தொடர்கள்
பொது
கடலில் வந்த தங்கத் தேர் - மாலா ஶ்ரீ

20220413230524537.jpeg

அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்காள விரிகுடா கடலில் அதிதீவிர ‘அசானி’ புயலாக மாறி, ஆந்திரா-ஒடிசா மாநில கடற்பகுதியில் கரையை கடந்தது.

சுவாரஸ்யமான ஒரு செய்தி, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில் கடந்த 11-ம் தேதி இரவு தங்க நிறத்திலான தேர் ஒன்று வங்காள விரிகுடாவில் மிதந்து வந்தது. இதை அதிசயமாக பார்த்த அப்பகுதி மீனவர்கள், அந்த தங்க தேரை கரைக்கு இழுத்து வந்தனர்.

தகவலறிந்ததும் கடலோர படையினர் விரைந்து வந்து, அந்த தங்க தேரை ஆய்வு செய்தனர். இந்த தேரில் வினோதமான மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அது கம்போடியா, இந்தோனேஷியா அல்லது மியன்மார் போன்ற நாட்டிலிருந்து புயலில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

ஒரு வேளை இதை திருப்பி அனுப்புவதாக இருந்தால் எப்படி ஓட்டிக் கொண்டே போவார்களோ ???