நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதிமுக கூட்டணி முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் திமுகவை விட 3% குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இவர்களுடன் கூட்டணியில் அங்கம்வகித்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. நான்கு இடங்கள் தானே என்று சாதாரணமாக கடந்து போகிற வெற்றி அல்ல. பாஜகவினர் மிகவும் ஆர்ப்பரித்து கொண்டாட வேண்டிய வெற்றி.
ஏன் இந்த கொண்டாட்டம். நான்கு இடங்களில் அல்ல.. ஒரு இடத்தில் ஜெயித்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். இது அவர்களின் இருபது ஆண்டுகால காத்திருப்பு.
திராவிட பூமியான தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா கட்சி என்றுமே உள்ளே நுழையமுடியாது என்று எதிர் கட்சியினர் ஆணித்தரமாக நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒருவர் ஜெயித்தால் கூட நாங்கள் உயிரைவிடுவோம் என்று சொன்ன சில அரசியல் தம்பிகளும் உண்டு. இப்படிப்பட்ட சூழலில் நான்கு இடத்தை பிடித்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியே.
கடந்த பல வருடங்களாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழகத்தில் தாமரை மலந்தே தீரும், தாமரை மலர்ந்தே தீரும் என்று வீரமுழக்கம் இட்டு வந்தார். அவருடைய நம்பிக்கை இன்று உயிர்ப்பிக்க ஆம்பித்திருக்கிறது. அவர் துணை நிலை ஆளுநராக இருக்கும் புதுச்சேரியிலும் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருக்கிறது. மொத்தம் 10 இடங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வென்றிருக்கிறது.
நாகர்கோயிலில் M.R காந்தி அவர்கள், மொடக்குறிச்சியில் C.K சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகிய நால்வர் வெற்றிபெற்றுள்ளனர்.
.அதிலும் இருவரின் வெற்றி மிகவும் போற்றக்கூடியது.. M .R காந்தி, கடந்த முப்பது வருடங்களாக விட முயற்சியாக 5 தேர்தல்களில் தோற்று... 6-வது முறையாக வென்றுள்ளார். என்ன ஒரு வைராக்கியம். இந்த முறை இவர் 9857 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பெயரில் மட்டுமல்ல தன் செயலிலும் காந்தியாக வாழ்பவர். அரசியலில் தொடர் கடின உழைப்பும், நம்பிக்கையும், பொறுமையும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இவருடைய வெற்றியும் சாட்சி.
சி.கே சரஸ்வதி அவர்கள். மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மிகச்சிறந்த மருத்துவரான இவர், பல ஆண்டுகளாக மக்கள் சேவையும், இலவச மடுத்துவமும், அறுவை சிகிச்சைகளும் செய்து வருகிறார். அதுவும் இவர் திமுகவின் மூத்த தலைவர் சுப்புலக்ஷ்மி ஜெகதீசனை எதிர்த்து 1244 வோட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வானதி சீனிவாசன் கோவை தெற்கில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி மிக சுவாரஸ்யமான ட்ரெண்டிங்கில் போனது. காலை முதல் மாலை வரை காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் , பாஜக என மாறி மாறி முன்னிலை பெற்று, இறுதியில் 1540 வோட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
நைனார் நாகேந்திரன் திருநெல்வேலியில் 23107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டுமுறை இங்கே அதிமுகவில் இருந்த போது வெற்றிபெற்றவர். இரண்டு முறை தோல்வியையும் தழுவியவர். இந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்டு ஜெயித்து, கட்சிக்கு வலு சேர்த்துள்ளார்.
மொத்தத்தில் பாஜக தமிழகத்திலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். தாமரை மலர்ந்ததா என்று கேட்டால் இப்போதுதான் மொக்கு விட ஆரம்பித்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். இன்னும் போக வேண்டிய காலம் வெகு தூரம்.
இனி சட்டசபையில் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே போன்ற கோஷங்கள் ஒலிக்கும்.
Leave a comment
Upload