தொடர்கள்
அனுபவம்
மகாராஷ்டிரா மர்மங்கள்-விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20220602080001601.jpg

நன்றி :தினமணி

மகாராஷ்டிராவில் 2019ல் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பாரதி ஜனதா சிவசேனா கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி என்று சொல்லி விட முடியாது. அது கொள்கை கூட்டணி இந்துத்துவ கூட்டணி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கூட்டணி பால்தாக்கரே காலத்தில் உருவாகியது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்த கூட்டணி தொடர்ந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் உத்தவ் தாக்கரே மனதை மாற்றியது. நாம் ஏன் ஆட்சி அமைக்க கூடாது என்ற ஆசை வந்தது. பால்தாக்கரே காலத்தில் சிவசேனா ஆட்சி அதிகாரத்துக்கு பெரிதாக ஆசைப்படாது. ஆனால் பால்தாக்ரேக்கு பிறகு கட்சியை பொறுப்பேற்று நடத்திய உத்தவ் தாக்கரே முதல்வராக ஆசைப்பட்டார். தேர்தல் முடிவுக்குப் பிறகு தனது எண்ணத்தை வெளியிட்டபோது பாரதிய ஜனதா அதை ஏற்க மறுத்து விட்டது. சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 56.

பாரதி ஜனதா சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 106. எல்லா வகையிலும் கூடுதல் பலம் பெற்ற பாரதிய ஜனதா ஆட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் சரத்பவார் கொஞ்சம் யோசனை செய்தார். எனவே அவர் சிவசேனா பாரதிய ஜனதா இரண்டு கட்சித் தலைவர்களுடன் பேசினார் . பிரதமர் மோடியிடம் ஆட்சி அமைப்பது பற்றி சில திட்டங்களை சொன்னார். ஆனால் மோடி சரத்பவார் கோரிக்கையை ஏற்கவில்லை. வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது ஆட்சி அதிகாரம் பற்றி எல்லாம் பேசவில்லை. விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசினேன் என்று மழுப்பினார்.

அதன் பிறகு மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி மூவரும் சேர்ந்து ஆட்சி அமைத்தார்கள். உத்தவ் தாக்கரே ஆசைப்பட்டபடி முதல்வரானார். துணை முதல்வராக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி பதவியேற்றார்.

முதல் ஓராண்டு சுமுகமாக ஆட்சி நடந்தது. போகப்போக காங்கிரஸ் கருத்து உத்தவ் தாக்கரே கருத்து ஆதித்யா தாக்கரே தலையீடு சரத்பவார் சமாதானம் என்று பிரச்சனை மெல்ல தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் உத்தவ் தாக்கரே பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் சிவசேனா தொண்டர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால் இதை வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், மாமூல் வசூலிக்க நிர்பந்தம் என்று மகாராஷ்டிரா அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. மேலும் அமைச்சர்கள் நவாப் மாலிக், அணில் தேஷ்முக் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இது சிவசேனா எம்எல்ஏக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது எல்லாம் கட்சிக்கு ஒரு பின்னடைவு என்ற நோக்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்க்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் சில மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் சில அமைச்சர்கள் உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து நாம் மத்திய அரசிடம் சுமுகமாக இருப்போம் அப்போது தான் நாம் அமைதியாக ஆட்சி நடத்த முடியும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் உத்தவ் தாக்கரே அவர்கள் கோரிக்கையை எல்லாம் ஏற்கவில்லை. அதன் விளைவுதான் ராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற மேலவை தேர்தலில் சிவசேனா அனுபவித்தது. பாரதிய ஜனதா தங்களுக்கு வேண்டிய இடங்களை சுலபமாக கைப்பற்றியது. அதில் பாரதிய ஜனதாவின் தந்திரமான நரித்தனம் வெளிப்பட்டது.

மேலவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மாலை பல சட்டமன்ற உறுப்பினர்களை காணோம். அவர்களின் செல்பேசியும் செயலிழந்து இருந்தது. மறுநாள் காலையில்தான் 30 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சூரத்தில் இருந்து கொண்டு உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது தெரிந்தது. உத்தவ் தாக்கரேவிற்கு உண்மையில் இது அதிர்ச்சி. நேரில் வாருங்கள் பேசலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் கோரிக்கை பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து அமைச்சரவை என்பதுதான் இதை ஏற்க மறுத்தார். உத்தவ் தாக்கரே அப்போதே அவருக்கு தன் கையை விட்டுப் ஆட்சி போக இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. அதனால் தான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி தங்கள் சொந்த வீட்டுக்கு குடி புகுந்தார்.

உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளராக இருந்த கட்சி நிர்வாகிகளும் கிட்டத்தட்ட ஷீண்டடேவின் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். சிவசேனா கட்சியின் மொத்த எம்பிக்கள் 18 பேர் அதில் 16 பேர் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள். அவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட பெரும்பாலான தொண்டர்கள் நாம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைப்பது என்று தான் விரும்புகிறார்கள். எனவே நாம் அவர்களுடன் பேசுவோம் நாங்கள் இப்படி சொல்வதால் உங்களை விட்டு நாங்கள் செல்வோம் என்று அர்த்தமல்ல நாங்கள் உங்கள் விசுவாசிகள் எங்கும் போக மாட்டோம் பாரதிய ஜனதாவுடன் கூட்டு பற்றி யோசியுங்கள் என்று வலியுறுத்தினார்கள். இதெல்லாம் உத்தவ் தாக்கரேவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் பாரதிய ஜனதாவுடன் பேச தயாராக இல்லை.

பால்தாக்ரே காலத்தில் சிவசேனா கட்சியில் அவரை யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள். அதேசமயம் அவர் முக்கிய முடிவுகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்க மாட்டார். எல்லோரிடம் யோசனை கேட்பார் இறுதியில் அவரே முடிவு செய்வார். கிட்டத்தட்ட அந்த முடிவு சரியாகத்தான் இருக்கும்.

பால்தாக்கரே விற்கு பிறகு உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். அப்போதே அவர் மகன் ஆதித்யா தாக்கரே ஆதிக்கமும் வரத்தொடங்கியது. ஆதித்யா தாக்கரே என் இலாகாவில் தலையிடுகிறார். என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று ஷிண்டே பலமுறை புகார் சொல்லியிருக்கிறார். ஆனால் அவற்றையெல்லாம் உத்தவ் பெரிதுபடுத்தவில்லை. அதன் விளைவுதான் இப்போது அனுபவிக்கிறார்.

இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்த பின் தான் கடைசியாக மூக்கை நுழைத்தது.முதல் கட்டமாக ஷீண்டே ஆதரவு. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு. அசாம் தங்கும் விடுதியில் காவல்துறை கண்காணிப்பு. அசாம் பாரதிய ஜனதா அமைச்சர்கள் சந்திப்பு. இதைத்தொடர்ந்து தான் முன்னாள் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்ஷீண்டேவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன்பிறகு அமித்ஷா பேசினார்.

இதைத்தொடர்ந்து காட்சிகள் மளமளவென மாறின. கௌஹாத்தியிலிருந்து எம்எல்ஏக்கள் கோவாவில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பிறகு ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம், உத்தவ் தாக்கரே ராஜினமா என்று எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. அப்போது திடீர் திருப்பமாக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கொண்ட பாரதிய ஜனதா முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்லி சிவசேனாவின் ஷீண்டே முதல்வராக பதவி ஏற்றார். ஏற்கனவே முதல்வராக இருந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார். அதாவது சிவசேனா ஆட்சி பாரதிய ஜனதா கவிழ்க்க வில்லையாம் சிவசேனா முதல்வர்தான் மாறியிருக்கிறார். இப்படி ஒரு கணக்கை சொல்லிக் நல்ல பெயர் சம்பாதிக்க முயற்சிக்கிறது பாரதிய ஜனதா.

பீகாரில் 2020 சட்டமன்ற தேர்தல் நித்திஷ் குமார் கட்சியுடன் பாரதிய ஜனதா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக நிதீஷ்குமார் அறிவிப்பு. ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரியானது. நிதிஷ் குமாரை விட அதிக இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றியிருந்தது. ஆனாலும் நாங்கள் ஏற்கனவே சொன்னபடி நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று அவரை பதவியேற்க, செய்தது இப்படி சில சமயம் பாரதிய ஜனதா ரொம்பவும் நல்லவர் போலும் காண்பித்துக் கொள்ளும்.

சிவசேனா கட்சியை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அது ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பால்தாக்ரே எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது என்பார். அது உண்மைதான். தேர்தலில் அவர் கட்சியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கூட பால்தாக்ரேவை விமர்சித்துப் பேச மாட்டார்கள் அது ஒரு மாதிரியான பயம் மரியாதை.

சிவசேனாவின் அதிகாரபூர்வமான இதழ் சாம்னா இதில் வெளியாகும் தலையங்கம் பால் தாக்கரேவின் குரலாக கருதப்படும் எனவே சாம்னா தலையங்கம் பல பத்திரிக்கைகள் மொழிபெயர்த்து. பால் தாக்கரே கருத்து இது என்று வெளியிடுவார்கள் அதை ஒட்டி எதிர்க்கட்சிகள் கருத்தும் இருப்பது உண்டு. இப்படியெல்லாம் கட்சியைக் கட்டிக் காத்தார் பால்தாக்கரே. இந்துத்வா கொள்கையில் பாரதிய ஜனதாவை விடஅதிக தீவிரம் காட்டியது சிவசேனா கட்சி தான். பாபர் மசூதி இடிப்புக்கு பாரதிய ஜனதாவை விட அதிக கரசேவகர்கள் அனுப்பியது சிவசேனா. பாபர் மசூதி அந்த கூண்டை இடித்துத் தள்ளியது கூட சிவசேனா கரசேவகர்கள் தான். பாரதிய ஜனதா பற்றி தேவையற்ற கருத்துக்களை உத்தவ் தாக்கரே சொன்னதற்கான விலைதான் இந்த ஆட்சி இழப்பு அடுத்த குறி கட்சிதான் அதையும் ஷிண்டே எப்படி கைப்பற்ற வேண்டுமென்று வியூகம் அமைத்து தரும் பாரதிய ஜனதா.

அதற்குப் பின்பு அவர்களது தலையாட்டி பொம்மை வரிசையில் இன்னொரு புதுவரவு வரும் இதெல்லாம் பாரதிய ஜனதாவுக்கு ஒரு விஷயமே இல்லை.