கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டம், சத்யாலா கிராமத்தில் தலித் காலனி மக்கள் கொரோனா பரவலைத் திறமையாகக் கையாண்டு வருகின்றனர். இக்கிராமத்தின் தலைவர், 2-ம் கட்ட கொரோனா பரவல் அலையால், தங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதிலும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதே சமயம், பெங்களூரூ மற்றும் மைசூரூவில் இருந்து வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் இக்கிராமத்தில் கொரோனா பரவலை ஊக்கப்படுத்தாதீர்கள் எனக் கிராம பஞ்சாயத்தில் அவர் அறிவுறுத்தியுள்ளார். இங்குள்ள கிராம இளைஞர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, பயிற்சி பெற்று தேறியுள்ளனர்.
கிராமத்தை விட்டு யாரும் தேவையின்றி வெளியே சென்று வரக்கூடாது. அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ அவசரத்துக்கு சென்று வரலாம். இவற்றை ஒரு பறக்கும் இளைஞர் படை, கண்காணித்து வருகிறது. இதுதவிர... கோவிட் தடைக் காலம் முடியும்வரை, பண வசூல் செய்பவர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் யாரும் ஊருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஊருக்குள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கிராம பஞ்சாயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகளவு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த பசவண்ணா கூறுகையில், “இக்கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில்.. சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூட ஒரு டாக்டரும் இல்லை. அவற்றுக்கு சிகிச்சை பெற, நாங்கள் வேறெங்கு போவோம்..? நாங்கள் சிகிச்சை பெறமுடியாமலே இறக்க வேண்டியதுதான்! எங்களை நாங்களே தற்காத்துக் கொண்டால்தான்" என வேதனையோடு தெரிவித்தார்.
Leave a comment
Upload