சகோதரிகளே!!
மீட்பு சாத்தியமே!
அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவது சாத்தியமே என்கிறார்கள் மன நல நிபுணர்கள். அவர்கள் கூறுவதை கேட்போமே:
இவர்களை பாருங்கள், இவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து தங்களின் தொடர்ந்த சுய முனைப்பால் மீண்டு வந்தவர்கள்
ஆப்ரா வின்பிரே, பில் கிளின்டன், எலினார் ரூஸ்வெல்ட், மார்லின் மன்றோ, ஜார்ஜ் ஆர்வெல், மாயா எஞ்சலோ.
சிறுவது பாலியல் அதிர்ச்சி குறித்து, அதிலிருந்து மீண்டு வருவது குறித்து மன நல நிபுணர் பீட்டர் லெவின் சொல்லியிருப்பதை நினைவில் கொள்வோம். இது குறித்துப் பல புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.
“அதிர்ச்சியை எதிர்த்து போராடுவது வெகுமதியை அளிக்கும்” என்று சொல்கிறார். மேலும் அவர் “அதிர்ச்சியை வெல்லும் இயல்பான திறனுடன் மனிதர்கள் பிறக்கிறார்கள். அதிர்ச்சியிலிருந்து மீள்வது வாழ்வின் ஒரு பெரிய பரிசாகும்” என்கிறார்.
டாக்டர். பெசல் வெண்டர் கோக்...
இவர் அதிர்ச்சிக்கான உடல்-மனம் சார்ந்த சிகிச்சையில் முன்னணி நிபுணர்களில் ஒருவர்.
உங்கள் உடல் உணர்ச்சிகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் கடந்த காலத்தின் சுமையை உங்களிடமிருந்து விடுவிக்க முடியும். இந்த உணர்ச்சிகளை புரிந்து கொண்டு வாழ பயிற்சிகள் உள்ளன.
உங்கள் உடலுடன் நட்பு கொண்டும், பாதுகாப்பாக உணர்ந்தும், அதிர்ச்சியிலிருந்து மீளத் துவங்குவீர்கள்.
டாக்டர். மார்ஷா லின்ஹன், அதிர்ச்சியிலிருந்து மீண்டவர் தான், ஒரு நல்ல வாழ்க்கைக்கான புதிய (DBT) சிகிச்சை முறையை உருவாக்கினார். இதன் மூலம் குறிப்பிட்ட திறன்களை நாம் வளர்த்துக்கொள்ளலாம்.
மூளை நரம்பியல் அறிவியல் துறையில் குறிப்பிட்ட சாதனைகளை செய்தவர் டாக்டர். சஞ்சய் குப்தா, சமீப காலத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, நமது மூளை வயதான பிறகும் நியூரான்களை வளர்க்கிறது, புதிய இணைப்புகளை உருவாக்குகிறது என்பதே. இந்த நியூரோ-பிளாஸ்டிசிட்டி அதிர்ச்சியைக் குணப்படுத்துவதற்கான ஒரு வழியாக அது இருக்கும்..
மீட்பு செயல்பாடு குறித்து மன நல நிபுணர் டாக்டர்.ஆண்ட்ரியா பிராண்ட் சொல்வது என்ன:
“சிறுவயது துன்புறுத்தல் போன்ற காயங்களிருந்து குணப்படுத்தும் செயல்முறை, அவமானம், பயம், கோபம், ஆழ்ந்த சோகம் என்று குழப்பமான உணர்வுகளோடு ஆரம்பத்தில் சங்கடமாக உணர வைக்கும். ஆனால், அது மிகவும் பலனளிக்கும் பயணமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.”
மீட்புக்கான உடல் மனம் சார்ந்த பயிற்சிகள் குறித்து மன நல நிபுணர் டாக்டர்.ரிக் ஹேன்சன் “அதிர்ச்சி மீட்புக்கு தியானம், யோகா, சுவாசம் ஆகியவை பயன்படுத்துவதை அறிவியல் உறுதிப்படுத்துகிறது. தொடர்ந்து செய்யப்படும் இந்தப் பயிற்சிகள் உங்கள் மூளையின் தாங்குதிறனை அதிகரிக்கும்” என்கிறார்.
இந்த மன நல நிபுணர்கள் அனைவரும் சொல்வது அதிர்ச்சிக்கு பிறகான மீட்பும் நல் வாழ்க்கையும் சாத்தியமே என்பது தான்.
இவற்றை செயல்படுத்த துவங்கி தொடர்ந்து செயல்படும்போது, நன்கு வேரூன்றிய ஒரு மரத்தை போல நிற்போம். இது பற்றி மேலும் விவரங்களை அறிய www.thunai.org இணையதளத்தை பாருங்கள்.
பல கிளைகள் உடைந்தாலும் புயலின் காற்றை தாங்கும் மரம் வேர்களின் பிடிப்பால் விழாது நிற்கும். நீங்கள் அதுபோலத்தான்.. இந்த தாங்குதிறன் உங்களுக்குள்ளும் உள்ளது, அதிர்ச்சிக்குப் பிறகு அதை நீங்கள் மீண்டும் கண்டறியலாம்.
பேணுவோம்....
Leave a comment
Upload