைத்துகொண்டு, எதையாவது உளறி அதிமுக - பிஜேபிக்கு வேட்டு வைத்து கொண்டிருக்கிறார். குருமூர்த்தி, ஹெச். ராஜா போன்றவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும் பிஜேபி ஓரளவாவது தமிழ் நாட்டில் வளரும்.


L. கிருஷ்ணராஜ், ஜோலார்பேட்டை.

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா.... பாக்குறீயா பாக்குறியான்னு அந்தம்மா ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி, அம்மா சமாதியில ஓங்கி அடிச்சிட்டு போனாங்க. ஜனவரி 27-க்கு அப்புறம் பாருங்க. செம எண்ட்டர்டெயின்மென்ட் இருக்கு.


P. மாதவன், அர்கான்ஸஸ், அமெரிக்கா.

“சசிகலா என்னைக்குமே கட்சியில இருந்தது இல்ல!”ன்னு அதிமுக மந்திரிங்க சொல்றாங்க! அப்பறம் என்னாத்துக்கு அன்னைக்கு கால்ல விழுந்தீங்க???


L. ஏழுமலை, போரூர்.

இன்னும் வெளியே வரவில்லை.. அதுக்குள்ளே இவளோ கதறலா? ஏன் இந்த பயம்? சசிகலா வந்தாலென்ன? கமல் வந்தாலென்ன? நீங்க உங்க வேலய பாருங்க..!


E. முரளிதரன், அண்ணாநகர்.

பயத்தின் உச்சத்தில் அதிமுக இருக்கிறத பார்த்து எந்த சம்பந்தமே இல்லாத எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு.. ஏன்னா மன்னார்குடி வரலாறு அப்படி..


வ.இரவிக்குமார், சைதாப்பேட்டை.

அப்புறம் டேபிளு கீழ உருண்டு புரண்டது எல்லாம் கண்ணு முன்னே வந்து போகுதுல்ல... ஏன்னா சசிகலா அதிமுகவில் இணைந்தால், வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு தவழத்தான் அதிக வாய்ப்பு (ச்சே மன்னிக்கவும்) ஜெயிக்க தான் வாய்ப்பு.


S. கருணாகரன், மயிலாடுதுறை.

துரோகி..! அந்தம்மா உன் தோளில் கை போட்டு அன்பு சகோதரர் என்று சொன்ன வார்த்தைக்கு நீ கொடுக்கும் பரிசா இது.... நீ செய்யும் தவறுக்கு நீ அனுபவித்து ஆகவேண்டும்.


N. கோதண்டம், மறைமலை நகர்.

எங்க சின்னம்மா வந்தால் தான் தமிழகம் முன்னேறும்.


P. ஷங்கர், சைதாப்பேட்டை.

சசிகலா வெளியே வந்தவுடன் அம்மாவின் பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். தினகரனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவு இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கா.. இல்லை சசிகலாவிற்கா என்று தெரிய வரும்.


M. பாலு, தாம்பரம்.

சசிகலாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று கூறுகிறார்கள். எந்த ஆஸ்பத்திரியில் வைத்து மருத்துவம் பார்த்தாலும். மருத்துவம் பார்க்கும் இடத்தில் உடனடியாக சிசிடிவி பொறுத்த வேண்டும்.. இல்லனா இரண்டு இட்லி உப்புமா கதைதான் இவருக்கும்.