சகோதரிகளே,
தாய் மற்றும் குழந்தைக்கிடையிலான இணைப்பு அதன் முக்கியத்துவங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
தாய் மற்றும் குழந்தையின் மன நலம், குழந்தையின் வாழ்வில் முதல் மூன்று வருடங்களில் இணைப்பின் வகை ஏற்படும். (பிரிட்டன்ஸ்டைன், பெயிலி, சியானா & லாரியு 2011)
பாதுகாப்பாய் உணரும் இணைப்பு ஏற்பட அம்மாவின் மன நலம் கவனிக்கப்பட வேண்டும். கலாச்சாரத்திற்கு ஏற்றதும், நவீனமான வழிமுறைகளும் குழந்தையுடனான பிணைப்பிற்கு மிகவும் முக்கியமானவை.
உளவியல் மாணவர்கள் (துறை சார்ந்த மற்றும் சாராத) மற்றும் மருத்துவர்களாக, நாம் வாழ்க்கையை, மன அழுத்தத்தை மற்றும் கடினமான சூழலை அணுகும் விதத்தை தீர்மானிப்பதில் நமது குடும்பம் வகிக்கும் பங்கு என்ன என்று நமக்கு நன்றாகத் தெரியும். இணைப்புக் கோட்பாடு அந்த சுய - அறிவினை மேலும் வளர்ப்பதில் துணை நிற்கிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் “பிரச்சனைகள்” உள்ளவர்களை உணர்வுபூர்வமாகவும், உதவும் நோக்கத்தோடும் அணுக மேலும் உதவி செய்கிறது.
பிரச்சனையான நடத்தையினை வெளிப்படுத்தும் குழந்தைக்கு நான் எப்படி உதவ முடியும்?
டாக்டர்.கே அய்ரே & டாக்டர். கோவிந்த் கிருஷ்ணமூர்த்தி இணைத்து எழுதியிருக்கும் புத்தகமான “டிராமா இன்பார்மட் பிஹேவியர் சப்போர்ட்” (Trauma Informed Behaviour Support) - எ பிராக்டிகல் கைட் டு டெவலபிங் ரெசிலியன்ட் லேர்னர்ஸ் என்ற புத்தகத்தில் குழந்தைகளின் நடத்தையினை அதிர்ச்சி மற்றும் இணைப்பின் வழியாக புரிந்து கொள்ள உதவுகிறார்கள்.
இந்த வழிமுறையானது கல்வியிலாளர்களுக்கும், தெரபிஸ்டுகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் உதவியாயிருக்கும் - குறிப்பாக அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாமல் சாதாரண குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.
இது மிகவும் குழப்பமாயிருந்தால், டாக்டர்.கே அய்ரே & டாக்டர்.கோவிந்த் கிருஷ்ணமூர்த்தி சொல்வது... ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இது கண்டறியும் இடமல்ல, புரிந்து கொள்ளவேண்டியது. எந்த வகையான இணைப்பினால் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு வேண்டியது:
# பாதுகாப்பு
# அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் ஒருவர்.
# உணர்வுபூர்வமான ஆதரவு
# புரிந்து கொள்ளுதல்
# (முடிவு செய்யாத) நடத்தை ஆதரவு
# வழக்கமாயும், தொடர்ந்தும் இருத்தல்
இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் டாக்டர்.கே அய்ரே & டாக்டர்.கோவிந்த் கிருஷ்ணமூர்த்தி இணைந்து எழுதியிருக்கும் புத்தகமான “டிராமா இன்பார்மட் பிஹேவியர் சப்போர்ட்” (Trauma Informed Behaviour Support) - எ பிராக்டிகல் கைட் டு டெவலபிங் ரெசிலியன்ட் லேர்னர்ஸ் என்ற புத்தகத்தின் அத்தியாயம் 4-ல் இருந்து அதிக அளவில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இது இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மின் புத்தகமாகும்.
மேலும் விவரங்கள் அறிய, மனநலம் குறித்த சுய பராமரிப்பு பயிற்சிகள், காணொளிகள் மற்றும் தகவல்களை www.thunai.org என்கிற இணைய தளத்தில் பாருங்கள், பயன்பெறுங்கள்.
Leave a comment
Upload