தொடர்கள்
பொது
“நீலகிரி ஆட்சியர் மாற்றம்...” - ஸ்வேதா அப்புதாஸ்

2021102616453852.jpg

கடந்த நான்கு வருடம் நான்கு மாதம் நீலகிரியின் 113-வது ஆட்சியராக மிக சிறப்பாக பணியாற்றிய இன்னசன்ட் திவ்வியாவை கொரோனா தொற்று காரணத்தை கூறி ஒரு மாதம் விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளனர் மேலிடம்...

யானை வழித்தடத்தை மறைத்து ஆக்கிரமித்துள்ள காட்டேஜுகளை சீல் செய்ய உச்ச நீதிமன்றம் காலெக்டருக்கு உத்தரவை பிறப்பித்தது... தனக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து வந்தார்.

20211026164630970.jpg

ஒரு முக்கிய அமைச்சரின் நண்பர் எஸ்டேட் மற்றும் காட்டேஜ், இந்த யானை வழித்தடத்தில் இருப்பதால் அதுவும் சீல் செய்யப்பட்டது. அதை ரிலீஸ் செய்யவும், யானை வழித்தடத்தின் வரைபடத்தை மாற்றி அமைக்கவும் அழுத்தம் கொடுக்க பட்டது... இதற்காக... கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்தன. மனதளவில் பாதிக்கப்பட்ட கலெக்டர், தானே விருப்ப பணி மாற்றத்தை அரசிடம் கேட்க... அரசு, நிர்வாக வசதிக்காக... கலெக்டரை மாற்ற அனுமதி வேண்டி, உச்ச நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்ய...

20211026164716726.jpg

கடந்த 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவை பணி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது.

அதற்குப் பின்... காலெக்டரின் மாற்றத்தை ஏன் தாமதித்தது அரசு என்று தான் புரியவில்லை.

ஒரு வழியாக நகராட்சி நிர்வாகத்தில், தமிழக நகராட்சி இணை ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ்.பி. அம்ரித் நீலகிரியின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றார்....

20211026164743870.jpg

அதே சமயம்... கடந்த நான்கு வருடமாக பணிபுரிந்து வந்த கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவுக்கு, எந்த மாற்று பணியையும் அரசு அறிவிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள், 113-வது மாவட்ட ஆட்சியர் பொறுப்பை ஏற்ற தருணத்திலிருந்து, கடந்த அக்டோபர் மாதம் வரை தன் பணியில் சிறு தொய்வு இல்லாமல் ஏராளமான ஆக்கபூர்வமான பணிகளை செய்த வண்ணம் இருந்தார் கலெக்டர். உச்ச நீதிமன்றம், ஒரு கலெக்டரிடம் ஒரு பணியை ஒப்படைத்தது இது தான் முதல் முறை. அதுதான் மசினகுடி யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு. காட்டேஜுகளை அப்புறப்படுத்த நடந்து கொண்டிருக்கும் வழக்கால், ஆளும் கட்சி அமைச்சர் நண்பரின் குடியிருப்பு சீலை அகற்ற கலெக்டருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம், கொரோனாவை விட மோசமாகிவிட்டது....

இன்னசன்ட் திவ்வியாவின் அயராத உழைப்புக்கு கிடைத்த விருதுகள், பாராட்டுக்கள், மூத்த ஐஏஎஸ்-களுக்கு பொறாமையையும், எரிச்சலும் ஏற்படுத்த... கலெக்டரை மாற்றும் வேலை அரங்கேறியுள்ளன...

எல்லோருக்கும் நல்லது செய்யும் கழக ஆட்சி, இவர் விஷயத்தில் மெளனம் காப்பது ஏன் என்று தான் புரியவில்லை...

20211026164823661.jpg

மக்களால் நேசிக்கப்பட்ட, மனிதாபிமானம் உள்ள ஒரு ஆட்சியரை இப்படி தான் மாற்றுவதா? போன்ற கேள்விகள் நீலகிரி முழுவதும் கேட்கப்படுகின்றன.
அவர் செய்த பணிகளை பட்டியலிட விரும்பவில்லை.... அவரின் ஆக்கபூர்வ பணிகளை, அரசே ஆராய்ந்து அவருக்கு ஒரு நல்ல பொறுப்பை கொடுக்குமா என்று கேட்கிறது “உன்னத உதகை”.

அழகான சுற்றுலா தலம் நீலகிரி... மலைகளின் அரசி, நன்றி கெட்ட மாவட்டமாக மாறிவிட்டதா... எத்தனையோ சிறந்த பணிகளை செய்த கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவுக்கு, ஒரு பிரிவு உபசார விழா கூட நடத்த முடியாமல் செய்து விட்டார்கள் என்பது வருத்தத்துக்குறியது....

விருந்தோம்பலுக்கு பேர் போன மாவட்டம், நன்றியை மறந்து விட்டதா... அவர் தினமும் வந்து போகும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் கூட...