தொடர்கள்
தொடர்கள்
விதுரன் சொல் ... - 14 - சுபஸ்ரீ

2021042611313620.jpg

“அறிவாளியின் அடையாளங்கள்: சிறந்ததை நாடுவது, இகழப்படுவதை நாடாதது, இறை நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை...”

நாடுவன எவை?

எதை நாட வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டும் என்பதில் மனிதனுக்கு ஒரு தீர்க்கமான சிந்தனை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனை உள்ள மனிதன் நல்ல நிர்வாகியாக உயர முடியும். நாட வேண்டியவை எவை என்பதை அறிந்து கொள்ளும் அறிவே பகுத்தறிவு என்பது.

சிறந்ததையே நாடவேண்டும் என்றார் ராபர்ட் பிரவுனிங் என்ற ஆங்கிலக் கவிஞர். This lowman goes on adding one to one his hundred is soon hit. This high man aims at a million and misseth a unit (சிறிய மனிதன் ஒவ்வொன்றாக நூறைச் சேர்க்கிறான். பெரிய மனிதன் பத்து லட்சம் இலக்கை நோக்கி சென்று அதில் ஒரு சிறிதை இழக்கிறான்.) திருவள்ளுவரும் இதையே,

“கான முயல்எய்த அம்பினில், யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”
- குறள் 772

என்கிறார். இந்தப் பண்பு தவிர ஒரு நல்ல மனிதனுக்கு இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தேவை. நல்ல மனிதனுக்குச் சொல்லப்பட்டுள்ள இந்த குணங்கள் ஒரு நிர்வாகியை மேன்மையான நிர்வாகியாய் உயர்த்தும் பண்புகள்.