
உனை நித்தமும் கண்டு
ரசிக்கிறேன்...
எனை ஏனோ
கண்டு கொள்ள மறுக்கிறாய்..!
உன் அருகில் வர
ஆவல் கொண்டேன்...
எனை விட்டு
விலகி செல்கிறாய்..!
உனைத் தொட்டு விட
முயல்கிறேன்...
தொலை தூரம்
ஓடி ஒளிகிறாய்..!
உனை அணைத்துக் கொள்ள
நினைக்கிறேன்...
அளவில்லா தூரம்
கடந்து மறைகிறாய்..!
உனை நினைத்து... ரசித்து
வியக்கிறேன்...
எனை ஏனோ
ஏற்றுக் கொள்ள வெறுக்கிறாய்..!
நான் ஒன்றும்...
கொடிய ‘நெருப்பன்’ அல்லன்...!
நான் ஒன்றும்...
கொதிநிலை ‘கொரோனன்’ அல்லன்...!
உன்னுள்... எனை
எப்போது எடுத்துக்
கொள்ளப் போகிறாய்..?
கொரோனா முடியும் போதா...?
பொழுது விடியும் போதா..?
பதிவினைக் கடந்து விடாதே...
பதிலினைப் பகர்ந்து விடு...!
காத்திருக்கிறேன்...
கலையாத கனவுகளுடன்...!
கலங்கி நிற்கிறேன்...
இமை மூடா விழிகளுடன்..!

Leave a comment
Upload