தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

ஹிப் ஹாப் தமிழா கலக்கல்

2021063023140310.jpeg

இசையமைப்பாளர்கள், கதாநாயகர்களாக மாறுவது ஒரு வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே ஜிவி பிரகாஷ், சில பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அதெல்லாம் கோலிவுட் வெற்றிப்பட கணக்கில் பதிவாகவில்லை. தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் தமிழாவாக அறிமுகமாகி, ஆதி என்ற பெயரில் கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு, வெற்றி படம்தான் என்று அடித்துச் சொல்கிறது கோலிவுட் வட்டாரம். அதற்கப்புறம் நட்பே துணை, நான் சிரித்தால், படங்களில் ஆதி நடித்தார். ஆனால் அதெல்லாம் சுமார் ரகம் என்கிறது கோலிவுட். இருந்தாலும்... இப்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிக்கிறார், இயக்குகிறார், இசையும் இவர்தான்.

அண்ணாத்தே பொழுதுபோக்கு படமாம்

20210630231337742.jpeg

அண்ணாத்தே ரஜினியின் 168 ஆவது படம். நிச்சயம் தீபாவளி ரிலீஸ். இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் கொஞ்சம் எடுக்கணும் என்று ரஜினியிடம் கேட்ட போது... வாய்ப்பே இல்லை, சென்னையிலேயே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுத்து முடித்தாகிவிட்டது. டப்பிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் மிச்ச சொச்ச காட்சிகளை கல்கத்தாவில் எடுத்து ஆகணும் என்று இயக்குனர் சிவா பிடிவாதம் பிடிக்கிறாராம். அண்ணாத்தே படம் ஆக்சன் சென்டிமென்ட், காமெடி, கிராமம் கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்குமாம்.

எமி ஜாக்சன் தொழிலதிபரை டெலிட் பண்ணி விட்டார்

20210630231303163.jpeg

நடிகை எமி ஜாக்சன், இங்கிலாந்து தொழிலதிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகி ஒரு குழந்தைக்கு தாயானார். இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டுடன் நெருக்கமாக இருந்த படங்களை இன்ஸ்ட்ராகிரம் பக்கத்தில் நீக்கிவிட்டார். ஏதோ பிரச்சனை என்று தகவல் வருகிறது.

அடடா மிஸ் பண்ணிட்டோமே சத்யராஜ் வருத்தம்

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த பிரைம் ஒடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, கூடவே வடசென்னை அதிமுக தலைவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்ப்பு என்று பரபரப்பாகிவிட்டது.

20210630231146188.jpeg

இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியாராக நடிகர் பசுபதி வாழ்ந்து நடித்திருக்கிறார். இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில் நடிகர் சத்யராஜை கேட்டு இருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித். படப்பிடிப்பு தேதிகள் தோது படவில்லை என்பதால் மறுத்துவிட்டார் சத்யராஜ். இப்போது அடடா மிஸ் பண்ணிவிட்டோம் என்று பீல் பண்ணுகிறார்.