தொடர்கள்
மருத்துவம்
மனிதனுக்கு, பன்றியின் இதயம் பொருத்தி சாதனை! — ஆர்.ராஜேஷ் கன்னா

20220013121107697.jpg

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சீறுநீரகங்களை இறந்த மனிதனுக்கு பொருத்தி, அது இரண்டு நாட்கள் நன்றாக வேலை செய்ததை, முன்பே ‘விகடகவி’ பிரசுரித்து இருந்தது.

தற்போது பன்றியின் இதயம், மனிதனுக்கு ஜீன் எடிட்டிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக அமெரிக்காவில் மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.

அதற்கு முன்பு, 1997 ஆண்டு அசாம் மாநிலத்தினை சேர்ந்த டாக்டர் தனிராம் பவுரவ் என்பவர், தனது நோயாளிக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சையினை செய்தார். இருதய நோயாளிக்கு பன்றியின் இருதயம் மற்றும் நுரையீரல் வைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

டாக்டர் தனிராம் பவுரவ் உலகளவில் பெயர்பெற்ற இந்திய இருதய மருத்துவர் என்பதால், இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தனது நண்பர் ஹாங்காங் இருதய அறுவை நிபுணர் டாக்டர் ஜொனதன் ஹோ கெய்-சைங் என்பவருடன் இணைந்து தனது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார்.

பன்றியின் இருதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்ட 32 வயதான இருதய நோயாளி, இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்பு 7 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்து, பல்வேறு தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார். இருந்தாலும் இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர் டாக்டர் தனிராம் பவுரவ் என்ற அந்தஸ்தை பெற்றார்.

அசாம் டாக்டர் தனிராம் பவுரவ்வை தனது நோயாளிக்கு இந்திய மருத்துவதுறை அங்கீகாரம் செய்யாத மற்ற உயிரினங்களின் உறுப்புக்களை எடுத்து அறுவை சிகிச்சை செய்த முறைக்காக காவல்துறையினர், இவரையும் இவருடன் அறுவை சிகிச்சையில் உடன் பணியாற்றிய ஹாங்காங் இருதய அறுவை நிபுணர் டாக்டர் ஜொனதன் ஹோ கெய்-சைங் என்பவரையும் கைது செய்து, 40 நாட்கள் சிறையில் அடைத்தது.

அசாம் காவல்துறையினர் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து இறந்த நபரின் உடலில் இருந்த பன்றியின் இருதயத்தையும், நுரையீரலையும் போஸ்ட் மார்ட்டம் முலம் எடுத்து தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி உறுதி செய்தது.

20220013121145519.jpg

1984 ஆண்டு, இருதய நோயால் பாதிக்கப்பட்ட இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு ‘பபூன்’ வகை குரங்கின் இருதயம் எடுத்து, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், குழந்தை பபூன் வகை குரங்கின் இதயத்தோடு 21 நாட்கள் வாழ்ந்து உயிரிழந்தது.

அதன் பிறகு, இது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள், விலங்குகளின் உறுப்புகளில் இருக்கும் ஒருவித சர்க்கரையை, மரபணு சோதனையின் முலம் மாற்றினால், விலங்குகளின் உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்யும் போது மனித உடலில் எவ்வித நோய் தொற்றையும் ஏற்படுத்தாது என்றும் அறுவை செய்து பொருத்தப்பட்ட மாற்று உறுப்புகள் ரிஜக்ட ஆகாது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிதனர்.

தற்போது... அமெரிக்க - மேரிலேண்ட் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பன்றியின் இதயத்தினை தெர்ந்தேடுத்து அதனை ஜீன் – எடிட்டிங் முறையில் பன்றியின் உடலில் இருந்த ஒரு வித சர்க்கரையை அகற்றினர். இந்த முறையினால், பன்றியின் இருதயம் மாற்று அறுவை சிகிச்சை முலம் மனிதனுக்கு பொருத்தினாலும், ரிஜக்ட ஆகாது என்று கண்டறிந்தனர்.

20220013121245307.jpg

57 வயது அமெரிக்கரான டேவிட் பென்னட் என்பவருக்கு, மருத்துவ காரணங்களால் மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவர் என மருத்துவர்கள் தீர்மானித்தனர். எப்படியாவது டேவிட் பென்னட்டை காப்பாற்ற வேண்டுமென்று அவரது குடும்பத்தினர் மருத்துவர்களிடம் வேண்டினர்.

டேவிட் பென்னட்டுக்கு ஜீன் – எடிட்டிங் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தினை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை முலம் பொருத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஜனவரி 1 தேதி அனுமதியளித்து, சென்ற வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது.

பன்றியின் உடலுறுப்புகளை மனித உடல் ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை நீக்கி உள்ளனர். பன்றியின் இதய திசுவின், தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் நீக்கி உள்ளனர். பன்றியின் 10 மரபணுக்களை ஜீன் எடிட்டிங் செய்து, இது மனித உடல் ஏற்கும்படி விஞ்ஞானிகள் மாற்றி அமைத்துள்ளனர். இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் பன்றியின் இதயத்தினை டேவிட் பென்னட்டுக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை முலம் பொருத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின், பன்றியின் இதயத்துடன் டேவிட் பென்னட், கடந்த ஒரு வாரமாக கருவிகள் உதிவியின்றி மருத்துவமனையில் நார்மலாக சுவாசித்து வருகிறார். இது மருத்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

20220013121332419.jpg

தற்போது... அமெரிக்காவில், விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த பல பயோ டெக் கம்பெனிகள் களத்தில் இறங்கி, மனிதர்களுக்கு தேவையான உறுப்புக்களை ஜீன் – எடிட்டிங் மூலம் உருவாக்கி வருகிறது.

20220013121414484.jpg

அமெரிக்கா முழவதும் சென்ற வருடம் 3800 இதய மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நடந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நாள்தோறும் 17 பேர், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். தற்போது விலங்குகளின் உடல் உறுப்புகளை ஜீன் - எடிட்டிங் முலம் மாற்றி வளர செய்து மனிதர்களுக்கு பொருத்தினால், பலர் தங்கள் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் நவீன மருத்துவத்தில், விலங்குகளின் உடல் உறுப்புக்களை ஜீன் எடிட்டிங் எனும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களுக்கு அவரச கோலத்தில் அறுவை சிகிச்சை செய்து பொருத்துவதற்கு, அமெரிக்காவிலுள்ள சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எது எப்படியோ, இனி யாரையும் பன்றி மனிதா என்று கூப்பிட முடியாது என்பது தான் நிதர்சனம்.