அந்தரத்தில்... தான்
அவர்கள் வாழ்க்கை..!
அந்த ரங்கன் தான்
அவர்களைக் காக்க வேண்டும்...!
சாதாரணமாக நடந்தால்...
தமக்கு வாழ்க்கை வாய்க்காதென..
கயிற்றின் மேல் நடை பயின்றனர்..!
நம்மை மகிழ்விக்க...
அவர்கள் துன்புறுகின்றனர்..!
உணவும் குறைவு...
உறக்கமும் குறைவு...
கைதட்டல்கள் தான்...
அவர்களுக்கு காரசார உணவு...!
விலங்குகள் தான்...
விருப்பமான நண்பர்கள்...!
நூலிழையில்...
அவர்களின் உயிரிழை...!
அனுதினமும் அல்லல் மயம்...!
அவர்களுக்கில்லை...
எங்கெங்கும் இன்ப மயம்..!
உழைத்து.. களைத்து... உயர்கிறார்கள்..!
அவர்கள் இருப்பது... உயரத்தில் தான்...!
ஆனால் - அந்தரத்தில்.. தான்...
அவர்கள் வாழ்க்கை..!
அந்த ரங்கன் தான்...
அவர்களைக் காக்க வேண்டும்...!
கொரோனா காலத்தில்....
கோடை விடுமுறையில்...?!
கொண்டாட்டமும் இல்லை...!
கோலாகலமும் இல்லை...!
உழைப்பது எங்ஙனம்...?!
பிழைப்பது எங்ஙனம்...?!
உரிய நடைமுறைகள் கடைபிடிப்போம்....!
உயரிய வாழ்முறைகள் கண்டிடுவோம்...!
வாழ்க... தொழிலாளர்கள்...!
வளர்க... தொழில்கள்...!
மே தின வாழ்த்துக்கள்...!
மேன்மை தின வணக்கங்கள்...!
Leave a comment
Upload