எந்தக் காலத்திலும் இந்திக்கு தமிழ் நாட்டில் இடம் கொடுக்கக்கூடாது... - வைகோ
ஆமாம், ஏற்கனவே நிறைய தந்தாச்சு.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றால் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்திற்கு கொடுங்கள்... - சீமான் கோரிக்கை
எதுக்கு தலைவரே... அங்கேயும் நமக்கு டெபாசிட் கிடைக்காது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்... - முதல்வர் ரங்கசாமி கோரிக்கை
ஆமா, அப்பத்தான் இவருக்கு சுதந்திரம் கிடைக்கும்
தடுப்பூசி செலுத்தினால்... மது, அசைவம் கூடாது என்பது உண்மையில்லை... - அமைச்சர் மா சுப்பிரமணியம்
ஆமாம், இதனால் நீங்க டாஸ்மாக் பக்கம் வராம இருந்துடாதிங்க
முதல்வரை வரவேற்க ஒரு லட்சம் பேர் திரள வேண்டும்... - அமைச்சர் செந்தில் பாலாஜி
சமூக இடைவெளி எல்லாம் சமூகநீதிக் கட்சிக்கு கிடையாது. ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்.
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், சமூக ஒற்றுமை ஓங்கும்... - பிரியங்கா காந்தி
ஆனால், கோஷ்டி ஒற்றுமை பற்றி எல்லாம் என்னால் உத்தரவாதம் தர முடியாது
வளங்களை பகிர ஒரே நாடு ஒரே மக்கள் பிரதிநிதித்துவ சபை... - மோடி வலியுறுத்தல்
அந்த ஒரே கட்சி, சொல்ல மறந்துட்டிங்க தலைவரே...
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம்... - பேரவைத் தலைவர் அப்பாவு
ஆமா, முதல்வர் ரொம்ப டென்ஷன் ஆயிடுவார்.
டெல்டா பகுதியில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆய்வு...
ஒத்துமையா தான் இருக்காங்களாம்...
Leave a comment
Upload