கிடைத்தால் தான்...
வரம் அழகு...!
பெற்றால் தான் ...
வெற்றி அழகு...!
பறந்தால் தான் ..
சிறகு அழகு...!
பயனுள்ளதாய்
பயன்படுத்தினால் தான் ..
நேரம் அழகு...!
இனிமையாய்...
நகர்த்தினால் தான்...
காலம் அழகு...!
நல் விருப்பங்களால்...
நிறைந்தால் தான்
மனம் அழகு...!
கடைபிடித்தால் தான்...
மௌனம் அழகு...!
உழைத்தால் தான்...
உயர்வு அழகு...!
பொறுத்தால் தான்...
பொறுமை அழகு...!
செம்மையாக்கினால் தான்
செயல் அழகு...!
செதுக்கினால் தான்...
சிலை அழகு...!
செழிப்பாக்கினால் தான்...
நிலம் அழகு...!
இயல்பாய் இருந்தால் தான்...
இயற்கை அழகு...!
பொழிந்தால் தான்...
நிலவு அழகு...!
மொழிந்தால் தான்...
மொழி அழகு...!
காத்தால் தான்...
காதல் அழகு...!
மகிழ்வு இருந்தால் தான்...
வாழ்க்கை அழகு...!
என் அருகில் நீ இருந்தால் தான்...
இவ் வுலகமே அழகு....!!
தொடர்கள்
கவிதை
Leave a comment
Upload