தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 39 - காவிரிமைந்தன்

2021011206342310.jpg

20210104161412313.jpg

காவிரி மைந்தன்

20210501220636223.jpg

அஜந்தாவின் ஓவியக்கோலம்!

அன்பே!

நீ எந்தன் நினைவோடு பாடும் ராகம்!

என்றென்றும் எனக்கந்த நினைவே போதும்!

பால் மழலை போல் நானும் பைந்தமிழை உச்சரித்துப் பழகுகின்றேன் அழகுதமிழ் காதல் வேதம்!

சீரோடும் சிறப்போடும் எந்தன் கண்ணே.. நீ சிங்காரம் செய்தபடி எந்தன் முன்னே.. பூரணமாய் புன்னகையை முன்வைத்து சிறு கண்ணசைவில் எனை அழைக்கும் மோகனமே!

பாடுகவி என்று நீயும் ஆணையிடு! பரணி முதல் பல்லவிகள் யாவும் தருவேன்! பல்லவனின் சிலைபோல் வந்து பருவத்தின் ராஜாங்கம் நடத்துகின்றாய்!

கர்வமுடன் நானுந்தன் அருகில்வந்து பெறவிருக்கும் விருந்தினையே நாடுகின்றேன்!

அசையும் கைவிரல் ஓவியம்வரைதல்போல் அங்குமிங்குமாய் நகர்ந்திட.. ஆசையின் தாலாட்டு அடக்க முடியாமல் அங்கங்கே பாற்கடல் பொங்கி வழிந்ததே!

ஓசைகள் அவ்வப்போது உதடுகளிடையே மட்டும் உடன்பாடு கொண்டிட.. வீணையாய் உன் மேனியை மெல்லவே வளைத்திட்டு தாகம் தணித்திட முயற்சி மேற்கொண்டேன்!

தங்குதடையில்லாமல் சென்று கொண்டிருந்த தாமிரபரணியது.. கச்சை விலகியபோது நின் கரங்கள் விரைந்துவந்து மூடிக்கொள்ள, தாளாத் தவிப்பில் என் மனம் தத்தளிக்க.. தர்மயுத்தம் சற்று நேரம் நம் இருவருக்கும்! தளர்ச்சியினை நின் கரங்கள் காணும்வரை.. காத்திருப்பேன் பெண்மயிலே நானும் அங்கே!

ஆசை பெருகிவந்தாலும் அச்சம் தடைபோடும் என்ற பெண்மையின் இலக்கணத்தை நீவிர் அறிவீரன்றோ?

இருளின் திரைகள்வந்து இங்கே சுற்றிநிற்க.. இளமைக்கோலம் காண இதுவன்றோ காலம் என்றாய்!

பதுமை போல சிலையா? சிலையைப் போல பதுமையா?

எதுதான் உண்மை என்கிற மயக்கம் கொண்டேன்!

என்னிலே நீயும் சாய்ந்து எழுதாத கவிதை எழுத.. உன்னிலே பாதியாக மாறி நானும் உள்மூச்சு வாங்க..
அன்பிலே நாமே காணும் அஜந்தாவின் ஓவியக்கோலம்!

தீராத மோகங்களெல்லாம் தீர்த்திட வேண்டும் கண்ணே!

அகல்விளக்கின் திரியை அணைப்பதா வேண்டாமா என்றேன்!

அது அதன் பணியைக் கொஞ்சம் செய்யத்தான் விடுங்கள் என்றாய்!

மெளனத்தில் வீழ்ந்தவளை ஒன்றிரண்டு வார்த்தை சொல்லவைக்க.. எத்தனை ஆயத்தங்கள் இங்கே நான் செய்வது என்றேன்!

‘ம்’ என்ற சிருங்காரம் தொடர்ந்ததம்மா!

சங்கீத வீணைபோல் இருந்ததம்மா!!

மலர்ப்பொய்கை ஆடையினைச் சூடிக்கொண்டு நதிமகளும் நடந்துசெல்லும் அழகைப்போல.. அங்கங்கள் மூடிக்கொள்ள கரங்கள்சூடும் காதலியே.. உன் செல்வாக்கு தனைக்கண்டு கண்மயங்கி நான் நிற்க.. அகல்விளக்கு அவ்வப்போது உன் அவயங்கள் காட்டியதே!

அதன் பணியை செய்யட்டும் என்று நீயும் அப்போது சொன்னாயே.. அறிகிறேன் அதன் பொருளை இப்போதே!!

பலத்த கரகோஷம் செய்து உமைப் பாராட்ட நினைக்கின்றேன் கண்ணா என்றாய்!

தடையென்ன தர்மதேவி நடக்கட்டும் என்றேன்.. அதற்கு முன் விளக்கின்திரி குறைத்திடு என்றாய்!

அணைத்திடு என்றாலும் அடியேன் ஏற்பேன்!

ஆசையில் தவித்திடும் உன்னைக் கண்டால் பாவம் என்பேன்!

ஐப்பசியா.. மார்கழியா.. இந்தக் குளிர்?

அணைத்தவுடன் விலகும் பார் அத்தனையும் என்றேன்!

ஆம் என்றாய் அப்போது!

அது சரி நீ இப்போது என்று உன்மீது படையெடுத்தேன்!

சரிவிகத கலவையினை கலவி என்றே கண்டெடுத்த சான்றோனைப் போற்ற வேண்டும்!

இதழ்கவ்விக் கொய்வதற்கு இதயம் கேட்க.. இதற்கெல்லாம் கேட்பதுண்டோ என்றே பகர்ந்தாய்!

இடைவேளை இல்லாமல் நடக்கும் போரில் இருவருக்கும் இழப்புகளே இல்லை எனலாம்!

பரிதவிப்பு படபடப்பு எல்லாம் மாறி பருவகங்கை ஓடிவந்து பாய்ந்தது காண்!

அருவிமகள் உன் விழியில் உற்றுநோக்க தழுவிடவே வருக என ஆணைவர.. மறுபடியும்.. மறுபடியும்.. மற்றும் அங்கே..