தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220013162957243.jpeg


செயல் வினை - பா.அய்யாசாமி

செயல்வினை கதை மூலம் ஒருவருக்கு பயனளிக்கும் ஒரு விஷயம், அதுதொடர்பாக மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்த்தியது. முடிவு சுபம்!

வசந்தி வாசுதேவன், வளசரவாக்கம்


மறு வாசனை... - 22 - அய்யாசாமி

மறுவாசனை தொடர்கதையை மாறாத மகிழம்பூ வாசனையாக மாற்றிவிட்டார் அய்யாசாமி. மிகச் சிறப்பு!

வாணி பகவதி, திருவள்ளூர்


அனாதை குழந்தைகளின் தாய் மரணம் - மாலாஸ்ரீ

அனாதை குழந்தைகளின் தாய் மரணம் செய்தி நெகிழ வைத்தது. இதுபோன்ற நடமாடும் தெய்வங்கள் இருப்பதாலேயே, இன்றளவும் மக்களிடையே மனிதநேயம் ஒளிர்கிறது.

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


செவிலியரை காப்பாற்றிய வயாக்ரா! - மாலாஸ்ரீ

வயாக்ரா என்றாலே ஒருமாதிரி நினைக்க தோன்றும் நிலையில், அதை வைத்து ஒரு உயிரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தது பாராட்ட வேண்டிய விஷயம். நல்லதொரு பலன்!

கங்காதேவி, குமரேசன், வில்லிவாக்கம்


வாவ் வாட்ஸப்!

வாட்ஸ் அப் படங்களில் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது, இப்படியும் எக்சர்சைஸ்! அடுத்தடுத்து எல்லா படங்களுமே செம கலக்கல்! கீப் இட் அப்!

கௌஷிக், தீக்ஷிதா, அட்சயா, சென்னை


ஊஞ்சல் - கி. ரமணி

ரமணியின் ஊஞ்சல் கதை மறக்க முடியாத மிக அற்புதமானவை. காலத்தால் அழிக்க முடியாத பல்வேறு நினைவுகள், மீண்டும் நம்மை வந்தடையும் என்பதை எடுத்துக் காட்டியது.

ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை


“யுகம் கடந்து… முக்தி!” - வெ.சுப்பிரமணியன்

Just read the short story on yuham kadandhu mukthi. Starting with coma thatha, bringing pithaa magar Bishma story, and ending with thatha signing the will in favour of five grand sons, is thoughtfully knitted and completed the story. Well edited and presented! Finally the the nyayam and dharmam is exposed neatly.

ராஜாமணி சூரியா காரைக்குடி.


“ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பு...” - ஸ்வேதா அப்புதாஸ்

ரயில்வே மற்றும் வனத்துறை உள்பட எந்தவொரு அரசு துறையும் மக்களுக்கோ அல்லது யானை போன்ற உயிரினங்களை பாதுகாக்கவோ எவ்வித நவீன திட்டங்களை செயல்படுத்தாது. ஆனால், நடைமுறை செலவினங்கள் என ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யும். இது தொடர்கதையே... என்றும் தீர்வே கிடையாது!

வத்சலா வரதராஜன், வியாசர்பாடி


மிடில் பெஞ்ச் - 8 - இந்துமதி

இந்துமதியின் மிடில் பெஞ்ச் தொடர்கதை படிக்க படிக்க விறுவிறுப்பாக இருந்தது. மிக அருமை.

ரேணுகா ஹரிஹரன், பெங்களூர்


“யுகம் கடந்து… முக்தி!” - வெ.சுப்பிரமணியன்

யுகம் கடந்து முக்தி சிறுகதை மிக மிக சிறந்த வழிகாட்டி. மண்ணாசை, பெண்ணாசையால் செய்யும் தவறுகள், அடுத்த ஜென்மத்திலும் தொடரும் என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டியது.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


காதல் நூலகம் - சி. கோவேந்த ராஜா.

அடடே... காதல் நூலகம் ஹைக்கூ கவிதை நல்லாயிருக்கே! கோ திஸ் வே ராஜா...

ஶ்ரீகவி ராம்சுந்தர், சிவகங்கை


கொரோனோ தடுப்பூசி சாதனை மன்னன் பிரோமோதியோ மண்டல்…! -ஆர்.ராஜேஷ் கன்னா

இங்க ஒரு தடுப்பூசி குத்த ஆட்களை தேடவேண்டி இருக்கு. அவனவன் மரத்து உச்சியில் உட்கார்ந்து ஆட்டம் காட்டுறான்! இந்த மனுஷன் 11 ஊசி போட்டுட்டு 12வதுக்கு அடம்பிடிக்கிறான். அடப்பாவி..!

மாயா குப்புசாமி, ராள்ளப்பாடி, ஆந்திரா


"கவர்னரின் பர்சனல் ஊட்டி விசிட்!..." - ஸ்வேதா அப்புதாஸ்

ஏனுங்க... ஊட்டிக்கு கவர்னர் விசிட் அடிச்சா எல்லாருக்கும் பிரச்னைனு சொல்றீங்க. இதுவரைக்கும் எங்க ஊருக்கு எந்த கவர்னரும் வந்ததில்லை. இவரையாவது வரச் சொல்லுங்க. அவரை கண்மாய் கரையில் நிற்கவெச்சு கொண்டாடுறோம்!

ராஜசுலோசனா, திலகவதி, கருப்பாயூரணி


ஊஞ்சல் - கி. ரமணி

கடைசி வரி படித்தவுடன் அம்புஜம் பாட்டி மனதில் வந்து "நான் உண்மையைத்தான் சொன்னேன், பைத்தியமில்லே" என்று சொன்னார்.....


கொரோனாவுக்கு ஆப்பு வைக்கும் புதிய மருந்து... - தில்லைக்கரசிசம்பத்

கொரோனா தொற்றை தடுக்க, புது மாத்திரை கண்டுபிடிச்சிட்டாங்களா?! அம்மா, தாயே.. நீங்க குடும்பத்தோடு நோய்நொடியின்றி நீண்ட காலம் வாழணும். இனிமே, 'அடேய் கொரோனா..! நீ மண்டையை மாத்திக்கிட்டு வந்தாலும், உன் கொண்டையை மறைக்க முடியாது' என மாமனார் மண்டையை தட்டலாமா?!

ராதாகிருஷ்ணன், ராதா வெங்கட், சித்தூர், ஆந்திரா


“யுகம் கடந்து… முக்தி!” - வெ.சுப்பிரமணியன்

அற்புதமான கற்பனை. அருமையான நடை. ஆச்சர்யப்பட வைக்கும் வார்த்தை பிரயோகங்கள். நல்லதொரு படைப்பு. வாழ்க!


சங்கீத ஆலாபனை - மாயவரத்தான் சந்திரசேகரன்

சங்கீத சீசனில் கர்நாடக இசை பாடல்களுடன் பல்வேறு சமூக அவலங்களை, விவசாயிகளின் வாழ்க்கை போராட்டங்களை பிரபல பாடகர்கள் பாடி மக்களுக்கும் அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே! இது தேசத்துரோக குற்றம் ஆகாது.

பத்மாவதி, சுகுணா, வந்தவாசி


ஆளுநர் - அமித்ஷா - ஸ்டாலின் கண்ணாம்பூச்சி ஆட்டம்...

மத்திய அரசிடம் இருந்து நீட் தேர்வு விலக்கு கிடைக்காது எனத் தெரிந்திருந்தும், தமிழக மக்களின் காதில் திமுக அரசு பூ சுற்றுகிறது! இதை விடுத்து, நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முன்னிலையில் வருவதற்கு தமிழக அரசு உதவலாமே?!

சாம்பசிவம், மருதாசலம், துவரங்குறிச்சி


இணையதள கல்வி என்ற ஏட்டு சுரக்காய்... - விரிவான அலசல்

நம் நாட்டில் இணையவழி கல்வி என்பது, கொரோனா வந்ததுக்கு பிறகுதானே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகமானது?! பிறகு எப்படி அதன்மூலம் பாடம் நடத்தவோ, புரிந்து கொள்ளவோ முடியும்? நம்முடைய கல்வி பாடத்திட்டம் நவீனமாக மாறவேண்டும்!

சுஜிபாலா, ஸ்டெல்லா, நாகர்கோவில்


வலையங்கம்

பயிர் வகைகள் நடவு முதல் அறுவடை வரை நவீன இயந்திரங்களை வைத்து விவசாயிகள் வேலை பார்த்தாலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் வெட்டவெளியில் இருந்தால் உணவு பொருட்கள் வீணாகிறதே? விவசாயிகளை நசுக்கினால் பூமியெங்கும் பசுமையே இராது!

ராஜாராமன், புருஷோத்தமன், செங்கல்பட்டு


செயல் வினை - பா.அய்யாசாமி

very cinematic!


ஊஞ்சல் - கி. ரமணி

கடந்த சில வாரங்களில் இது இரண்டாவதாக ஒரு நல்ல படைப்பு. பாராட்டுக்கள்!

பார்க்கவன்


சங்கீத ஆலாபனை - மாயவரத்தான் சந்திரசேகரன்

தொற்றுக்கு தப்பித்த பின் அடுத்த வருட விழாவுக்காக காத்திருக்கவும்! பார்க்கவன்


வலையங்கம்

கூலி கொடுத்து கட்டுபடியாகவில்லை என்ற நிலையில இயந்திர மயமாக்கப்பட்டது தவிர்க்க முடியாத ஒன்று. தானியங்களை மழை,மற்ற நாசங்களிலுருந்து இருந்து சேமிக்க, பாதுகாக்க கிடங்கு வசதி தேவையானது என்று சிந்திக்க இயலாதவர்களா ஆட்சியர்கள்?


ஊஞ்சல் - கி. ரமணி

கதை ஓட்டம் காலசசக்கர சுழற்சியோடு மிக நன்றாக பின்னப்பட்டுள்ளது.. பொன் ஊஞ்சல்!!

கே. ஸ்ரீனிவாசன், சென்னை


இணையதள கல்வி என்ற ஏட்டு சுரக்காய்... - விரிவான அலசல்

இங்க வட அமெரிக்காவிலும் கடந்த வருடம் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கல்வி இணைய வழியாகத் தான். மோசமானதாக இருக்கவில்லை என்று அறிகிறேன்.

பார்க்கவன்