தொடர்கள்
மருத்துவம்
நரம்பியல் மருத்துவ நிபுணர் ஏ.வி.ஶ்ரீநிவாசனுடன்….!! பகுதி - 2 - ராம் & கார்த்திக் ராம்.

20210406180047870.jpeg

டாக்டர் ஏ.வி.ஶ்ரீநிவாசன்.

ஒரு கைராசியான மருத்துவர். நரம்பியன் நிபுணர். ஆராய்ச்சியாளர். எழுத்தாளர். பேச்சாளர். தத்துவவாதி. ஆன்மீகப் பற்றாளர்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் ஐம்பது ஆண்டுகளாக மாணவராக, எம்.பி.பி.எஸ். எம்.டி, டி.ம். மற்றும் பி.எச்.டி முடித்திருக்கிறார். பின்னர் பேராசிரியர். டாக்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியர்.

மனித மூளையின் ஆச்சரியங்களில் கவரப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. முடித்த கையோடு லண்டனுக்கு சென்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜி மற்றும் நீயூரோ சர்ஜரியிலும் படித்து முடித்திருக்கிறார்.

2002ல் அவரின் ஆராய்ச்சிக்காக பி.எச்.டி பட்டம் வாங்கியிருக்கிறார். பாண்டன் நியூராலஜி மற்றும் மூவ்மெண்ட் டிஸ் ஆர்டர்ஸ்.

இன்னமும் அவரது சாதனைகள் பட்டியலிட்டால் ஒரு விகடகவி பூராவும் எழுதலாம் போல….

ஒரு சின்ன தகவல், அவரது 25 வருட மருத்துவ பயணத்தில் இதுவரை சுமார் 250 நரம்பியல் மற்றும் அதன் சார்ந்த துறைகளில் மருத்துவர்களை உருவாக்கியிருக்கிறார். அறுபதாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். இதில் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்கள். பெரும்பாலானோர் காக்காய்வலிப்பு, ஸ்டிரோக் மற்றும் டிமென்ஷியா போன்ற நோயிலிருந்து இவரது சிகிச்சையால் பலன் பெற்றவர்கள்.

சாதனைப் பட்டியல் மிக நீளம். ஆனால் என்னை வசீகரித்தது அவர் எழுதிய தமிழ்ப் புத்தகங்கள்.

பார்க்கின்ஸன் பயங்கரம், ஆட்டிசம் அறிவோம், பக்கவாதமா பயம் வேண்டாம், மன அழுத்தம் வெல்வோம் , காக்காய் வலிப்பா கவலை வேண்டாம், தலைசுற்றல் தவிர்ப்போம், மனமா மூளையா போன்ற புத்தகங்கள் தான் கற்றவற்றை பாமரர்களுக்கு பகிரும் அக்கறையால் விழைந்த புத்தகங்கள்.

டாக்டருடன் ஜூம் அழைப்பில் (வீடியோ கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். இணையத்தின் இணையில்லா செளகரியங்களில் சில அசெளகரியங்களும் உண்டு)

இனி டாக்டருடன் ‘ஜூம்’ முகம் பல பகுதிகளாக வெளி வரும்.

வாசகர்கள் ஏதேனும் கேட்க விரும்பினால் உங்கள் கேள்வியை கீழே காமெண்டில் சொல்லலாம் அல்லது info@vikatakavi.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.