தொடர்கள்
கவிதை
புரிந்து விடில்....! - சி. கோவேந்த ராஜா.

20210504155921666.jpeg

நான்… என் பெயரில்...
காதல் சேமித்தேன்...!

நீ… உன் பெயரில்...
காதல் சேமித்தாய்....!

அளவு... சிறிதாய் சேர்ந்தது...!
இன்பம் இரு மடங்காய்...பெருகியது...!

வா... இருவரும்... சேர்ந்து..
நம் பெயரில்...
காதல் சேமிப்போம்....!

அளவு... பெரிதாய் சேர்ந்தது...!
பேரின்பம் பன்மடங்காய்... பெருகியது...!

நான் என் பெயரிலிருந்து...
காதல் செலவு செய்தேன்...!

நீ உன் பெயரிலிருந்து...
காதல் செலவு செய்தாய்....!

அளவு சிறிதெனினும்...
இன்பம் இரு மடங்காய்... பெருகியது...!

வா... இருவரும்... சேர்ந்து..
நம் பெயரிலிருந்து...
காதல் செலவு செய்வோம்....!

அளவும்... பெருகும்...!
பேரின்பமும். வளரும்...!

இக் கணக்கு புரிந்து விடில்...
நம் வாழ்விற்கு...
நல் வாழ்விற்கு... விடியல் தான்...!
நம் குடிலும்... அழகு மாளிகை தான்...!

கொடுத்தாலும்.... மகிழ்வு...தான்...
பெற்றாலும்... மகிழ்வு.. தான்...
பகிர்தலால்.... மகிழ்வு.... பெருகிடும்...!

இக் கணக்கு புரிந்து விடில்...
நம் வாழ்விற்கு...
நல் வாழ்விற்கு... விடியல் தான்...!
நம் குடிலும்... அழகு மாளிகை தான்...!

இனிய இதயம் இயங்கட்டும்...!
உன்னத உலகம்.... இசைக்கட்டும்...!

இரு இதயங்களும்...
இனிதாய் இணைந்து இசைக்கட்டும்...!
ஓர் உலகமாய்... இனிதாய்... இயங்கட்டும்...!

பேரின்பமே... பெருவாழ்வு...!
பெருவாழ்வே... பேரின்பம்...!