காவிரிமைந்தன்
என் பாரசீக ரோஜா நீ!
அன்பே!
என்ன மாயம் செய்தாய் நீ?
எத்தனையோ கோபங்கள் எனக்குள்ளே இருந்தாலும் உன் அழைப்பொலி கேட்டுவிட்டால் அடுத்தநொடியே உன்னிடம் அடைக்கலமாகும் விந்தை!
திசையறியாமல் நான் சென்றுகொண்டிருந்தபோது உந்தன் குரல் என்னையே திருப்பிவிடுகிறது!
விரிவுரையேதுமின்றி உன் ஒரு சொல்கேட்டால் போதும்!
கொதிநிலையில் உள்ளநீர் உடனே குளிரூற்றம் பெற்றதுபோல் நான் மாறுகிறேன்!
அதிகாலை முதலாக உன் நினைவு என்னுள் அடம்பிடித்துக்கொண்டு நடைபோடுகிறது!
ஒருவேளை கடப்பதற்குள் மனம் ஓராயிரம் முறை உன்னை நினைக்கிறது!
உயிரோட்டம் நடப்பதுவே வேண்டுமென்றால் உன் குரலோசை தினம் வேண்டும் கண்மணியே!
ஆசைமலரெடுத்து அன்பே உன் கூந்தலிலே நான் சூட்டிடவேண்டுமென்று பலநாளாய் துடிக்கிறேன்!
அன்பின் பரிமாணங்கள் இன்னும் என்னென்ன என்று உந்தன் மடிசாய்ந்து ஒவ்வொன்றாய் கேட்கிறேன்!
சோலைமர நிழலில் புற்கள் பாய்விரிக்க நீயும் நானும் கலந்து பேசும் மாலை வேளையல்லவா!
சுபவேளையிது என்றே ஊர் முழுக்கச்சொல்லவா!
கவிபாடும் என் கண்மணிக்கு காவியம் பாடவே இப்புவிமீது நான் பிறந்தேன் என்பதை நீ அறிவாயல்லவா?
ஆரத்தழுவும்கோலம் நமதென்று மனதிற்குள் சந்தோஷ மழையடிக்க.. நான்கு கரங்கள் நம்மை ஒன்றுடன் ஒன்றுசேர்க்க.. பின்னிப் பிணைந்தபோது.. பெண்ணிலவே உன் நிலைமை சொல்லில் அடங்காது!
மோகம் வளரும்! தாகம் தொடரும்! தவிப்புகள் அடங்கும்! முதலில் இதழ்கள் முத்தங்கள் கொடுக்கும்!
மூழ்கிடும் இன்பம் மோட்சத்தைக் கொடுக்கும்!
தேவைகள் தீர்ந்தால் நீயே சொல்!
சேவையை சிலநேரம் நிறுத்தியும் வைக்கலாம்!
அவசரம் என்னவோ .. அவள் தந்த வாய்மொழி!
அப்படிப் போடடி என் ஆருயிர்கண்மணி! ஓசைகள் தொடர்ந்திடும் விழியின் ஓரங்கப் பார்வைகளால்!
ஆசைகள் வழிந்து அங்கே ஓடுது பார்!
வீசும் தென்றலினை கவரிவீசச் சொல்! தென்றலே வியந்தபடி திகைத்து நின்றது காண்! பாரிஜாதமே! என் பவளமல்லித் தோட்டம்நீ!
பெளர்ணமி இரவில் மட்டும் என் பாரசீக ரோஜா நீ! பூமெத்தைக் கட்டிலிட்டு தேன்மல்லிச்சரம் தொடுத்து நீ அங்கே அஞ்சியஞ்சி அடுத்த அடி எடுப்பதெல்லாம் தேவதையின் வடிவம்!
கோவில் நான் அங்கு என்று சொன்னால் நீதானே தெய்வம்!
கொஞ்சும் குரல் யாழெடுத்து என்னை நீ அழைத்தபோது, கொள்ளையிடக் காத்திருந்தேன் - கோவையிதழைத்தான்!
தேவைகள் கோடியுண்டு - தேவியிடம் சரணடைந்தேன்! கட்டுடல், மொட்டுடல் கலைகள் சொல்லவே மெல்ல நகர்ந்தே என்னை அடைந்தது!
தொட்டதும் பாவையின் மேனியில் துடிதுடிப்பு!
கைபட்டதும் ஆயிரம் பரபரப்பு! மெய்யுடல்என்பதை மெய்ப்பித்துக்கொண்டிருக்க..கைத்தலம் பற்றினேன் காதலியே!
கனவுகள் நனவாகும் இரவல்லவா?
இங்குதான் வாழ்வின் ஜோதி தெரியும்!
இன்றுதான் பூரணம் பெண்மை அடையும்!!
Leave a comment
Upload