தொடர்கள்
இசை
பஞ்சாபின் இசை அரசி...! - வி. சந்திரசேகரன்

2021102615404650.jpeg

குர்மீத் பாவா என்ற பாடகிக்காக பஞ்சாபே அழுகிறது. அவரது நாட்டுப்புறபாட்டு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் அந்த மண்ணில் ஒலித்திருக்கிறது. அந்த புயலான சாரீரம் டர்பன்களுக்கு சுகமான போதை! என்ன சங்கதிகள், என்ன ஹைபிட்ச், என்ன ஸ்ருதி சுத்தம்.. பாடிக்கொண்டே பஞ்சாபின் பாரம்பரிய இசை கருவிகளான அல்கோஸ், தும்பி போன்ற அரை டஜன் கருவிகளை அவரது கை மாறி மாறி வாசிக்கும். அது அசுரத்தனமான பாட்டு. சர்வசாதரணமாக 45 வினாடிகள் தம் பிடித்து ஒரு சங்கதியில் நிற்பார். இங்கே 20 வினாடிக்கே வித்வானுக்கு முகம் வீங்குகிறது. மூச்சு முட்டுகிறது. 77வயதிலும் பாடிவிட்டுதான் மூச்சை நிறுத்தியுள்ளார்.

இந்த இசை அரசிக்கு மூன்று பெண்கள். அம்மாவின் வழியில் இருவர் பாடுகின்றனர்.

குர்மீத்தின் அசத்தல் சங்கீதத்தை கேட்காதவர்கள் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்...