தொடர்கள்
தொடர்கள்
சில சிக்ஸர்கள் சில பௌண்டரிகள் - 11 - அலேக் நிரஞ்சன்

20210629231752702.jpg

கடந்த ஒரு வாரமாக ஒலிம்பிக் போட்டிகள் களைகட்டி வருகிறது. கூடவே கொரோனவும்...

குத்துச்சண்டையில் ரவுண்ட் ஆஃப் சிக்ஸ்டீன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், கொலம்பியாவை சேர்ந்த வேலன்ஷியா எனும் வீராங்கனை 3-2 என்று இந்தியாவை வென்றுள்ளார். சோகம் என்னவென்றால் “மே ஐ கோ?” என்று குத்துச்சண்டைக்கு டாட்டா காட்டியிருக்கிறார் மேரி கோம்!! She may go home -permanently!

20210629232040791.jpg

மறுபடியும் குத்துச்சண்டை தான்... இந்திய வீராங்கனை பூஜா ராணி மற்றும் லவ்லின் போரகொஹென் காலிறுதிக்குள் கால் பதித்திருக்கிறார்கள்... முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்கிற பூஜா ராணியின் தந்தை பிடிவாக்காரராம்! பொண்ணுக்கு அடிபட்டுடுச்சினு ஆறு மாசம் பயிற்சிக்கே அனுப்பலையாம்....

ஃபிளமிங்கோ மூவ் செய்து தங்கத்தை வென்றிருக்கிறார் ‘ஒற்றைக்கால்’ வீரர் லீ ஃபேபின்.... சீனாவுக்கு இனிமேல் சீன் காட்ட பஞ்சம் இருக்காது!!

வில்வித்தை போட்டியில் பிரவீன் ஜாதவ் அவர்களின் பயணம் கூலித்தொழிலாளராக ஆரம்பித்து, இன்று உலகின் டாப் 2 வை வென்று, டாப் 1 ஆன பிராடி எல்லிசன்னிடம் தோற்றுள்ளார்....
~என்ன... தங்கமா?
~இல்ல, முதலுக்கும் ரெண்டாவதுக்கும் நடுவுல!!

இந்திய வெற்றிப் பதக்கங்கள் மீராபாய் சானு பளுதூக்கலில் பெற்ற வெள்ளிப்பதக்கத்துடன் கணக்கை ஆரம்பித்திருக்கிறது..... பதக்கம் எனும் பளுதூக்கி தாயகம் திரும்ப வாழ்த்துக்கள்!!

ஆண்டவர் கட்சியின் இளைஞரணி செயலாளரும் கட்டிப்பிடி வைத்தியரும் ஆன கவிஞருக்கு ‘கன்னிகா’தானம்... ஆண்டவர் ஆசியுடன். பொண்டாட்டி சிலம்பம் expert - ஜாக்கிரதை கவிஞரே.!

சார்பட்டா பரம்பரை ஒரு பக்கம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது!!
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு கண்டனம் வந்திருக்கிறது.... எம்.ஜி.ஆர்-ஐ தவறாக சித்தரித்து உள்ளதாகவும், போராட்டம் செய்ய உள்ளதாகவும் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் திட்டவட்டம்..... ஓடிடி-லேயே ஓட விட்டிருவாங்க போல....

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனி இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் வந்தது தான் இவ்வார சென்சேஷன்..... பல நாட்கள் கழித்து இந்திய அணி உடையில் பார்த்த ரசிகர்கள் திரும்ப ஒரு ஆட்டம் கிடைக்குமா? என்று ஆரவாரம்....

சின்னத்திரைக்கு டாட்டா காட்டி வெள்ளித்திரை சென்றிருக்கிறார் விஜய் டிவி புகழ் “புகழ்”... நிறைய படவாய்ப்பு வர்றதால சேனலை விட்டு விலகுவதாக தகவல். புகழ் நிரந்தரமா......???

என்ன, வரட்டுமா...