தொடர்கள்
பொது
இனி... ‘கொரோனா பயம் எதற்கு’?! – ஆர்.ராஜேஷ் கன்னா.

2021042813503710.jpg

மூன்றாம் உலக போர் தொடங்கியிருந்தால் கூட இந்நேரம் முடிவுக்கு வந்திருக்கும். சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் நோய் பரவல், உலகை புரட்டிபோட்டு தன் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க.... பல்வேறு நாடுகள் போட்டி போட்டுகொண்டு தடுப்பூசிகள் கண்டுபிடித்து, தயாரித்து தனது மக்களுக்கும், அயல்நாட்டு மக்களுக்கும் செலுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தனது உருவத்தை அவ்வப்போது மாற்றி கொண்டு மனித இனத்தை தாக்கி, தனது கோர பசிக்கு மனிதர்களை இரையாக்கி கொள்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பலர் தப்பி பிழைத்து விடுகின்றனர்.

சீனாவில் இருக்கும் வாஹுன் ஆய்வகத்தில் இருந்து தான், கொரோனா வைரஸ் வெளியேறியது என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி வந்தார். அதன்பின் அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் கட்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் புதிய அதிபர் பொறுப்பேற்று கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு தான்... மனித தவறுகளால் தான் சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறி உலகம் முழவதும் பரவியது என பேஸ்புக் பயனாளர்கள் தனது பதிவுகளில் பதிவிட்டு வந்ததை அந்நிறுவனம் வெளியிட்டது.

தனது நாட்டில் உள்ள ஆய்வகங்களில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவவில்லை என்று சீன ஆட்சேபம் தெரிவித்து பேஸ்புக்கில் வெளியாகியிருந்த, சீன ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா பரவியது என்ற பதிவுகளில் இருந்த வாசகத்தை நீக்கம் செய்தது.

தற்போது மீண்டும் அமெரிக்க ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பேஸ்புக் தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டு, கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து மனித தவறுகளால் தான் வெளியேறியது என பதிவுகள் வெளியாகி உள்ளது.

20210428135125625.jpg

கொரனா வைரஸ் மனித உடலில் புகுந்த பின் கடும் காய்ச்சல், நாவறட்சி, மூச்சு திணறல் போன்ற உபாதைகள் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் 2-வது பரவலில், அதிக உயிரிழப்புகள் இருந்தாலும்... ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களிடம் சிகிச்சை பெற சென்று விட்டால், பல கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் பரிபூரணமாக நலம் பெற்று விட்டனர் என்ற நற்செய்திகளும் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் மனிதர்களை தாக்கிய பின், குணமடைந்தவர்களின் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி முன்பை விட பெரிய அளவு கூடியிருக்கும். கொரோனோ நோய் பாதிப்பிலிருந்து குணமானவர்கள், கூடுதலாக நோயெதிர்ப்பு சக்தி பூஸ்டர் மருந்துகளையோ அல்லது ஊசிகளையோ பயன்படுத்த தேவையில்லை.

கொரோனா நோய் பாதித்தவர்களின் ஆரம்ப அறிகுறிகளுக்கு பின்பு... எலும்பு மஜ்ஜையில் இருக்கும் பி செல்கள் தங்கள் மெமெரியில் கொரோனா செல்களின் வடிவங்களை, அடுத்த 12 மாதங்கள் நினைவில் வைத்து கொண்டிருக்கிறது.

கொரோனா பாதித்து குணமான நபரின் உடலில் இருக்கும் செல்கள், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியாக பல ஆண்டுகள் நமது உடலில் நீடித்து செயல்படும். இதனால் கொரோனா நோய் வந்து பாதித்து குணமானவர்கள்.... அரசு சொல்லும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தாலே, பல ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் வாழலாம். இது கடந்த ஆண்டு கொரோனா அலையின் போது உலகம் முழவதும் விஞ்ஞானிகள் எடுத்த தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

கொரோனா நோய் பாதிக்கப்படாமல் இருப்பவர்கள், தடுப்பூசியை போட்டுகொண்ட பிறகு, கொரோனா வைரஸ் பற்றிய மெமரியை மனித செல்கள் நினைவில் வைத்துகொள்ளும். கொரோனா வைரஸ் உடம்பிற்குள் புகும் போது அதனை தாக்கி அழித்து மனித உயிரை காப்பாற்றும் திறன் தடுப்பூசிக்கு உண்டு. தடுப்பூசி ஒருவர் போட்டுகொண்ட சில காலங்களுக்கு பின், மீண்டும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுகொண்டால்... மனித உடம்பிற்குள் நுழையும் கொரோனா வைரஸ், நமது உடலிலுள்ள நோயெதிர்ப்பு மண்டலங்களால் அழிக்கப்பட்டு, நம்மை காக்கும் என்று மற்றொரு ஆய்வு முடிவும் வெளியாகி உள்ளது.

கொரோனா நோய் தொற்று வந்து குணமானவர்கள் மற்றும் கொரோனா நோய் தொற்று வராமல் இருக்க தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எலும்பு மஜ்ஜையில் கொரோனாவிற்கான நோயெதிர்ப்பு செல்கள் எப்போதும் தயாராக இருந்து, மனித உடலில் நுழையும் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறது என புதிய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தற்போது கறுப்பு பூஞ்சை நோய், மஞ்சள் பூஞ்சை நோய் என கொரோனா தொற்றிற்கு ஆளானவர்களை தாக்குகிறது என்று செய்தி வருகிறது. கொரோனா நோய் தடுப்பிற்கு முன்பு அல்லது கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட பின் அதிகளவில் ஜிங்க், இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொண்டால் இந்த வகையான பூஞ்சை நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஜிங்க் மாத்திரை அதிகமாக உட்கொண்டால் பூஞ்சைகள் வளர்வதை அதிகபடுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இனி கொரோனா வரும் என்ற பயம் எதற்கு…. மன உறுதியுடன் இருந்தாலே கொரோனா வைரஸ்ஸை பூமியை விட்டே விரட்டலாம்!