தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி கொடுத்த நிலையில்...
தமிழில் பொறியியல் கல்வி என்பது சாத்தியமா?

B. சம்பத், மின்னனு துறை பொறியாளர், சென்னை.
இன்ஜினியரிங் தொழில்நுட்பம் என்பது உலகலாவிய தொழில்நுட்பம் ஆகும். வெவ்வேறு நாடுகளின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய பாடம் இது. எனவே இதற்குரிய மொழி பொதுவானதாக இருக்க வேண்டும். அது ஆங்கிலமே..! பொறியியல் அடிப்படை விதிகள், கருத்தாக்கம் என அனைத்தையும் ஒரு பிராந்திய மொழியில் மொழிபெயர்ப்பது அறிவீனம் என்பதைவிட, அர்த்தமில்லா காரியம். மிகவும் கடினமும் கூட. ஏனென்றால் இன்று உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தொழில்நுட்பங்கள் அனைத்தும், மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கண்டுப்பிடித்தது. அத்தோடு தமிழில் படிக்கும் மாணவர்களின் திறமையை உலகலாவிய ரீதியில் எடுத்து செல்வது சிரமம். “EVERY GLORY COMES ONCE WE ATTEMPT IN THEIR RESPECTIVE BLOSSOMS”. So என்னை பொறுத்தவரை value of original always excels.
க. கார்த்திகேயன், நாகை.
தமிழ்ல படிச்சி என்ன யூஸ். இங்லிஷ்ல படிச்சாலே இன்ஜினியரிங்குக்கு வேல கிடக்கல. இதுல தமிழ்ல படிச்சா அவ்வளவுதான். மதிப்பே கிடையாது. எந்தக் கம்பெனில வேலைக்கு போனாலும் இங்கிலிஷ் தெரிஞ்சா தான் மதிப்பே...
என்னமோ, வாழ்த்துக்கள்..
ம. அறிவழகன், திருச்சி.
மிக நல்ல விஷயம். தமிழில் படித்தால் கம்பெனியில வேலை தேடும் நிலை மாறி, தமிழில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் பல startup கம்பெனிகளை உருவாக்கி, பல பேருக்கு வேலை தரும் நிலை வரும்.
மா. ரகுபதி, வேளச்சேரி.
ஏங்க... அடிப்படை இன்ஜினியரிங் படிப்பான ஐடிஐ-யையே தமிழில் படித்தால் வார்த்தைகள் கடினமாக இருக்கும். எப்படி படிச்சு புரிஞ்சு பாஸ் பண்றது?
P. ரகுராமன், கடலூர்.
சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா - மிக மிக முன்னேறிய நாடுகள்... இங்கே யாரும் ஆங்கிலத்தில் பொறியியலோ, மருத்துவமோ படிப்பதில்லை... அவர்கள் தாய் மொழியில்தான் கற்கிறார்கள். அவர்கள் எல்லாம் தொழில்நுட்ப சாதனைகளில் தலைசிறந்து விளங்கவில்லையா? சொந்த தாய்மொழியை கேவலப்படுத்துவதில் நம்ம ஆளுங்களை மிஞ்ச யாராலும் முடியாது..! துயரம்..!
T. அருள்மணி, பொறியாளர், சிதம்பரம்.
தமிழில கற்பது நல்லது தான்.. ஆனா, ஆங்கில சொற்களை தமிழில் மொழி பெயர்க்க முடியாத பட்சத்தில், அதை தமிழில் அப்படியே உபயோகிக்கனும்... அப்படி இருந்தால் இந்த திட்டம் உருப்புடும். உதாரணத்துக்கு மின்னியல் துறையில் உள்ள சில சொற்களை
1) triacs - “சுரங்கி”
2) Vector Quantization - “நெறிமச் சொட்டாக்கம்”
3) Weather Radar - “வானிலை கதிரலைக் கும்பா”
4) Vestigial Side-Band Modulation - “எச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம்”ன்னு படிச்சா மாணவர்கள் மட்டுமில்ல வாத்தியார்களும் தெறிச்சு ஓடிடுவாங்க.
தி. வளவன், தர்மபுரி.
இந்தத் திட்டத்தின் மூலம் பிற்காலத்தில் நம் சந்ததியினர் முன்னேறுவது உறுதி.. இது குறுகிய பலனைத்தராது, நெடுங்கால பயனுண்டு.
கோ. சௌந்தரராஜன், அண்ணாநகர்.
ABAP என்ற high-level programming language முழுசும் ஜெர்மன் மொழியில் உருவாக்கியது. ஜெர்மன் கம்பெனி - “SAP SE”.. “Allgemeiner Berichts-Aufbereitungs-Prozessor” (ABAP)ன்னு ஜெர்மன் மொழியில இருந்ததை அதுக்கப்புறம் தான் அதை “Advanced Business Application Programming” (ABAP)ன்னு ஆங்கிலத்துல மாத்தினாங்க. இன்னைக்கு உலகத்துல இருக்குற முக்கால்வாசி பிஸினஸ் கம்பெனிங்க, ABAP SAP தான் உபயோகிக்கிறான். அவங்க தாய்மொழியில தானே இத உண்டாக்குனாங்க. அப்ப தமிழ்ல பொறியியல் படிப்பு படிச்சா என்ன தப்பு?
வ. மணிகண்டன், கடலூர்.
தாய் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு 100% பணி நியமனம் செய்ய அரசு சட்டம் இயற்றினால் இதை ஒப்புக்கொள்ளாலாம்.
சி. தர்மராஜ், செங்கல்பட்டு.
பொறியியல் படிப்புக்கு மாணவர்களிடம் வரவேற்பு இல்லை. ஆங்கிலத்தில் படிச்சவனே தெருவிலே நிக்குறான். இந்த லட்சணத்துல இத தமிழ்ல படிச்சி அப்படியே வாழ்ந்துட்டாலும்..!!!!
சி. வேணு, மடிப்பாக்கம்.
தமிழில் படித்தால் தமிழ்நாட்டை விட்டு தாண்ட முடியாத நிலை உருவாகும். கிணற்று தவளை கதை தான். மாநிலம் தாண்டி, நாடு தாண்டி வேலை கிடைக்காது. விபரீதம்.. வேண்டாம்..

Leave a comment
Upload