தாயகம் கண்டு கொள்ளா தன் ஈகம். (தியாகம்)

சொல் தேடிச் சோர்ந்து
விட்டேன். செந்தமிழன்
வாழ்வில் நலம் கண்ட
இல்லாள் இலக்குமி பாய்
இந்தியா வந்துமே
இன்னலிலே நொந்து
சொல்லொணாத் துயர்
கொண்ட சோகம்
சொந்த மண்ணில்
அல்லல் தீர்க்கத் துணை
இல்லாத நிலை தனை
விளக்கிடவே தான்.
தன்னையுமே தப்பிடாமல்
தடுத்து நிறுத்திவிட
பன்னகத்து நஞ்சனைய
நெஞ்சமுடை நாஜிகள்
சொன்னதொரு பொய்
மனநோயாளி இவரை
இன்னல் எவர்க்கும்
நேராமல் சிறையில்
அடைத்திட வேண்டும்
எனக்கூறிச் சிறை
வைத்தார்.
குடை நிழலிருந்து
குஞ்சரம் ஊர்ந்தார்
ஓர் நாள்
நடை மெலிந்து ஊர்
நண்ணவும் கூடும்.
என்ற நிலை கண்டு
இடை நின்ற நண்பர்
கள் உதவியதால்.
தப்பி இத்தாலி வர
வழி செய்தார்.
செப்பிடவியலா பெரு
முயல்வால் தன்
ஒப்பற்ற தலைவன்
உடல் சாம்பல்
முப்பொழுதும் தொழுது
இஸ்பெயின் வழி
இந்தியத்தின் பம்பா
யில் வந்திறங்கி
சொந்த மண்ணில்
சோர்வகலும் என
திந்தத் தாயகம்
தங்கும் புகலிடமாம்
இந்தமண் எனைக்காக்
கும் என்றெண்ணி
வந்தவர் ஏமாந்தார்
நெஞ்சுடைந்தார்
எந்த வெள்ளையனை
வெளியேற்றத் தன்
கந்துக மதக்களிற்றான்
தன்னுயிரை தந்தானோ
அந்த அந்நியன் இன்னும்
ஆளுகின்றான்
உண்ண நல்லுணவும்
உடுத்தலுக்கு
உடையுமிலை.
கண்ணயர்ந்தால்
சாய்ந்திடவும் ஓர்
இடம் இல்லை.
மண்ணாளும் மாற்
றான் இவர் யார்
என அறிந்தால்
திண்ணமாகச் சிறை
காக்க நேர்ந்து விடும்
என்றஞ்சி நொடிகள்
வருடங்களாக மெல்ல
நகர்ந்து செல்ல
நாற்பத்து ஏழில்
ஒருவரமாய் வந்த
விடுதலைக்குப்
பின் பம்பாய் மாநிலப்
பிரதமராகி விட்ட
மொரார்ஜி இவர்
தங்க ஓரிடம் தந்து
அருள் புரிந்தார். அதில்
தனியாக வாழ்ந்து
தாயகம் ஆண்ட நம்
அரசின் தலைமைகளை
செம்பக ராமனது
உடற்சாம்பல்
அரசு மரியாதையொடு
அனந்தபுரத்திலும்
குமரி மண்ணிலும்
சொரிந்து நன்றி காட்டச்
செய்திட்ட விண்ணப்
பங்களேதும் ஆளும்
பெரியோர்கள் கண்டோ
காணாமலோ புறக்
கணிக்கப் பட்டன.
(தொடர்ந்து வரும் இதழில்
தொல் தமிழ் நாயகனின்
விருப்பமதை மாதவமாய்க்
கொண்ட மாதரசி நிறைவேற்
றிய காதை உரைத்திடுவேன்)

Leave a comment
Upload