தொடர்கள்
தொடர்கள்
சில சிக்ஸர்கள் சில பௌண்டரிகள் - 17 - அலேக் நிரஞ்சன்

20210817110604411.jpg

போன வாரம் மதுரையில் நடைபெற்ற களவாணி நடிகர் (சூரி) இல்லத் திருமணத்தில் இரண்டு லட்சம் மதிப்புள்ள நகை களவு போனது!!


இந்திய ரசிகர்கள் (குறிப்பாக கோலி ரசிகர்கள்) சோகத்தில் உள்ளனர்....காரணம் வருகின்ற T20 உலக கோப்பை 2021 முடிந்த கையோடு T20 போட்டிகளில் தலைமைப் பொறுப்பில் இருந்து விடைபெறுகிறார்.


குருவாயூர் கோவில் வாசல் வரை நடிகர் கார் செல்ல அனுமதித்தால் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்...

“போனது யாரு?
நம்ம 'லாலேட்டன்' காரு!!”


Florence Nightingale விருது பெற்றார் "பானுமதி கீவாலா"!!!

குஜராத் மாநிலம் பரோடா-வை சேர்ந்த செவிலியர், கோவிட் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான பிரசவம் பார்ப்பவராம்.

பாராட்டுக்கள் அம்மா!!!


எல்லா வண்டிகளும் மின்னாக்கத்தில் வலம் வரும் வேளையில், ஆட்டோக்கள் மட்டும் விலக்கல்ல....

'M Auto' எனும் நிறுவனம் தொடங்கிய இந்த பணி, தங்கள் தொழில்நுட்ப அறிவால் ஒன்று நிகழ்த்தியுள்ளனர்.
வெறும் ₹25 தான் பராமரிப்பு (Maintenance) செலவு!!!


கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ ₹30-₹40 வரை சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

“முயன்று விளைந்ததை
முயல் தின்னாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்!”


பாதுகாப்பு அமைச்சகம் NCC மேற்பார்வை காண 15 பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றை வரையறுத்துள்ளது.

வல்லுநர் குழுவில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர்... தல தோனி!!


“என் இனிய தமிழ் மக்களே!!” என்று பாரதிராஜா பாணியில் ஆரம்பித்து,
“எடுடா வண்டிய!” என்று CSK ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் சுழல் வீரர் ‘ஓட்டச் சாம்பியன்’ பராசக்தி எக்ஸ்பிரஸ்!!

இந்தவாட்டி கப்பு மிஸ் ஆகாது!