தொடர்கள்
நொறுக்ஸ்
கொரோனா வடிவில் வெள்ளரிக்காய்! - மாலாஸ்ரீ

20211017195117843.jpg

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாத நிலையில், உருண்டை பந்தில் முட்கள் இருப்பதை போன்ற மேக்ரோ தோற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வெளியிட்டனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டம், சர்கூடா கிராமத்தை சேர்ந்த விவசாயி ரபிகிரண் விவசாய நிலத்தில், கொரோனா வடிவில் விளைந்திருந்த வெள்ளரிக்காயை பார்த்து அதிர்ச்சியானார்.

மேலும், அவரது நிலத்தில் கொரோனா வடிவில் ஏராளமான வெள்ளரிக்காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன. இதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த வெள்ளரிக்காயின் மாதிரியை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘இன்னும் இதேபோல் என்னென்ன வடிவங்களில் காய்கறி, பழங்கள் முளைக்குமோ?!’ என மக்கள் வாய்பிளந்து பேசி வருகின்றனர்.