பாலூட்டாமல் வளர்த்த அன்னை - உடலைப்
பார்த்துப் பராமரித்த அன்னை
சோறூட்டாமல் வளர்த்த அன்னை – வந்த
சோதனையைத் தகர்த்த அன்னை
உடன் தங்கி வாழ்ந்த அன்னை – உறவெலாம்
ஒதுக்கியபோதும் தூக்கிவிட்ட அன்னை
சாந்தமே உருவான அன்னை – மன
சாந்திக்கு பொருள் தந்த அன்னை
அடையாற்றில் குடிகொண்ட அன்னை – பலர்
குலம் வாழ வழி செய்த அன்னை
மருத்துவ தேவதையாம் அன்னை - பல
மருத்துவர்க்கு முன்னோடி அன்னை
நம்பிக்கை தரும் அன்னை - தன்
வாசல் வந்தோர் நலம் காக்கும் அன்னை
விருதுக்கு விருதான அன்னை – பலர்
வாழ்வில் ஒளியான அன்னை
உனை இழந்தோம் என் செய்வோம் அம்மா – மீண்டும்
புற்று நீக்கப் பிறந்திடுவாய் அம்மா.
தொடர்கள்
கவிதை
Leave a comment
Upload