தொடர்கள்
விருது
மலையரசியின் மகளுக்கு "மதிப்பான பெண் விருது..” - ஸ்வேதா அப்புதாஸ்...

இந்தியாவின் மிகச் சிறந்த மதிப்பான பெண்களுக்கான விருதுகளை இந்திய ரவுண்டு டேபிள் சங்கம் வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான விருதை, இந்தியாவில் உள்ள ஒன்பது பெண்களுக்காக இந்த சங்கத்தின் லேடீஸ் சர்க்கிள் வழங்கியுள்ளனர்.

20210503195949115.jpg
தென் இந்தியாவில் ஊட்டியை சேர்ந்த ஷோபனா சந்தரசேகருக்கு “WOMEN OF WORTH AWARD” வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா காலத்தில் இந்த விருது ஆச்சிரியமாக பார்க்கப்படுகிறது. இந்த அபூர்வ விருதை பெற்ற ஷோபனா சந்திரசேகரை தொடர்பு கொண்டு விகடகவிக்காக பேசினோம்...

20210503200134489.jpg

“இந்த “WOMEN OF WORTH AWARD” எனக்கு கிடைத்தது ஒரு ஆச்சிரியமான ஒன்று. அதே வேளையில் இந்த விருது ‘மலைகளின் அரசி’க்கு கிடைத்த ஒரு சிறந்த விருது என்று தான் நான் கருதுகிறேன். இந்திய ரவுண்டு டேபிள் சங்கம் பெண்கள் பிரிவு, இந்த விருதை கொடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள சமூக அக்கறை கொண்ட பெண்களை கூர்ந்து கவனித்து வரும் இந்த சங்கம், அவர்களின் சிறந்த சேவைக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கிறது. அந்த வகையில் “MAKE OOTY BEAUTIFUL” என்ற எங்களின் கிளீன் ப்ராஜெக்ட் இயக்கத்திற்கு அந்த விருது கிடைத்திருப்பது உற்சாகமான ஒன்று.

20210503200913682.jpg
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் MOB ப்ராஜெக்ட் துவக்கப்பட்டு, குப்பையாக இருந்த ஊட்டி நகரை பளிச் என்று மாற்றும் திட்டத்தை துவக்கி ஸ்வட்ச் பாரத் திட்டத்திற்கு முன்பே இவர்கள் பல ஆக்கபூர்வமான வேலைகளை செய்து முடித்துள்ளனர் என்பது சிறப்பான ஒன்று.

20210503202213527.jpg
“MOB ப்ரொஜெக்ட்டின், எங்களின் முதல் அசைன்மென்ட்... ஊட்டி அரசு மேல் நிலை பள்ளியின் காந்தி மைதானத்தை சுத்தம் செய்தது தான். எங்கள் குழுவில் பத்து பெண்கள் பணிபுரிந்தனர். தேச தந்தை மகாத்மா காந்தி வந்து சென்ற மைதானம் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது குப்பை, பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்கள் குவிந்த காணப்பட்டன. துணிந்து துர்நாற்றத்தையும் சகித்து கொண்டு, அந்த மைதானத்தை முழுவதுமாக சுத்தம் செய்தோம்.

20210503203006566.jpg
அந்த வேலையை செய்து முடிக்கவும், அடுத்து எங்களின் பார்வையில் பட்ட மிக மோசமான இடம்... ஊட்டி அரசு மேல் நிலை பள்ளி. குடிமக்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டிருந்த இடமாகவும் மேலும் எலிகளின் நிரந்தர இருப்பிடமாக இருந்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்தப் பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தோம். தன்னார்வ ஆசிரியர்களும், மாணவர்களும் உதவி செய்தது எங்களின் இயக்கத்திற்கு ஒரு பூஸ்ட்டிங்... கரண்ட் பில் கட்டாததால் இருளில் மூழ்கியிருந்த பள்ளிக்கு, ஒளிபெற செய்தது எங்களின் இயக்கம் என்பதில் மிக்க மகிழ்ச்சி தான்.

இவர்களின் இந்த சமூக பணிக்கு பின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான கணேஷமூர்த்தி, அந்தப் பள்ளியை மிக உயர்ந்த அழகான மாடல் பள்ளியாக மாற்றியதை எவரும் மறக்கவில்லை. அதன் விளைவு மாவட்டத்தின் முக்கியக் கல்வி அலுவலகங்கள் கூட இங்கு செயல் படுகிறது என்பது கூடுதல் தகவல்.

20210503203934546.jpg
மேலும் அவர் கூறும்போது... “ஊட்டி நகரில் உள்ள பஸ் ஷெல்டர்கள் மற்றும் பொது சுவர்களை சுத்தம் செய்யும் பணியில், எங்களின் இயக்கம் இறங்கியது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறுபதாவது பிறந்த நாள் போஸ்டரை அப்புற படுத்தினபோது, அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை தாக்க வந்துவிட்டனர். பின்னர் பொது சுவர்களில் யாரும் எந்த போஸ்டர்களையும் ஒட்ட கூடாது என்று மாவட்ட நிர்வாகம் மாற்றும் நகராட்சி மூலம் உத்தரவை பெற்றது எங்களின் இயக்கத்தின் முக்கிய பங்கு.

20210503204102966.jpg
பள்ளிகளில், மாணவர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வது, பிளாஸ்டிக் பொருள்களுக்கு குட் பை சொல்வது என்ற விழிப்புணர்வை பள்ளிகளுக்கு சென்று ஏற்படுத்தினோம்....

20210503211818480.jpg

கர்நாடக மற்றும் மகாராஷ்டிரத்தில் எப்படி அரசின் வழிமுறைகளை பின்பற்றி பிளாஸ்டிக் தடை மற்றும் குப்பை கலெக்க்ஷன் செயல் படுத்துவதை ஆராய்ந்து, நாங்களும் அதை பின்பற்றி GREEN BRIGADE தன்னார்வு தொண்டர்களை உருவாக்கி, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க, எங்களின் பணி தொடர்ந்தது.

20210503203820266.jpg
முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாகு தான் நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆக்கபூர்வமான பணியை துவக்கினார். பெரிய அளவில் அந்த முயற்ச்சி வெற்றியை தந்தாலும், அவர் சென்ற பிறகு மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் அரக்கன் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு பின் தான் எங்களின் இயக்கம் முழுவீச்சில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழ்ப்புணர்வு மற்றும் நேரடி நடவடிக்கையில் இறங்கினோம்.

20210503205839620.jpg
தற்போதைய கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா பொறுப்பேற்றவுடன் சுற்றுசூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் அரக்கனை முற்றிலுமாக ஒழிக்கும் பணியில் இறங்கினார். அவருடன் எங்களின் MOB இயக்கம் கைகோர்த்து, களத்தில் இறங்கினோம்... ஊட்டி மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பாறை முனீஸ்வரன் கோயிலுக்கு பின்புறம் உள்ள நடை பாதையினை சுத்தம் செய்து, அங்குள்ள சுவரில் ஓவியங்களை வரைந்தோம்...

20210503210122398.jpg

கலெக்டர் நேரடியாக வந்து, அவரும் ஓவியத்தை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எவ்வளவோ முயன்றும் அந்தப் பகுதியை சுத்தம் செய்ய முடியவில்லை...

20210503210247362.jpg

காரணம் அங்கு உள்ள டி கடைகள் மற்றும் குடிமகன்கள் குடித்து விட்டு சிறுநீர் கழித்து, அந்தப் பகுதியை மிகவும் அசுத்தம் செய்து வருகின்றனர். என்ன செய்ய... பொது மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை, அது இல்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் சொல்லுங்க” என்று விரக்தியுடன் தொடர்ந்தார்........

“மறக்கமுடியாத நிகழ்வுகள் உள்ளன... உலக சுற்றுசூழல் தினத்தன்று, ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலனியை சுத்தம் செய்தோம்.

2021050321042472.jpg

அப்பொழுது மரம் நடும் நிகழ்வுக்கு ஊட்டிக்கு வந்திருந்த நடிகர் விவேக்கை அழைத்து கொண்டு நேரில் வந்து எங்கள் வேலையை பார்த்தார் மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசன்ட் திவ்வியா. நடிகர் விவேக் எங்கள் பணியை பாராட்டியதை மறக்கமுடியாது... தற்போது விவேக் நம்மிடையே இல்லை என்பது மிக வருத்தமான விஷயம்.

20210503210557436.jpg
மாவட்ட ஆட்சியரின் முழு ஒத்துழைப்பில், ஊட்டி சேரிங் கிராஸ்ஸில் உபயோகமில்லாத பொது கழிப்பிடத்தை ஒரு ஆர்ட் கேலரியாக மாற்றியது ஆச்சிரியமான ஒன்று.... அதிலும் நகராட்சி அந்த இடத்தை இடித்து விட முடிவு செய்திருந்தனர்.

20210503212019336.jpg

ஒரு நல்ல கட்டிடத்தை இடிப்பது சரியில்ல என்று தீர்மானித்து, மிகவும் மோசமான நிலையில் இருந்த கழிப்பிடத்தை, எங்கள் இயக்கம் சுத்தம் செய்து புதுப்பித்தது ஒரு வித சாதனை தான்...

20210503210744978.jpg

அங்கு ஒரு ஆர்ட் கேலரி உருவாக உறுதுணையாக இருந்தது, புகைப்பட கலைஞரும் ஆர்டிஸ்டுமான மாதவன் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது...

20210503210945627.jpg

‘தன்மை’ என்ற அமைப்பு உருவானது இந்த ஆர்ட் கேலரியில் தான். “THE NILGIRI MOUNTAIN ARTS INSTITUTION” (TNMAI )... இது ஒரு பெரிய மாற்றம் மட்டுமல்ல, பல ஓவிய கலைஞர்கள் உருவாகும் இடமாக மாறியது இந்த பழைய கழிப்பிட கட்டடத்தில்தான்..!”

‘மற்றொரு ப்ராஜெக்ட்... மிருகங்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து போராடினோம்... நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை ஊசி போடுவது போன்ற இயக்கத்தை மேற்கொள்கிறோம். இந்த கொரோனா காலத்தில் நாய்களை பிடித்து ஊசி போடுவது என்பது ஈஸியான ஒன்று.

20210503211203619.jpg

ஊட்டியில் SPCA (Society for The Prevention of Cruelty To Animals) இயக்கம் சரியாக செயல் படுவது இல்லை என்பதால், அதை நாங்கள் செய்ய துவங்கினோம். இதில் பந்தைய குதிரைகளை சுற்றுலா சவாரிக்கு பயன்படுத்த கூடாது. ஒரு காஸ்டலியான டால்மிஷின் நாய் போல தான் இந்த ரேஸ் குதிரை. ரேஸில் ஓடும் அந்த குதிரைகள், நான்கு அல்லது ஐந்து வருடங்கள் தான் ஓட முடியும். அதற்கு பின் அவைகளை அந்த ஹார்ஸ் ஓனர்களால் பராமரிக்க முடியாமல் லோக்கல் குதிரை வளர்ப்பவர்களுக்கு விற்று விடுகிறார்கள். ஒரு ரேஸ் ஹார்ஸ் 25 வருடங்கள் உயிர் வாழும். அதை சுற்றுலா சவாரி என்ற பெயரில் ‘ரைட்’ செய்ய வைத்தால், விரைவில் அது உயிரிழந்து விடும்.

20210503211325265.jpg

மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா மற்றும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி இதற்கு தடை போட்டுள்ளனர். இந்திய குதிரைகளான சத்திரவாடி, மார்வாடி குதிரைகளுக்கு மைக்ரோ சிப் பொறுத்தியுள்ளோம். அவை திருவிழா மற்றும் கல்யாணங்களுக்கு உபியோகிக்கப்படுகின்றன. லோக்கல் சவாரிக்கு போனி குதிரைகளை தான் உபியோகிக்க வேண்டும் என்பதை எங்களின் இயக்கம் உறுதி செய்துள்ளது.

20210503211444943.jpg
கோவிட் லாக் டவுன் காலத்தில் 60 ஹார்ஸ் ரைடிங் குடும்பத்தினருக்கு, ஒரு மாதம் மளிகை மற்றும் காய்கறி வகைகளை உதவியாக கொடுத்துள்ளோம். குன்னூரில்... சில கிராமங்களுக்கு சென்று உதவி செய்து வருவதும் எங்களின் கடமையாக கொண்டுள்ளோம். அதே சமயம்... குப்பைகளை பிரித்து அப்புற படுத்துவதை சொல்லி கொடுத்து வருவதும் எங்களின் தொடர் வேலை...

20210503212434407.jpg
வாகனங்களின் ஓட்டம் இல்லாததால், இந்த கோவிட் காலத்தில் சுற்றுசூழல் மாசு படாமல் இருக்கிறது. லாக் டவுன் சமயத்தில், ஹோட்டல்களில் பார்சல்கள் ம்ட்டும் தான்... இதன் மூலமாக மீண்டும் பிளாஸ்டிக் அரக்கனை ஊடுருவ செய்து வருகிறோம்...

20210503211604128.jpg
சானிட்டரி நாப்கின், டையபேர், குழந்தைகளின் பேம்பெர்ஸ் போன்றவைகளில் பிளாஸ்டிக்கும் இருப்பதால், அவை அழியாமல் இருக்கிறது. இதற்கு மாற்றாக, பயோ ரீசைக்கிளிங் பாம்பெர்ஸ், நாப்கின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதை மக்கள் இன்னும் உணர்ந்து வாங்குவது இல்லை. பேபி மூன் போன்ற பேம்பெர்ஸ் உண்டு. அதை உபயோகித்தல் நல்லது. இந்தக் கோவிட்டால், உலகம் சற்று சுத்தமாகவும், மாசு இல்லமல், ஓசோன் ஓட்டை தானாக மறைந்து கொண்டிருக்கிறது என்ற நல்ல செய்தி வந்து கொண்டிருக்கும் போது... மீண்டும் பிளாஸ்டிக் அரக்கன் தலை தூக்கினால் என்னவாகும்..?

20210503212157130.jpg
எங்கள் MOB இயக்கத்தின் மூலமாக, உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடுத்துள்ளோம். அது டாஸ்மாக் மது விற்பனைக்கு பின், மீண்டும் அந்த மது பாட்டில்களை ரீசைக்கிள் செய்ய டாஸ்மாக் நிறுவனமே வாங்கி கொள்ள அரசு முன் வரவேண்டும். மது பாட்டில்களுக்கு வெளி மார்க்கெட்டில் விலை இல்லை என்பதால் தான், வழக்கு தொடர்ந்துள்ளோம் என்கிறார் ஷோபனா.

20210503212308879.jpg

இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான ஸ்மார்ட் பெண்ணுக்கு “WOMEN OF WORTH AWARD” கொடுப்பது ஒர்த் தானே!....

ஷோபனா உங்களுக்கும் உங்கள் MOB இயக்கத்திற்கும் விகடகவியின்
வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்களின் சேவை......