ஹீரோ யோகி பாபு
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு தான்; அதே சமயம் ‘கூர்க்கா’, ‘கோலமாவு கோகிலா’, ‘தர்மபிரபு’, ‘மண்டேலா’ போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். ‘பொம்மை நாயகி’ என்ற படத்தில் யோகிபாபு தான். ‘கதாநாயகன்’ கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது, படப்பிடிப்பு கொரோனாவால் நின்றுபோனது. தற்போது, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்துவிட்டது.
மாநாடு ரிலீஸ் பட்ட பாடு
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே. சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் நடித்த ‘மாநாடு’ படம், தொடங்கிய முதல் சர்ச்சைதான். தீபாவளி ரிலீஸ் என்று சொல்லி, பிறகு 25ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியானது. திடீரென்று 24 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் தள்ளிவைப்பு என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, பஞ்சாயத்து தான். ஒரு வழியாக பேசி, சரி செய்து திட்டமிட்டபடி 25ஆம் தேதி ‘மாநாடு’ ரிலீசானது. கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
யோசிக்க வைக்கும் ராதாரவி
புளு சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆன்ட்டி இண்டியன்’ படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா சில நாட்கள் முன் நடந்தது. அந்த விழாவில் பேசிய ராதாரவி சொன்ன விஷயம் யோசிக்க வைக்கிறது. படங்களெல்லாம் ஒட்டிடி தளத்திலேயே ரீலிஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... ஒரு கட்டத்தில் உன் படத்துக்கு இவ்வளவு தான் வேல்யூ என்று ஹீரோவோட சம்பளத்த அவங்க தான் நிர்னையக்க போறாங்க என்றார். யோசிக்க வேண்டிய விஷயம்தானே.
சமுத்திரகனி இப்படி சொல்கிறார்
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சமுத்திரகனி இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் திரையிட நான் சிபாரிசு செய்தேன் என்பது உண்மைதான். ஏனெனில் திரையரங்குகள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ‘அப்பா’ என்ற ஒரு படத்தை நான் தயாரித்து வெளியிட்டேன். நான்கு நாட்களுக்குள் பெரிய படம் ஒன்று வெளியாக இருக்கிறது என்று சொல்லி என் படத்தை திரையரங்குகளில் இருந்து எடுத்து விட்டார்கள். சமுத்திரக்கனி அனுபவம் இது.
தயாரிப்பாளர்கள் மூணு மூணு
ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று திரையரங்கில் ரிலீசான ‘அண்ணாத்தே’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை என்பதால், தற்சமயம் நெட்ப்ளிக்ஸ், சன் டைரக்ட் போன்ற தளங்களில் வெளியாகி இருக்கிறது.
அதேபோல், தற்சமயம்... தடுப்பூசி போட்டால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்று அரசு புது உத்தரவு போட்டிருக்கிறது. ‘அண்ணாத்தே’ படத்தின்போது இந்த ஆணை போடவில்லையே என்று தயாரிப்பாளர்கள் மூணு மூணு.
Leave a comment
Upload