மைக்கேல் படத்தில் வரலட்சுமி சரத்குமார்
சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் ‘மைக்கேல்’ இது ஒரு பன்மொழி இந்திய திரைப்படம் தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். கௌதம் வாசுதேவ மேனன் வில்லனாக நடிக்கிறார் தற்போது வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
பீஸ்ட் நூறாவது நாள் படப்பிடிப்பு
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய் பூஜை சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கதையின் மற்ற பகுதியின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். நூறாவது நாள் படப்பிடிப்பில் விஜய் நெல்சன், பூஜா கிங்ஸ்லே உட்பட அனைவரும் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
லாட்டரி கதை
வேதா பிக்சர்ஸ் தயாரிக்கும் அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். கேரளா லாட்டரியை மையமாக கொண்டு ‘பம்பர்’ படம் கதை இருக்குமாம். ‘பம்பர்’ படத்தில் ‘8 தோட்டாக்கள்’ நாயகன் வெற்றி கதாநாயகன், சிவானி நாயகி. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு எரிமேலி மலையிலிருந்து சபரிமலை செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.
இதெல்லாம் இவர்களுக்கு
சன் டிவி சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய படங்கள் பட்டியல் இதோ...
‘பீஸ்ட்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘விஜேஎஸ் 46’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அயலான்’, ‘டீ ப்ளாக்’, ‘ஊமை விழிகள்’, ‘காசேதான் கடவுளடா’, ‘நான்சி’, ‘பன்னிக்குட்டி ராங்கி’ ஆகிய படங்கள்.
ஜீ தமிழ் சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய படங்கள் பட்டியல் இதோ...
‘வலிமை’, ‘ராதே ஷ்யாம்’, ‘வீரமே வாகை சூடும்’, ‘தமிழரசன்’, ‘கே ஜி எஃப் 2’, ‘யானை’, ‘எஸ் வி சி 50’, ‘அஜித் 61’ ஆகிய படங்கள்.
பொங்கல் வசூல் கம்மிதான்
எப்போதும் தீபாவளி ரிலீஸ் படங்கள் வசூலை அள்ளும். பொங்கல் ரிலீஸ் படங்கள் அவ்வளவாக கல்லா கட்டாது, இதுதான் உண்மை. ஆனால், இந்த முறை தீபாவளி படமே பெரிதாக பணம் பார்க்கவில்லை. பெங்கலுக்கு அதுவும் மோசம். சசிகுமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, பிரபுதேவா நடித்த ‘தேள்’, விதார்த் நடித்த ‘கார்பன்’, காமெடி நடிகர் சதீஷ் நடித்த ‘நாய் சேகர்’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. பல இடங்களில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க காட்சியை ரத்து செய்தார்கள். வெளியான படங்களில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘தேள்’ இதுமட்டும் கொஞ்சம் வசூல் பார்த்தது. தமிழ் சினிமாவிற்கு ஏதோ தோஷம் இருக்கு, பரிகாரம் தெரிந்தால் சொல்லுங்கோ செய்திடலாம்.
Leave a comment
Upload