தொடர்கள்
விகடகவியார்
பொங்கல் பரிசு குளறுபடிகள்... - விகடகவியார்

தமிழக அரசு, பொங்கல் பரிசாக பை, கரும்பு உட்பட இருபத்தி ஒரு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியது. சென்ற ஆட்சியில் நான்காயிரம் ரூபாயுடன் 14 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசு பொருட்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் பை வழங்கப்படவில்லை.

பரிசுப் பொருட்கள் கவரில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. இதைk குற்றச்சாட்டாக அதிமுக சொல்லி வருகிறது. உருகும் வெல்லம், சொத்தை விழுந்த கரும்பு, மாவாக இருக்கும் ரவை, நமத்துப் போன முந்திரி என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. சில இடங்களில் பொருட்கள் குறைவாக தருவதாக புகார். கேட்டால், ஊழியர்கள் அவர்களை மிரட்டுகிறார்கள் என்பதும் மக்கள் கருத்து.

இதுபற்றி ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்... எங்கும் தமிழ், எதிலும் தமிழ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காட தமிழ், இந்தியா ஆட்சி மொழிகள் தமிழ், தமிழ் அர்ச்சனை, இருமொழிக் கொள்கை இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று தமிழ் மீது பற்று உள்ளவர்கள் போல் காண்பித்துக் கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் உங்கள் தொகுப்பில் உள்ள பொருட்களை வடமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்திருக்கிறது. அwத பொட்டலங்களில் ஹிந்தி வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காதது என்று பொதுமக்களின் ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் இந்த அரசு சம்பாதித்துக் கொண்டுவிட்டது.

இது தவிர... கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், திமுக கட்சியை சேர்ந்தவர்கள், அந்தk கரும்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு நியாய விலை கடை விற்பனை செய்திருக்கிறார்கள். இதுபற்றியும் விவசாயிகள் குமுறுகிறார்கள்.

அதிமுக ஆட்சியில்... பொங்கல் திருநாளுக்கு 14 பொருட்களும், 4000 ரொக்கமும் வழங்கியது. அப்போது இதுபோன்ற விமர்சனம் எல்லாம் வரவில்லை என்பதும் உண்மை.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்தபோது, இரண்டரை டன் வெல்லம் தரமானதாக இல்லை என்று வெள்ளம் வழங்குவதை ரத்து செய்திருக்கிறார்.

ஆனால் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அதிமுக தலைவர் சொல்வதெல்லாம் பொய் என்று ஒரே வரியில் பிரச்சனையை முடித்து விட்டார்.

20220013204116683.jpg

ஆனால் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்று சொன்னார். இது தவிர... முதல்வரே, சென்னையில் பல நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்தார். இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதோ என்னவோ...