தொடர்கள்
Daily Articles
"பரிதாப யானை மரணம் " -ஸ்வேதா அப்புதாஸ் .

"பரிதாப யானை மரணம் "

20210023162159718.jpeg


முதுமலை புலிகள் காப்பக வனத்தில் யானைகள் சுதந்திரமாக சுற்றித்திரிவது அழகான ஒன்று .


ஊட்டியில் இருந்து கல்லடி மலைப்பாதை வழியாக மசினகுடி சென்றால் ..சாலை ஓரத்தில் யானைகள் நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம் ..அதே போல கூடலூர் வழியாக ..தெப்பக்காடு செல்லும் போதும் இந்த காட்டு ஜாம்புவான்களின் உலாவை பார்க்கலாம் ....சிலர் சாலை நடுவில் நின்று கொண்டிருப்பார்கள் ....சிலர் ஓரமாக நின்றாலும் வாகனங்களை விரட்டுவதில் மும்முரம் காட்டுவார்கள் ...


இரவில் சொல்லவே வேண்டாம் யானைகளின் கூட்டம் தேசிய நெடுஞ்சாலை 67 ஐ ..ஆக்கிரமித்து கூலாக நின்று கொண்டிருப்பார்கள் ...

அதனால் தான் இந்த தெப்பக்காடு ...பண்டிபூர் சாலை இரவில் போக்குவரத்திற்கு மூட பட்டுள்ளது .தற்போது ஒரு யானையின் இறப்பால் இந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது ...

20210023162540755.jpeg
இந்த ஜனவரி மாத முதல் வாரத்தில் ஒரு பெரிய யானை தன் முதுகில் அடிபட்டு ..ரத்த காயத்துடன் ..மாவனல்லா ...மறவகண்டி வன பகுதியில் கடுமையான வலியால் சுற்றி திரிந்துள்ளது ...அதை வன பார்வையாளர்கள் பார்த்து ..அதை கும்கி யானைகள் துணையுடன் ..ரவுண்டப் செய்து சிகிச்சை அளித்துள்ளனர் ...பின்னர் ..யானை சற்று குணமாக வனத்தினுள் சென்றுள்ளது ...பின் ..14 ஆம் தேதி ...ஒரு தந்ததுடன் உள்ள பெரிய யானை பிளிறி கொண்டு மரவகண்டி நீர் தேகத்தில் தண்ணீரில் நின்று கொண்டு தவிக்கிறது என்று வனத்துறையினருக்கு தகவல் கிடைக்க ..அதை போய் பார்த்தபோது ...முதுகு காயத்திற்கு சிகிச்சை அளித்த அதே யானை தான் ...என்று அடையாளம் கண்டு பரிசோதிக்க அதன் இடது காதின் பின்புறம் பயங்கர தீ காயம் ஏற்பட்டு ..உயிருக்கு போராடி கொண்டிருந்ததாம் ...அதற்கு சிகிச்சை அளிக்க முயல ...சற்று கடினமாகியுள்ளது ...பின்னர் ..19 ஆம் தேதி யானையை மீட்டு லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு யானைகளின் முகாமுக்கு கொண்டு வரும் வழியில் அந்த யானை பரிதாபமாக இறந்து போனது என்ற சோக செய்தியை கேட்டு
அனைவரும் அதிர்ந்து போயுள்ளோம் .

20210023162601790.jpeg
அந்த நாற்பது வயது யானை மேல் நெருப்பை வீசி எரிந்து விரட்டியுள்ளனர் ...தீ ..காயத்தில் ரத்தம் வடிந்து சீழ் பிடித்து பாவம் ...வலியால் வனத்தில் துடித்த யானை ...சுற்றி சுற்றி அலைந்தது பரிதாபமாக இறந்து போனது ....


யார் இந்த அக்கிரம செய்யலை செய்தது என்று ...விசாரிக்க ..


மாவனல்லாவில் ...பெயர் இல்லாத சுற்றுலா காட்டேஜ் நடத்தி வரும் ரேமண்ட் டின் ..,மற்றும் .ரிக்கி ராய் ..இருவரை கைது செய்துள்ளனர் .


இவர்களின் காட்டேஜ்க்கு ..இந்த யானை வந்துள்ளது ...அங்கு உள்ள உணவு மற்றும் பலா பழத்தை சாப்பிட ..தினமும் வரும் யானையை பார்த்து மிரண்ட இவர்கள் அதை விரட்ட ..பெட்ரோல் தீ பந்தத்தை கொளுத்தி விரட்டியுள்ளனர் ....யானை பின்னோக்கி செல்ல ..அந்த நெருப்பு துணியை யானையின் மேல் வீச அது ..அதன் இடது காதில் சிக்கி ..நெருப்பு பத்தி ...எரிய ..யானை பிளிறி கொண்டே ..வனத்தினுள் ...சென்று ..தீ காயத்துடன் துடித்துள்ளது சில நாட்களாக ...பின்னர் பரிதாபமாக இறந்துள்ளது ....இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மிருக ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

20210023162302383.jpeg

மோகன்ராஜ்

இயற்கை ஆர்வலர் ..மோகன்ராஜ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது ,
"அந்த யானையின் பரிதாப இறப்பை கேள்வி பட்டு ...என் இதயம் உடைந்து விட்டது ...அந்த கொடூரத்தை செய்தவர்களை சுட்டு கொல்ல வேண்டும் ..ஏற்கனவே மசினகுடி ...மாவனல்லா .வன பகுதியில் ..தனியார் விடுதிகள் செயல் பட கூடாது என்று கூறியும் ...எப்படி இவர்கள் நடத்தினார்கள் ...அதிலும் ..முதுமலை வன பகுதி யானைகளின் சொந்த ராஜ்யம் அவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதை தடுக்க இவர்கள் யார் ....விடுதி பக்கம் வந்த யானையை ...விரட்டுவது .சகஜம் போக வில்லை என்றால் ..சைலெண்டாக ..இருந்தாலே அது தானாக போய்விடும் ....பாவம் ..அந்த அப்பாவி ..வாயில்லா ஜீவனை ...சாப்பாடு போட்டு ...டயரை ...கொளுத்தி ..நெருப்பை வீசி ..விரட்ட ...அதன் காது மடலில் தீ பிடித்து ...பயங்கர காயத்துடன் ..அலைந்து தண்ணீர் பகுதிக்கு ..சென்றுள்ளது ....தன் துதி கையை கூட தூக்க முடியாமல் தவித்துள்ளது ...ஏற்கனவே ..முதுகில் காயம் வேறு ...அதற்கு சிகிச்சை அளித்த வனத்துரை அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ..அதை அப்படியே விட்டதால் தான் இந்த நிலைமை ...மிருகத்தை விட மனிதன் மோசமாகிவிட்டான் ...அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ...நமக்கு இது பெரிய தலை குனிவு ....பி பி சி நியூஸ் ல் இந்த செய்தி வந்துள்ளது ...மிக பெரிய சோகம் இனி இப்படி நடக்க கூடாது என்று கூறினார் .

20210023162403379.jpeg

ஷங்கர்

கர்நாடக இயற்கை மிருக ஆர்வலர் ஷங்கர் கூறும் போது , காட்டின் உழவன் பெரிய யானைக்கு நேர்ந்த கொடிய நிகழ்வு உலகை உலுக்கியுள்ளது ....இதை செய்தவர்கள் மனிதர்கள் இல்லை ....அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்க்கும் போது இனி ஒருவரும் இப்படி கொடூரத்தை செய்ய கூடாது .அந்த யானை பட்ட வேதனையை நினைக்கும் போது என் இதயம் வெடிக்கிறது ...வனத்துறை இன்னும் அதிக கண்காணிப்பை ..விரிவு படுத்த வேண்டும் ...என்று கண்கலங்கினார் .

ஶ்ரீகாந்த்

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ..ஸ்ரீகாந்த் .கூறும் போது ,
யானையின் இறப்பு எவராலும் ஏற்று கொள்ள படாதது தான் ..இந்த 40 வயது யானை காட்டில் பெரிய அழகான கம்பிர தந்தம் கொண்ட ஒரு சூப்பர் மேன் தான் .
ஜனவரி முதல் வாரத்தில் ஒரு யானை மசினகுடி பகுதியில் முதுகில் காயத்துடன் கஷ்டப்பட்டு உலாவி கொண்டிருக்கிறது என்று தகவல் வர ..எங்க டீம் அதை தேடி போய் ..கும்கி யானை துணை கொண்டு ..மீட்டு ..அந்த புண்ணுக்கு சிகிச்சை அளித்தோம் ...ஒரு அளவுக்கு காயம் சரியானதால் ...வனத்தில் விட்டோம் ...அதிலும் பகலில் ..எங்க கண்காணிப்பு இருந்தது ..இரவு முழுவதும் அது முடியாத காரியம் ....சிகிச்சை கொடுக்க ஒரு அளவுக்கு பழகி விட்டது . கடந்த வாரம் ...மரவகண்டி நீர் தேக்கத்தில் ஒரு யானை ரத்தம் சொட்ட நின்று கொண்டிருக்கிறது என்று தகவல் ..அங்கு விரைந்து பார்த்த போது ..நாம் காயத்திற்கு சிகிச்சை கொடுத்த அதே யானை ...என்று ..அறிந்து பார்த்த போது அதன் இடது காது மடலில் .பயங்கர தீ காயம் ..ரத்தம் கசிந்து கொண்டிருந்தது ...அதை மீட்டு ...யானை முகாமுக்கு கொண்டு வர ...லாரியில் ...வரும் வழியில் பரிதாபமாக இறந்து போனது ..

20210023162429531.jpeg
பின்னர் வழக்கு பதிவு செய்து இந்த கொடூரத்தை யார் செய்தார்கள் என்று கடந்த ஒரு வாரமாக விசாரணை செய்த போது தான் ..மாவனல்லா பகுதியில் உள்ள ஒரு விடுதி சொந்த காரர் தான் இந்த கொடூரத்தை செய்திருக்கிறார் ..மல்லன் என்பவரின் மகன் ரேமண்ட் மற்றும் ரிக்கி ..விடுதியினுள் புகுந்த யானையை விரட்ட ..தீ பந்தத்தை கொளுத்தி விசியுள்ளனர் ....அந்த நெருப்பு யானையின் காது மடலில் சிக்கி ..பயங்கர தீ காயம் ஏற்பட்டு ...யானை பரிதாபமாக இறந்து விட்டது ...இவர்களுக்கு உதவி செய்த பிரசாத் என்பவனை தேடி கொண்டிருக்கிறோம் ...கைது செய்த இவர்கள் பெயிலில் வெளியே வர முடியாது ...இந்த சம்பவத்தால் நாங்கள் சோகத்திலும் அதிர்ச்சியிலும் இருந்து மீளவில்லை அந்த யானையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது ...இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்ளுவோம்"....என்று முடித்தார் .

20210023162455967.jpeg

வழக்கமாக யானைகள் ஒரு குடியிருப்பு பகுதியில் நுழைந்தால் சப்தம் போட்டு ...அல்லது பட்டாசு வெடித்து விரட்டுவது தான் வழக்கம் ....இந்த யானையை தீ பந்தம் கொளுத்தி விரட்டியுள்ளனர் ...அந்த தீ பந்தத்தை யானையின் மேல் வீசியது தான் கொடூரம் ...ஒரு காட்டு ராஜா ...உழவன் ...அப்பாவியான அவனை கொன்று ..சாபத்தை வாங்கி கொண்டனர் அநியாயமாக ....


நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா ..இந்த கொடூர சம்பவத்தை கடுமையாக கண்டித்து அந்த விடுதியை சீல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்து ..வனத்துறையினர் கண்காணிப்பை துரித படுத்த கேட்டுக்கொண்டுள்ளார்
மசினகுடி ...மாயார் ...வாழை தோட்டம் ..நாடுகாணி பகுதியில் இப்படி பட்ட ஒற்றை பெரிய யானைகள் சுற்றுவது சகஜம் ...அவர்களின் இடத்தில் சுற்றும் அவர்களுக்கு உரிமை உண்டு ....அங்கு சுற்ற ...ஆக்கிரமிக்க நமக்கு உரிமை இல்லை என்பது தான் உண்மை ..

-ஸ்வேதா அப்புதாஸ் .