தொடர்கள்
அரசியல்
" கேரளாவில் கால் ஊன்ற முடியாத பாஜக...” - ஸ்வேதா அப்புதாஸ்..

மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில்.... தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று ஒத்தை காலில் நின்று பிரச்சாரத்தை முடக்கிவிட்டனர், டெல்லியின் முக்கிய தலைகள்.

20210406210356202.jpg
கொரோனாவை கூட கண்டுகொள்ளாமல், பிரதமர் முதல் பெருவாரியான மத்திய அமைச்சர்கள், இந்த மூன்று மாநிலங்களிலும் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று எல்லா யுக்திகளையும் செய்து வந்தனர். அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாரானன் ஆகிய மூவரும் இந்த மாநிலங்களில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் முகாமிட்டு, வெற்றி வாகை சுட பல வழியிலும் முயற்ச்சித்தார்கள்.

... 20210406210706368.jpg
பாஜக, 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில், 138 இடங்களில் போட்டியிட்டது. தலைச்சேரி மற்றும் குருவாயுரை ஏனோ தவிர்த்து விட்டது.

140 இடங்களிலும் இடதுசாரி கட்சியான சிபிஎம் மற்றும் சிபிஐஎம் கூட்டணி போட்டியிட்டது. காங்கிரஸ் 140 இடங்களில், நேரடியாக ஆளும் கட்சியுடன் போட்டியிட்டது.

20210406211101738.jpg
காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தி ஒருவரை மட்டுமே முன்னிலை படுத்தி பிரச்சாரத்தை முடக்கி விட்டது.

முதலமைச்சர் பினராய் விஜயன், முழு நம்பிக்கையுடன் தேர்தல் பணியில் ரொம்பவே கூலாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். தங்கள் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், மக்களுக்கு செய்த ஆக்கப்பூர்வமான பணிகளை பற்றி எடுத்து கூறி, வாக்கு சேகரித்தார். அதையே அனைத்து வேட்பாளர்களும் முன்மொழிந்து வந்தனர்.

20210406211250335.jpg
முன்னாள் முதல் அமைச்சர் உம்மண்சாண்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி, ஆளுங்கட்சியான சிபிஎம்மை ஊழல் கட்சி என்றும்... பினராய் விஜயன் பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறார். ஸ்வப்னா தங்க கடத்தல், மின்சாரம் வாங்குவதில் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு முதலமைச்சர் ஊழல் புரிந்துள்ளார் என்று காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா குற்றம் சாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாஜக தன் பங்குக்கு டெல்லியில் இருந்து பினராய் விஜயன் ஒரு மோசமான முதல்வர். மேலும் அவரின் அரசு, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதில் சபரிமலையில் பக்தர்களை தடுத்து நிறுத்தியது...பெண்கள் செல்வதை ஊக்குவித்தது. அதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது என்றும்.

20210406225220391.jpg

பினராய் விஜயன் ஒரு சர்வாதிகாரி என்றும் ஊழல் முதல்வர். போலீஸ் என்ற ஆயுதத்தை தன் கையில் வைத்து கொண்டு, பாஸிஸ ஆட்சி நடத்துவதை மாநில மக்கள் அவர் பக்கம் வெறுப்பை காட்டி வருகின்றனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசியல் கொலைகள், பெண்களுக்கு எதிரான கொடூர வன்முறைகள் அரங்கேறி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இந்த இடதுசாரி ஆட்சி, பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி 2 லட்சம் கோடி கடனில் மாநிலத்தை தத்தளிக்க செய்துள்ளது.

20210406211741836.jpg

தங்க கடத்தல்... அரசு பணியில் லஞ்சம் பெற்று, பணி ஆணை பிறப்பித்தது. கொரோனா தொற்றில் இந்த அரசு சரியான சுகாதார பணியை செய்யாமல் தோல்வியுற்றுள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவி வருகிறது... நாட்டிற்கும், மாநிலத்திற்கும் தேவையான விழிஞ்சம் கப்பல் தளம் கட்டுமானம், கொச்சி மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானம், மாநகர மின்விளக்கு பரிமாணம் போன்ற முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது இந்த அரசு. இதனால் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி மாநகரங்கள் வளர்ச்சியில்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது என்ற பிரச்சாரத்தை முன் வைத்து, பாரதிய ஜனதா ஆட்சி மலரவேண்டும் என்று ஆவேச பிரச்சாரத்தை செய்தனர்.

2021040621192166.jpg
ஆளும் கட்சியான இடதுசாரிகள், எதை பற்றியும் கவலை படாமல் தங்கள் கட்டாயம் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்ற குறிக்கோளில் களத்தில் இறங்கியது... முதலமைச்சர் பினராய் விஜயனும் சரி சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சரும் மற்ற அமைச்சர்கள் கட்சி முன்னோடிகள் அனைவரும் கடந்த வருடங்களில் மாநிலம் சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளை பற்றியும் அரசு மக்களுக்கு செய்த நன்மைகளை முன் நிறுத்தியும் பிரச்சாரத்தை செய்தனர்.

20210406212732295.jpg
பினராய் விஜயன், முதல்வர் இருக்கையில் அமர்ந்ததிலிருந்து ஏகப்பட்ட சோதனைகளை சந்தித்து வந்தார் என்பது உண்மை. ஓகி புயல்..... இரண்டு அதி பயங்கர வெள்ள பெருக்கில் கேரளவே தண்ணீரில் மிதந்தது. அதிலிருந்து மக்களை மீட்டு எடுத்தார் முதல்வர்... மோடியின் மத்திய அரசு, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எந்த உதவியையும் செய்யவில்லை என்பது நாடே அறிந்த ஒன்று என்கின்றனர்.

20210406212626700.jpg
அரேபிய நாடுகளில் உள்ள கேரளத்துக்காரர்கள், வெள்ளப்பெருக்கில் சிக்கிய கேரளாவிற்கு உதவ பணம் கொடுக்க முன் வர... மத்திய அரசு அதற்கு தடை போட்டது. பின்னர் பினராய் விஜயன், தன் சொந்த வங்கி கணக்கிற்கு உதவிகளை பெற்று, வெள்ளத்தின் கோரா சிக்கலிலிருந்து கேரளாவை மீட்டு எடுத்தார் என்பது ஒட்டு மொத்த மலையாளிகளின் இதயத்தில் பதிந்து விட்டது. அரசு, உணவு முதல் அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்து கொடுத்தது...

20210406222831398.jpg

அதைத் தொடர்ந்து... கொரோனா தொற்று தாக்குதலில் லாக் டவன் சமயத்தில், ஒருத்தர் கூட பட்டினியால் இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வீடுதோறும் உணவு வழங்கப்பட்டது. இவ்வளவு உதவி செய்து வந்த ஆளும்கட்சியை பற்றி குறை சொல்லி... கேரளாவில் பணிசெய்த வடநாட்டு தொழிலாளிகள் தங்களின் ஊருக்கு திரும்ப... ரயில் ரெடி என்ற தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து, ஏமாற்று வேலையை எதிர்க்கட்சி செய்ததை கேரளவாசிகள் மறக்கவில்லை.

20210406213344319.jpg
ஆளும் கட்சியின் ஊழல்கள் என்று பல மோசமான தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்றனர் காங்கிரஸும், பாஜகவும். தேர்தல் முடிந்து கடந்த 2 ஆம் தேதி முடிவுகள் வர... மக்கள் தீர்ப்பு பினராய் விஜயன் அரசுக்கு சாதகமாவே அமைந்தது. 140 இடங்களில், ஆளும் இடதுசாரி கட்சி 99 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நிரூபித்தது. எதிர் கட்சியான காங்கிரஸ் 41 இடங்களை மட்டும் தக்கவைத்து கொண்டது. தேசிய மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, தான் போட்டியிட்ட 138 இடங்களிலும் படு தோல்வியை அடைந்தது அதிர்ச்சியான தகவல்...

20210406213531429.jpg

மாநில பாஜக தலைவர் கே.சுரேந்தரன் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார். இதில் சுரேந்தரன் போட்டியிட்ட பத்தனம்திட்டா தொகுதியில், இவர் தோற்றது தான் பெரும் ஷாக்கிங். இதற்கு காரணமும் இருக்கிறது. இந்தத் தொகுதியில் தான் சபரிமலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில் வெற்றி பெற்றார் பாஜக வேட்பாளர் ஓ. ராஜகோபால். இந்த தேர்தலில் அதே தொகுதியில் கும்பனம் ராஜசேகரன் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்பது பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னணி தலைவர்களையும் யோசிக்க வைத்து விட்டது...

20210406213706324.jpg

அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளிதரன், படு தோல்வி அடைந்தது காங்கிரஸ் மேலிடத்தை, பினராய் விஜயனை நோக்கி திரும்பி பார்க்க செய்துள்ளது.

20210406220308846.jpg


காங்கிரஸும் சரி.. பாஜகவும் சரி.. சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சரை பற்றி அவதூறாகவும், ஊழல் செய்துள்ளார் என்று பிரச்சாரத்தில் பேச... இது, அவர்களின் கட்சி பிரமுகர்களையே முகம் சுளிக்க வைத்தது... தேர்தல் முடிவில் சைலஜா டீச்சர் பெற்ற வாக்குகள் 60,000. கேரளா தேர்தல் வரலாற்றில் இதுவரை எவரும் பெறாத வாக்குகளை அவர் பெற்றது.. இந்த வெற்றி, அவர் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

20210406220429476.jpg
இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஒரு நபர், நாட்டின் பொக்கிஷம்... உலக அளவில் சிறந்த பொறியாளர் என்ற பெயருடன் வலம் வந்த “மெட்ரோ மேன்” இ. ஸ்ரீதர். பாம்பன் ரயில் பாலம், டெல்லி மெட்ரோ ரயில் திட்டம்... அதன் நுணுக்கங்கள் சரியான நேரத்தில் ரயில் வந்து போகு நேர திட்டம்...

20210406220723518.jpg

கொச்சின் மெட்ரோவை வடிமைத்து கொடுத்தது. அந்தச் சமயத்தில் முதல்வர் பினராய் விஜயனுடன் இணைந்து செயல்பட்டவர்... எர்ணாகுளம் பாலாரிவட்டம் பாலம் இடிந்து விழ, மீண்டும் அதை கட்டி எழுப்ப.. சிறந்த ஐடியாவை பொறியாளர்களுக்கு கொடுத்தவர். மத்திய அரசாங்க பொறியாளர், ஓய்வு பெற்ற பின் கேரளா அரசுக்கு பல விதங்களில் உதவி செய்தவர் இந்த ஸ்ரீதர்...

20210406220558805.jpg

அவரின் 88-வது வயதில், அவரை அரசியலுக்கு இழுத்து போட்டது மோடியின் பாஜக கட்சி. அவரை கேரளா முதல்வர் வேட்பாளராக மையப்படுத்தினர் பாஜக தலைவர்கள். பின்னர் அந்த ஐடியாவை கைவிட்டனர்... அதே சமயம் மெட்ரோ மேன் தான் போட்டியிட்ட பாலக்காடு தொகுதியில், தோல்வியை சந்தித்தது வருத்தமான ஒன்று.
கேரளா தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த யோகி ஆதித்தியநாத், தன் தெரு பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களை தாக்கி பேசியதை அங்கிருந்த இந்துக்கள் யாரும் ரசிக்கவில்லையாம்.

கேரளா... கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அதிகமாக வாழும் மாநிலம்... திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் என்பதால், பாஜக கோட்டை என்று கூட அழைக்கிறார்கள். அப்படி இருக்க... அந்த இரண்டு தொகுதிகளில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

20210406220931681.jpg
மாத்திரபூமி நாளிதழ் மூத்த முதன்மை செய்தி ஆசிரியர், பத்திரிகையாளர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு பேசினோம்... “கேரளாவில் மீண்டும் இடதுசாரி கட்சி ஆட்சியை பிடித்துள்ளதற்கு முக்கியக் காரணம் அவர்களின் நேரடி மக்கள் சேவை தான். ஓகி புயலில் துவங்கியது சோதனை காலம். இரண்டு முறை பயங்கர வெள்ள போக்கு... அதுவும் நுறு வருடத்திற்கு பின் கேரளா சந்திக்கும் ஒரு பேரழிவு.. அதில் பினராய் விஜயன் அரசு செய்த உதவிகளை, மக்கள் மறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதற்கு பின் கொரோனா தொற்று.. லாக் டவனில் மக்கள் முடங்கி கிடந்தபோது, ஒரு வீடு விடாமல்... உணவு, மருத்துவ உதவிகளை செய்தது... ஏழைகளுக்கு கொடுத்து வந்த பென்ஷன் 600 ரூபாயிலிருந்து, 1600 ரூபாயாக உயர்த்தியது... நேரில் சென்று, மக்களுடன் பணியாற்றிய அமைச்சர்கள். அதில்

20210406221213836.jpg

Guardian Angel என்று அழைக்கப்படும் அமைச்சர் தான் சைலஜா டீச்சர்... அவரின் சேவையை உலகே பாராட்டி வருகிறது... ஐ நா வரை அவர் பேசப்பட்டு வருவது எங்களுக்கு பெருமை தான். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவது தானே நியமானது. மக்களுக்கு அவர்கள் செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி. பாஜக படுதோல்வி என்பது, மதங்களை தாண்டி மனிதநேயம் தான் வெற்றி பெற்றுள்ளது என்பதைதான் காட்டுகிறது. அதனால் தான் பாஜக கேரளாவில் கால் ஊன்ற முடியவில்லை.

காங்கிரஸும், பாஜக-வும் ஆளும் கட்சியின் மீது ஊழல் புகார்களை எடுத்து கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அதை மக்கள் கேட்டதோடு சரி... பினராய் விஜயனின் உதவியை மட்டும் தான் மக்கள் வாக்களிக்கும் போது நினைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளிதரன், பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் மெட்ரோ மேன் ஸ்ரீதர், கும்மனம் ராஜசேகரன் தோல்வியை சந்தித்துள்ளனர்... அதிலும் பாஜக மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக 138 இடங்களில் போட்டியிட்டது. தலைச்சேரி மற்றும் குருவாயூரில் இவர்கள் போட்டியிடவில்லை. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். கடந்த தேர்தலில் நேமம் தொகுதியில் ஓ. ராஜகோபால் வெற்றி பெற்றார். தற்போது, அதுவும் கைவிட்டு போய்விட்டது... இதற்கு முக்கியக் காரணம், பினராய் விஜயன் அரசு செய்து கொண்டிருக்கும் நேரடி மக்கள் சேவை தான். இது மற்ற மாநிலங்களுக்கும், அனைத்து அரசு கட்சிகளுக்கும் ஒரு எடுத்து காட்டு பாடம்” என்று முடித்தார்.

20210406221642362.jpg
ஏஷியா நெட் டிவியின் ரீஜினல் எடிட்டர் அஜய் கோஷ் தொடர்பு கொண்டு கேட்டபோது... “கடந்த ஐந்து வருடமாக, இடதுசாரி ஆளும்கட்சி பினராய் விஜயன் தலைமையில் மிக மோசமான சோதனைகளை கடந்து வந்தது என்று தான் சொல்லவேண்டும். கேரளாவை திருப்பி போட்ட வரலாறு காணாத வெள்ளம்... அதில் இருந்து இந்த அரசு மக்களை ஒரு தாய் போல மீட்டு எடுத்தனர்... முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும், இரவு பகல் என்று பாராமல் வெள்ளத்தில் மிதந்து மக்களை கைப்பற்றியதை யாரும் மறக்கவில்லை. உணவு மற்றும் உபகரணங்கள் என்று தேவையானவற்றை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அடுத்து, கடந்த வருடம் கோவிட் 19 தொற்று... அதில் ஒவ்வொரு வீட்டிற்கும் உதவிகள் சென்றடைந்தன... 600 ரூபாய் பென்ஷன் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் கூட்டுறவு வங்கி மூலம் சென்றடைவது தொடர்கிறது. மக்களுக்கு முழு சேவையை செய்து வருகின்றனர். இதில் சுகாதார துறையின் பணி அபாரம். அமைச்சர் சைலஜா அவர்களை உலகமே பாராட்டுகிறது என்றால் பாருங்கள்.

20210406221937522.jpg
எதிர்க் கட்சியான காங்கிரஸ், ஆளும் கட்சியை குறைசொல்வது... அவர்களின் கட்சி, உட்புசலால் அடிக்கடி தலைவர்களே முட்டி மோதி கொள்கின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரடியாக கேரளா வந்து பிரச்சாரம் செய்தும், இவர்களால் 41 இடங்களை தான் கைப்பற்ற முடிந்தது. மற்றவை இவர்களிடம் இருந்து ‘கை’ நழுவி போய்விட்டது.

அடுத்து நாட்டின் மிக பெரிய ஆளும் கட்சி பிஜேபி, எப்படியாவது கேரளாவை தங்கள் வசம் வைத்து கொள்ள இந்தத் தேர்தலை எதிர் நோக்கி, முக்கிய மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். கடந்த 2016 ஆம் வருட தேர்தலில், 140 இடத்தில் போட்டியிட்டு, ஒரே தொகுதியான நேமம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் 138 இடங்களில், ஒன்றை கூட இவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

20210406222235166.jpg
பிஜேபி மாநில தலைவர் கே. சுரேந்திரன், இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். ஒன்று காசர்கோட் மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம், மற்றது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோணி தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் தான் சபரிமலை உள்ளது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதி இது. பிரச்சாரத்திற்கு இந்த இரண்டு தொகுதிக்கும் சுரேந்திரன் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று, அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்... அதே சமயம், இந்த இரண்டு தொகுதியிலும் மாநில பி ஜே பி தலைவர் தோற்றது தான் ஆச்சிரியமாக உள்ளது. மஞ்சேஸ்வரத்தில் முஸ்லீம் லீக் வேட்பாளரிடமும், கோணியில் ஆளும்கட்சி வேட்பாளரிடம் தோற்று போனார்.

2021040622403277.jpg

கடந்த முறை தக்கவைத்து பிஜேபி-யின் நேமம் தொகுதி பறிபோனது இந்த தேர்தலில். இந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் முன்னாள் மிசோரம் மேகாலயா ஆளுநர் கும்மனம் ராஜசேகரன்.

20210406223640730.jpg

பாலக்காடு தொகுதியில் மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரை வலுக்கட்டாயமாக போட்டியிட செய்தது பிஜேபி. அமித்ஷா நேரடியாக வந்து, அவருக்காக பிரச்சாரம் செய்தும்.... ஒரு நேர்மையான ஜென்டில்மேன், நாட்டின் முக்கிய பொறியாளர் முதல்வர் பினராய் விஜயனுக்கு மாநிலத்தின் கட்டுமான பணிகளில் நெருக்கமானவர், தோல்வி அடைந்தது தான் வருத்தமான ஒன்று.

கேரளாவில் ஒரு இடத்தில் கூட பிஜேபி-யால் வெற்றிபெற முடியவில்லை. காரணம் - மக்களுக்கு சேவை செய்த ஆளும் கட்சியை குறை சொன்னது தான் என்று கூறப்படுகிறது. பினராய் விஜயன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றார். அவரது கட்சி, 99 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது... அவர்கள் மிக பயங்கரமான கால சூழ்நிலையில் மக்களுக்கு மனித நேய சேவை செய்தது தான்... மேலும் அவர்களின் சேவை தொடரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை” என்று முடித்தார்.

நாட்டின் மிகப் பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ், கேரளாவில் ஆட்சியை பிடிக்க பல யுக்திகளை கையாண்டும்... 41 இடங்களை தான் கைப்பற்ற முடிந்தது. அதே சமயம்... மத்திய ஆளுங்கட்சியான பிஜேபி எப்படியாவது கேரளாவை கைப்பற்ற துடித்து, ஏதேதோ அரசியல் நாடகங்களை நடத்தியது... ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை அடைந்தது.

மக்களின் தீர்ப்பு, மனிதநேயம், கடின கொடூர காலத்தில் தங்களுக்கு அன்பையும், உதவியையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் தங்களின் உண்மையான முதல்வன் பினராய் விஜயன் மற்றும் இடதுசாரி கட்சியை மீண்டும் அரியணையில் ஏற்றியுள்ளனர் என்பது அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.....

20210406224907682.jpg

கேரளா நேமசபா, பினராய் விஜயன் என்ற சிறந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய வரவேற்க ரெடியாகி கொண்டிருக்கிறது...