நெருக்கடி நேரத்தில் செய்யவேண்டியது என்ன?
சகோதரிகளே,
மனநல பிரச்சனையில் நெருக்கடி நிலை எழுவது என்பது மிகவும் பயம் கொள்ளவைக்கும் ஒன்று. இது போன்ற ஒரு நிலை ஏற்பட நாம் விரும்புவதில்லை.
ஆனாலும் அது நிகழ்கிறது.
இந்த நெருக்கடி நிலையில் எவ்வாறு தயாராவது? உங்கள் நண்பர் அல்லது நெருக்கமானவருக்கு உதவுவது எப்படி என்பது கீழே தரப்பட்டுள்ளது. இதன் முதல் படி ஒரு நெருக்கடி திட்டத்தை உங்கள் நெருங்கிய பாதிப்படைந்தவர்களுடன் பேசி முடிவு செய்ய வேண்டும். இந்த செயல்முறையில் ஒரு தெரபிஸ்ட் உங்களுக்கு உதவ முடியும். பாதிக்கப்பட்டவருடன் இணைந்து, நீங்களும் அவரின் தெரபிஸ்டும் சேரும் ஒரு சந்திப்பு நிகழும்போது இதற்கான செயல்முறையை வடிவமைக்க இயலும். இதனை ஒரு தனிப்பட்ட நோட்டுப் புத்தகத்தில் அல்லது உங்கள் மொபைல் செயலியின் குறிப்புகள் பதிவு செய்யும் இடத்திலோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.
* உங்கள் பாதிக்கப்பட்ட நண்பருடைய தெரபிஸ்ட், மனநல மருத்துவர் மற்றும் குடும்ப மருத்துவர் ஆகியோரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்.
* அருகிலுள்ள நெருக்கடிநிலை உதவி மையம் - சினேகா.
* நெருக்கடி நிலையில் உதவி செய்யக்கூடிய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொலைபேசி எண்கள்.
* அவசரகால உதவி செய்யும் மருத்துவமனைகள் மற்றும் நெருக்கடி நிலை உதவி மையங்கள் ஆகியவற்றின் முகவரிகள்.
* உங்களுடைய முகவரியும் தொலைபேசி எண்ணும். உங்களுடைய தொலைபேசி எண்ணை எவ்வாறு உபயோகிப்பது என்று ஸ்பீட் டயல் முறையில் டயல் செய்ய வசதியாக பதிவு செய்து தருதல்.
* தங்கள் நோய்வாய்ப்பட்ட நண்பரின் இதுவரையிலான மருத்துவ கண்டுபிடிப்பு குறிப்புகள் மற்றும் மருந்துகளின் உபயோகக் குறிப்புகள் ஆகியவற்றின் நகல்கள்.
* ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைகள் மற்றும் தேவையான முக்கிய விவரங்கள்
* அவரை தூண்டும் விஷயங்கள் அதாவது “அவர்முன் அடுப்பினை ஏற்றுவதை தவிர்க்கவும்”. “முன் கதவை பூட்ட வேண்டாம்” போன்ற குறிப்பான விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* அவர் தானே அமைதியடைய செய்ய வேண்டிய சில விஷயங்கள் எவை எவை என்பதை அவரது சொந்த அனுபவத்தின் மூலமாய் தெரிந்து கொண்டு அதனை எல்லோருக்கும் தெரியப்படுத்துதல்.
* ஏற்கனவே நெருக்கடி நிலையை வெற்றிகரமாக சில நிகழ்வுகளை உபயோகித்து சமாளித்து இருந்தால் அது பற்றிய குறிப்புகள். அவை இதுவும் கடந்து போகும் என்று நினைவூட்ட உதவும்.
* அருகிலுள்ள காவல் நிலைய உதவி தொலைபேசி எண்.
அந்த நண்பரிடம், இதை நீங்கள் வேறு சில நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்கலாமா என்று கேளுங்கள். இந்த நம்பிக்கையான தனிமனிதர்கள் ஒரு குழுவாக இணைந்து, இவருடைய மீட்பு மற்றும் நெருக்கடி நிலையை கையாள்வதில் உதவி செய்வார்கள்.
நோயாளியோடு நீங்கள் இணைந்து சில தன்னாறுதல் அளிக்கும் மற்றும் சமதளத்தில் இருக்கச் செய்யும் செயல்பாடுகளை அவருக்கு பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்தினால், அவரால் முக்கியமான தூண்டப்படும் தருணங்களில் அல்லது நெருக்கடியான நேரங்களில் மனச்சோர்வு இன்றி அந்த நிலையை சமாளிக்க முதல் முயற்சியை அவர்களாலேயே எடுக்க முடியும். பின்னர் வெளியிலிருந்து உதவிக்காக அவர்கள் காத்திருக்கலாம்.
இந்த வலைத்தளம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவி செய்யும்.
www.thunai.org. இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது.
மனம் பேணுவோம்....
Leave a comment
Upload