தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

கொரானா - ஊடகங்கள் பயமுறுத்துகிறதா?

20210330173058795.jpeg

வ.ஷண்முகம், தாம்பரம்.

இந்தக் கொரோனா செய்திகளை ஊடகங்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டு பீதியை கிளப்புறதாலே நமக்கும் இந்தக் கொரோனா பக்கத்துலேயே சேர் போட்டு உக்காந்து நம்மளையே முறைச்சு பாக்குறா மாதிரி ஃபீல் ஆவுது.. முடியலைங்க..


ப.ராஜேஸ்வரி, குரோம்பேட்டை.

ஊடகங்கள் இது போல் கொரோனா செய்திகளையே ஏன் 24 மணிநேரமும் ஒளிப் பரப்புகிறார்கள்.?? அட.. உண்மை நிலையை சொல்வதாகவே இருக்கட்டும்.. ஆனால், எல்லா நேரமும் அதையே போட வேண்டிய தேவை என்ன! மக்களை மேலும் மேலும் பயமுறுத்தி என்ன சாதிக்க போறாங்க? டெல்லியில் சுடுகாட்டில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் காட்சிகளை, சினிமா போல் பிண்ணனி இசையோடு ஒளிபரப்புகிறார்கள். எல்லாம் டிஆர்பி ரேட்டிங்குக்காக.. எவ்வளவு கேவலம் பாருங்க!!?


சி.நவீன், விழுப்புரம்.

அடேய் கொரோனா நாடகத்தை நிறுத்தி மக்களை வாழ விடுங்கள்.. ஊடகங்களே..!!
எப்படா இதை முடிப்பிர்கள்.?


அ.சதீஷ் குமார், நாகை.

கொரோனா உயிரிழப்பு கணக்குகளோடு, இந்த ஊரடங்கு காரணத்தால் பஞ்சம், பட்டினி போன்ற காரணங்களால் உயிரிழப்பு கணக்குகள் எடுத்து, இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டால்... கொரோனா உயிரிழப்பை விட பட்டினியால் இறந்தவர்கள் அதிகமாக இருக்கும்.. ஆனால், இதை ஊடகங்கள் செய்ய மாட்டார்கள்.


வி.கர்ணன் - பெயிண்ட்டர், வண்டலூர்.

எனக்கு வாழவே புடிக்கல.. ஊடகங்கள் கொரோனா அச்சத்தை செய்திகள் மூலம் தொடர்ந்து போட்டுக்கிட்டே இருந்தா, எப்படியும் லாக்டவுன்‌ போட்டுருவாங்க... இழந்த வருமானத்துக்கு அரசாங்கமும்
எந்த உதவியும் செய்யாது.


த.நரேஷ், வளசரவாக்கம்.

கொரோனா நான்காவது அலை தான் மிகவும் மோசமானது என்று அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அன்பான ஊடக பெருமக்களே இதை ப்ரேக்கிங் நியூஸாக போடுங்கள் பார்க்கலாம்!!?


ஜி.மகேந்திரன், திருச்சி.

இல்லாத ஒரு வியாதியை இருக்கு இருக்குன்னு சொல்லி நம்பவச்சிடீங்க... தெம்பா இருந்த மக்களை, மனதளவுல நோயாளியா மாத்தினது தான் மிச்சம். ஊடகங்களால் நடந்த ஒரே நன்மை இதுதான்.


தேவகி சுந்தரம், சென்னை.

உயிர் மீது ஆசை இருந்தால், அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டு நடங்க... ஊடகங்களும் உண்மை நிலையை தான் சொல்கின்றார்கள்......


த.முத்துவடிவு, கோவை.

மனசு தைரியம் இருந்தா கொரோனா வராது. அதுக்கு முதல்ல இந்த டிவி, வாட்ஸ்அப், பேஸ்புக் எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சிட்டு, ஓய்வு நேரத்துல நல்ல புத்தகங்களை படிங்க. முக்கியமா பழைய நாவல்கள், கல்கி, லக்ஷ்மி, சுஜாதான்னு பாசிடிவ் உணர்வு தரும் நாவல்களை படிங்க... மத்தபடி, தடுப்பூசி எடுத்துக்கிட்டு.. மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளின்னு முறையா கடைப்பிடிச்சீங்கன்னா நம்மை ஏன் கொரோனா தாக்க போகுது??!!


ம.பிரகாஷ், சைதை.

எலக்ஷன் நேரத்துல இவ்வளவு பேருக்கு கொரோனா வந்து ஆஸ்பத்திரியில யாரும் சேரல.. 8 மாசம் எல்லாரும் கும்பலாக சுத்துனோம்.. இப்ப ஊடகங்கள் உபயத்துல, ஐயோ.. அம்மான்னு கத்துறோம்.


க.ராஜு, தாம்பரம்.

ஊடகங்கள் தொற்று எண்ணிக்கை சொல்றாங்க. சரி... ஆனா டெஸ்ட் எண்ணிக்கையை ஏன் சொல்வதில்லை? தெரியாதா.. இல்ல மறைக்கிறாங்களா? தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரைக்கும் தினமும் ஆயிரக்கணக்கில் நடந்த பரிசோதனைகள், இப்பொது ஒரு நாளைக்கு லட்சத்துல பரிசோதனைகள் நடக்குது.. அப்ப கொரோனா எண்ணிக்கை கூடுதலா தானே வரும்..? ஊடகங்கள் இதை தெளிவாக சொன்னால் மக்களுக்கு பயம் வராது.