இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் இன்றுடன் (14-ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக கே.சோம்நாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சோம்நாத், கொல்லத்தில் டி.கே.எம் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பின்னர், பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் பட்ட மேற்படிப்பை முடித்தார். கடந்த 1985-ம் ஆண்டு திருவனந்தபுரம், வலியமலாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (விஎஸ்எஸ்சி) சேர்ந்த சோம்நாத், படிப்படியாக உயர்ந்து அதன் இயக்குநராக பணியாற்றி வந்திருக்கிறார்.
இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்கும் சோம்நாத், கேரள மாநிலத்தை சேர்ந்த 4-வது நபர். முன்னதாக, கேரளாவை சேர்ந்த கஸ்தூரிரங்கன், மாதவன் நாயர், கே.ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் இஸ்ரோ அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment
Upload