தொடர்கள்
தொடர்கள்
சிறுவர் பாடல்கள் - 2 - வேங்கடகிருஷ்ணன்

20211018223351420.jpg

கடிகாரம்

அங்க பார் அஞ்சலி
கடிகாரத்துல சுண்டெலி

எலி மேலே போனது
எட்டி உள்ளே பார்த்தது

மணி ஒண்ணு அடிச்சது
எலியும் கீழ குதிச்சது!

2021101822361843.jpg

ஒண்ணு ரெண்டு

ஒண்ணு இரண்டு
பறக்குது வண்டு!
மூணு நாலு
பசுவின் பாலு!
அஞ்சு ஆறு
ஆகாயம் பாரு!
ஏழு எட்டு
உனக்கொரு லட்டு!
ஒன்பது பத்து
சிப்பிக்குள் முத்து.!!
ஒண்ணு ரெண்டு சொல்லுவோம்!
விளையாட்டாய் எண்ணுவோம் !!