தமிழக தேர்தல் முடிவுகள்!!
விகடகவி கருத்துக் கணிப்பு நடத்தவில்லையா என்று சில நண்பர்கள் கேட்டவண்ணம் இருக்கிறார்கள்....
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தொகுதிக்கு சொற்ப ஆட்களை சந்தித்து, அதை தேர்தல் கணிப்பாக எழுதும் ஊடகங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு அவப் பெயர் வரும் அளவிற்கு கருத்துக் கணிப்புகள் இருந்தாலும், டிவிட்டரில் வித்தியாசமாக அதிமுக அணி வெற்றி பெறும் என்று போட்டு விட்டு... அதிக காமெண்டுகளை அள்ளி வரும் கிருஷ்ணகுமார் முருகனை, ஜூம் அழைப்பில் பிடித்தேன்.
இது விகடகவியின் கடைசி கட்ட தேர்தல் கணிப்பு அல்ல.
முழுக்க முழுக்க கிருஷ்ணகுமார் முருகனின் தேர்தல் கணிப்பு.
தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று சீன சோதிடத்தைப் பார்த்து வெளியிட்டதும் விகடகவிதான்.
அதில் தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லியிருந்தார் சீன சோதிடர். அதற்கே விகடகவியில் சொல்லி வைத்து, இது ஒரு செட் அப் என்ற வகையில் ஏராள காமெண்டுகள் யூடியூபில் எழுதியிருக்கின்றனர்.
இன்றைய பேட்டியில், கிருஷ்ணகுமார் ஆருடம் இல்லாமல் தரவுகளின் ஆய்வுகளின் படி அ.தி.மு.க தான் வெற்றி பெறும் என்று சொல்கிறார். இதற்கும் காமெண்டுகள் வரலாம்.
இரண்டுமே விகடகவியின் கணிப்பல்ல……
இனி…. கிருஷ்ணகுமார் முருகன் என்ன சொல்கிறார்???
Leave a comment
Upload