தொடர்கள்
தொடர்கள்
சில சிக்ஸர்கள், சில பவுண்டரிகள்......- அலேக் நிரஞ்சன்

20210428120433713.jpg

வணக்கம் விகடகவி வாசகர்களே!!!

இந்த வாரம் தீவிரமா இருக்கும்... வெளில வராதீங்கனு strictஆ சொல்லிட்டாங்க..... சரி வாங்க, உள்ளே போவோம்...

மொதல்ல Black நடுவுல white இப்போ மஞ்சள்...என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க.... colour colour uh காளான் விடுவாங்க போல.....

Summer டைம்ல VGP famous ஆனா பரவால்ல.... ஆனா YGP???
“முறையா” பாடம் எடுக்காம... மட்டமா flop ஆனது VGP.... சாரி!!! YGP school இன் online classes!!

26 மே, புதன்கிழமை அன்று இரவு சந்திர கிரகணம் பிடித்துக்கொண்டது.... அது பேரு Super Blood Moon எனும் சிவப்பு நிலா.... “அது யாருகிட்ட அடி வாங்கிச்சோ” என்று ஆபீஸ்காரர் அனுதாபம்.

மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் விடாமல் பெய்யும் மழைக்கு காரணம்.... ‘yaas’ புயல் வீசுவதால் தான். வேடிக்கை என்னவென்றால் தங்கள் பிள்ளைகளுக்கும், அப்புயலின் பெயரையே வைக்க வேண்டும் என்று தாய்மார்கள் முண்டியடித்து கொண்டனர்.... KGF ஹீரோ என்று நினைத்துக்கொண்டார்களோ?!

‘புயல் கரையை கடக்கட்டும், இன்னும் மழை வெளுத்து வாங்கிட்டு இருக்கு!! அப்புறமா கூட பேர் வெச்சுக்கலாம்.... என்ன அவசரம்மா!’

Lockdown போற போக்க பார்த்தா... இன்னும் ரெண்டு ‘series’ பாக்கலாம் போலயே என்று இளைஞர்களும் மாணவர்களும் முடிவு!!!

அது செரி! Corona முடிவுக்கு வரும்போது... எவன் நடுதெருவுல இருக்கப்போறான்னு தெரியல.... Netflix “வெயிட்டா” கல்லா கட்றது உறுதி!!!

கன்னட மாநிலத்தில் மாட்டுடன் வீதிகளில் வலம் வரும் நாதஸ்வர கலைஞர் இசையில் மயங்கிய நம்மூர் இசையமைப்பாளர், ஒரு சான்ஸும் குடுக்கப்போகிறாராம். பூம் பூம் மாட்டுக்காரருக்கு.... வாழ்க்கை ஜூம் ஆகி போயிட்டு இருக்கு.
(Hint: Oscar நாயகனின் சொந்தக்காரர்)

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவ கணேஷ் என்பவர் இயந்திரப் பொறியியல் படித்து பட்டபடிப்பு முடித்து, சிலகாலம் கழித்து விவசாயதிற்கு திரும்பினார். இன்று தன் 27 acre நிலத்தில், தென்னந்தோப்பு வைத்து... ஏக்கருக்கு 2 லட்சம் ஈட்டி, பல்வகை பயிர்களை வளர்த்து (மீன்களும் கூட) லாபமில்லா தொழிலாக இருந்த விவசாயத்தை, இன்று காசு கட்டி, கல்லா பார்க்கும் வியாபாரமாக மாற்றியிருக்கிறார்.....

“பேசாம நாமளும் விவசாயம் பண்ணலாமா?” “அன்னமிட்ட கை நம்மை ஆக்கி வைத்த கை...”

என்னோட ‘retirement’ முன்னால இன்னும் சில படங்கள் நடிக்கணும்னு ஆசைப்படுறேன்னு உணர்ச்சிப்பூர்வமா பேசிருக்கார் தலைவர். “அண்ணாத்தே”!!!! சிங்கமொன்று புறப்பட்டதே......

மதுரையில், ஆட்சியர் அழைத்த conference மீட்டிங் குறித்த செய்தி வராத காரணத்தால் Dean சுகந்தி ராஜகுமார் அவர்களால் அதில் பங்கேற்க முடியவில்லை. இதுகுறித்து... ஆட்சியர் தன்னை மிரட்டுவதால், சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் VRS கோருகிறார்.

“இன்னும் ஒரு வாரம் ஊரடங்கு இருக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு!” என்று நியூஸ் கேட்டு கொண்டே ஆபீஸ் சென்றனர் உழைப்பாளர் பெருமக்கள்!!!!

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கேரள அரசின் உயரிய இலக்கிய விருதான ONV விருது மலையாளத்தவர் இல்லாதவர்க்கு முதல் முறையாக வழங்கப்படுகிறது.

“அங்கம்மாள் மோனுக்கு award கிட்டி, பக்ஷே பார்வதி மேனன் அப்ஜெக்ட் செய்யுன்னு.... எந்த செய்யேண்டது இப்போல், பினராயி கன்பூஷனில் பிரியாணி ஆயி. எண்டே தெய்வமே.....”

என்ன விகடகவி வாசகரே, வரட்டுமா!