தொடர்கள்
பொது
கொரோனாவால்... தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கப்படுமா?! - ஆர் .ராஜேஷ் கன்னா

20210503134722616.jpg

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து குணமானவர்களுக்கு, உடலில் தீடீரென சர்க்கரை அளவு கூடுகிறது என்றும் தாம்பத்திய வாழ்க்கையில் தொய்வு ஏற்படுவதாகவும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் விந்தணுக்களை எடுத்து பரிசோதித்து பார்த்த போது, கொரோனா வைரஸ் பாலியியல் ரீதியாக பரவுவதில்லை. கொரோனா நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டாலும், நோயாளியின் விந்தணுவில் கொரோனா நோய் தொற்று வைரஸ் காணப்படவில்லை என அமெரிக்கன் மெடிகல் அசோசியேஷன் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மீண்டு இருந்தாலும், இறந்த கொரோனா வைரஸ் செல்கள் சில உடம்பில் இருக்கும். இதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள், குணமடைந்த 102 நாட்களுக்கு பிறகு Rt-PCR எனும் கொரோனா வைரஸ் பரிசோதனை தேவைப்பட்டால் மீண்டும் செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டவர்கள், உடல் வலிமையை இழந்து இருப்பார்கள். கொரோனா வைரஸ் தாக்கிய பின், நோயாளியின் உடம்பில் இருந்து சத்துக்கள் எல்லாம் வெளியேறியதால், உடல் பலகீனமாகி இருக்கும். அந்த சமயட்தில் தாம்பத்தியம் கொள்வது என்பது இயலாத காரியாமாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமான 30 நாட்களுக்கு பின், மெல்ல தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். அதுவும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவரின் உடல் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

மற்றொரு ஆய்வில்... கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நபரின் விந்தணுவில், சில கொரோனா வைரஸ் காணப்பட்டது. விந்துப்பைக்கு செல்லும் ரத்த நாளங்கள் முலம் இந்த கொரோனா வைரஸ் பயணப்பட்டு சென்று இருக்கலாம். விந்துப்பையில் நுழைந்த கொரோனா வைரஸ் விந்தணுக்களின் ஆய்வின் போது தெரிந்தது. விந்துவில் இருந்த கொரோனா வைரஸ் முலம், ஜெனடிக் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்பது ஆய்வின் ஆறுதலான முடிவு.

கொரோனா நோய் தொற்றிற்கு உள்ளான நபர்களின் பிறப்புருப்புகளில் சுரக்கும் திரவங்களில் கொரோனா வைரஸ் காணப்படவில்லை என்றாலும், கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு குணமான 30 நாட்களுக்கு பின்பு தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்கள், ஆணுறை அணிந்து உறவு கொண்டால் மிகவும் பாதுகாப்பானது என கொரோனா முதல் அலையின் போது சீன ஆய்வாளர்கள் ஆய்ந்து, இந்த முடிவினை தெரிவித்து இருந்தார்கள்.

20210503134750350.jpg

தற்போது, கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையில் குணடைந்த கொரோனா நோயாளிகளின், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு தீடீரென அதிகரித்து விடுகிறது. சர்க்கரை நோய் இல்லாத சிலருக்குக் கூட, சர்க்கரையின் அளவு 200- 400 mg/dl வரை அதிகரித்து காணப்படுவதால், சர்க்கரை அளவை குறைக்க இன்சுலினை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

கொரோனா நோயாளிக்கு இதற்கு முன்பு சர்க்கரை நோய் பாதிப்பில்லை என்றாலும், சிகிச்சைக்கு பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதற்கு, சிகிச்சையின் போது எடுத்துகொண்ட ஸ்டிராய்டு மருந்துகள் கூட காரணமாக இருக்கலாம். கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 10 சதவீதம் பேருக்கு, சர்க்கரை நோய் உருவாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களின் நுரையீரலில் இருக்கும் Ace 2 receptor, கணையத்தில் இருக்கும் Ace 2 receptor, beta cells கொரோனா வைரஸ் தாக்குவதால் சர்க்கரை நோய் வருகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பின்பு வரும் தீடீர் சர்க்கரை நோயை 180 நாட்களுக்குள் உரிய சிகிச்சை முலம் ரத்த சர்க்கரை அளவை குறைத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வகையான தீடீர் சர்க்கரை நோய், ஆயுள் முழுவதும் நீடிக்குமா என்று ஆய்வாளர்கள் ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

20210503134825307.jpg

கொரோனா வைரஸ் நுரையீரல் தொற்றாக இருந்தாலும், இந்த வைரஸ் ஆண்களை பாதிக்கும் போது, நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. குணமான நோயாளி, 30 நாட்களுக்கு பின் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர்களுக்கு விறைப்பு தன்மை (Erectile Dysfunction –E D) ஆறு மடங்காக குறைந்து விடுகிறது. இதனால் பல இளைஞர்கள், தங்களது எதிர்காலமே சூன்யமாகி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

கொரோனா பாதித்த நபர்களுக்கு தங்களின் ஆண் குறி விறைப்பு தன்மை கிட்டத்தட்ட ஆறு மடங்கு குறைந்து, ஆண்மை தன்மை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வு தரவுகள் சொல்லும் போது அதிர்ச்சியாக உள்ளது. அடுத்த கொரோனா வைரஸ் அலை எப்படி உருவெடுத்து, பரவி தாக்குதல் நடத்துமோ என்று அஞ்சிய சீன அரசு, தனது நாட்டவர்கள் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என சென்ற வாரம் அதிரடி அவசர அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான காரணம்... கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் இளைஞர்கள், கிட்டதட்ட விறைப்பு தன்மையை, 6 மடங்கு இழந்து ஆண்மையை இழக்கிறார்கள் என்ற ஆய்வு தகவலின் காரணமாகவும் கூட இருக்கலாம்.

கொரோனா தாக்குதலிலிருந்து இளைஞர்கள் தங்களை காத்து கொள்ள... கட்டாயம் முககவசம் அணிவதும், சமுக இடைவெளி கடைப்பிடிப்பதும் , கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்வது மற்றும் தடுப்பூசிகளை தாமதிக்காமல் போட்டுகொள்வதும் தான் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க எளிய வழி என்பதோடு, எதிர்கால தாம்பத்திய வாழ்க்கையை சுகமாக எந்த தடையுமின்றி அனுபவிக்க முடியும் என்று உட்சுரப்பியல் மற்றும் மருத்துவ பாலியல் (endocrinology and medical sexology) ரோம் பேராசிரியர் இம்மானுலி ஏ ஜன்னி என்றவரின் ஆய்வறிக்கையை இத்தாலி பல்கலைகழகம் வெளியிட்டது.

நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், மனிதனின் தாம்பத்திய உறவின் முக்கிய அம்சமான ஆண்மைத் தன்மையை பாதிக்க தொடங்கியிருப்பது என்பது தான் லேட்டஸ்ட் உலக நாடுகளை கவலையுடன் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!