உலகளவில் வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான பெர்முடா, டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 2 வீரர்களை மட்டுமே அனுப்பி, 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது.
பெர்முடா நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி (33), டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தனது நாட்டுக்குப் முதல் பெருமை சேர்த்திருக்கிறார். இது, அவருக்கு 4-வது ஒலிம்பிக் போட்டி!
இந்த ஒலிம்பிக்கு முன்... 2008-ம் ஆண்டு பீஜிங், 2012-ம் ஆண்டு லண்டன், 2016-ம் ஆண்டு ரியோ என 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பெர்முடா சார்பில் பங்கேற்றார். ஆனால், எதிலும் பதக்கம் அவருக்கு கிடைக்கவில்லை!
“டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக, முதன்முறையாக தனது கனவும், அதற்கு மேலாக பெர்முடா நாட்டின் கனவும் நிறைவேறியிருக்கிறது!” என்று ஃப்ளோரா டஃப்பி மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். டிரையத்லான் பந்தயத் தூரத்தை அவர் ஒரு மணி நேரம், 55 நிமிடம், 36 நொடிகளில் கடந்து, தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
“கடைசி கிமீ தூரத்தைக் கடக்கும்வரை எனது முயற்சியைக் கைவிடவில்லை. சாலையின் அந்தப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த எனது கணவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்!” என்று கூறும் டஃப்பிக்கு, அவரது கணவர்தான் பயிற்சியாளர்!
ஒலிம்பிக் வரலாற்றில், பெர்முடா நாட்டுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தச் சாதனையை பெர்முடா மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். டஃபிக்கு அந்நாட்டு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
டிரையத்லான்... 1,500 மீட்டர் நீச்சல், பிறகு 40 கிமீ தூரத்துக்கு சைக்கிள் பயணம், பின்னர் 10 கிமீ தொலைவுக்கு ஓட்டம் ஆகியவற்றைக் கொண்டது. இதில், இடையே ஓய்வு கிடையாது. டஃப்பி பங்கேற்ற 51.5 கிமீ தூரம் கொண்ட டிரையத்லான் போட்டி, இது, பெர்முடா நாட்டின் மொத்த அகலத்தைவிட அதிகமானது. ஏனெனில், பெர்முடா தீவைக் குறுக்காக அளந்தால் வெறும் 40 கிமீ நீளம்தான் இருக்கும். அந்த அளவுக்கு மிகச் சின்னஞ்சிறிய தீவு அது!
பெர்முடா நாட்டின் சார்பில் டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற டஃப்பி தவிர, துடுப்பு படகு போட்டியில் டாரா அலிசாடே பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். இதன்மூலம் குட்டி தீவு நாடான பெர்முடா சார்பில் பங்கேற்ற இருவருமே தங்கப்பதக்கம் பெற்று, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பிலிப்பைன்சின் நூறாண்டு கனவு...
கடந்த 1924-ம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பிலிப்பைன்ஸ் நாடு பங்கேற்று, ஒருமுறைகூட பிலிப்பைன்ஸ் தங்கப்பதக்கம் வென்றதில்லை. இதுவரை ஒட்டுமொத்தமாக அந்நாடு, 3 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது!
சுமார் 11 கோடி மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு, ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தங்கப் பதக்கம் என்பது கனவாகவே இருந்தது. இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள, பிலிப்பைன்ஸ் 19 பேர் குழுவை அனுப்பியது. இதில் அந்நாட்டின் தியாஸ் என்பவர் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பிலிப்பைன்ஸ் நாட்டின் நூறாண்டு கனவை நிறைவேற்றி உள்ளார்.
Leave a comment
Upload