தொடர்கள்
நொறுக்ஸ்
கருத்து கதிர்வேலன்

20220013115410918.jpeg

பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

தேர்வு உண்டு என்றால் மட்டுமே செய்தியாக போடலாம்


இன்று முதல் நாலு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்

இது மக்களுக்கான அரசு அப்படித்தான் இருக்கும்


முழு ஊரடங்கு அம்மா உணவகங்களை கவர்ந்த கூட்டம்

இப்படி எல்லாம் மக்கள் செய்தால் இருட்டு புட்டு தான் செய்வார்கள்


முதல்வர் வேட்பாளரை ஆளும் காங்கிரஸ் அறிவிப்பதில் சிக்கல்...

அறிவித்தாலும் சிக்கல்தான்


திமுக அரசு சொந்த செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - எடப்பாடி அறிக்கை

இதற்கு அறிக்கை ராஜேந்திரபாலாஜி கேட்டாலே சொல்லியிருப்பாரே


வளர்ந்த நாடுகளுக்கு ஒப்பிட்டு தமிழ் நாட்டை மேம்படுத்த வேண்டும் - முதல்வர்

நாம் தமிழ்நாடு தானே வேற நாட்டோடு தான் ஒப்பிட்டு பேச முடியும்


11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்... - அமைச்சர் முருகன்

முதலில் பிரசாதம் கைக்கு வரட்டும் அமைச்சரே


திமுக ஆட்சி என்றாலே கமிஷன் தான் - எடப்பாடி

ஒ... உங்க ஆட்சியில் இதெல்லாம் இல்லையா


எல்லா கட்சிகளுக்கும் முன்மாதிரியாக இருக்கிறது பாரதிய ஜனதா - அண்ணாமலை

உத்திரப்பிரதேசத்தில் அப்படி தெரியலையே தலைவரே


நீட் பிரச்சனை இந்தியா முழுவதும் இருக்கிறது - அமைச்சர் மா சுப்ரமணியம்

ஆனால், நீங்கள் எல்லா மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதினீர்கள், ஒருத்தர் கூட பதில் போடவில்லையே.